பொது செய்தி

தமிழ்நாடு

ஆக.,16 இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு

Updated : ஆக 08, 2019 | Added : ஆக 08, 2019 | கருத்துகள் (14)
Advertisement
அத்திவரதர், தரிசனம், காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் நடக்கும் அத்திவரதர் வைபவத்தில் ஆக.16ம் தேதி இரவு அல்லது ஆக.17 அதிகாலையுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறும் எனவும், 17 ம் தேதி முதல் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் கூறினார். அதாவது, முன்பு அறிவிக்கப்பட்டதற்கு மாறாக ஒரு நாளைக்கு முன்பே, அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்பட உள்ளது.

இது குறித்து கலெகடர் பொன்னையா கூறுகையில், வரும் 17 ம் தேதி அத்திவரதர் சிலையை குளத்திற்குள் வைக்க ஆகம விதிப்படி சடங்குகள் நடக்க உள்ளன. இதனால், 17 ம் தேதி அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 16 ம் தேதி இரவுடன் அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படும். 16 ம் தேதி இரவில் கோவிலுக்குள் இருப்பவர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள். உள்ளூர் மக்கள், 5,6,7 முறை அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இதுவரை 70.25 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். நேற்று (ஆக.,7) மட்டும் 3.50 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, அத்திவரதர் தரிசனம், ஆக., 17 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் குடி மகன் என்னால் பார்க்க முடியவில்லையே !!!
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
08-ஆக-201916:58:17 IST Report Abuse
arabuthamilan திரு அல்போன்ஸ் அவர்களே ,. அத்தி எப்போ உங்களுக்கு ஆண்டவரானார்?
Rate this:
Share this comment
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
08-ஆக-201919:15:41 IST Report Abuse
A.George Alphonseமனிதன் தான் என் ஆண்டவன் உன் ஆண்டவன் என்று உம்மை போல் வேறு படுத்தி சொந்தம் கொண்டாடுகிறான். ஆனால் ஆண்டவனுக்கு அவர் படைத்த மக்கள் எல்லோருமே சமம்தான் அரபு தமிழா.Try to understand my philosophy....
Rate this:
Share this comment
Krishnamoorthy - chennai,இந்தியா
08-ஆக-201919:40:09 IST Report Abuse
KrishnamoorthyMr. Alphonse is a very sensible person his views are well balanced and neutral....
Rate this:
Share this comment
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
09-ஆக-201901:11:56 IST Report Abuse
Rasu Kuttyஅல்போன்ஸ் சாரின் கமெண்ட்ஸ் எப்போவுமே ஒருதலை பட்சமாக இருந்ததில்லை... வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் சார்.. He is a very sensible and neutral person...
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
08-ஆக-201915:24:13 IST Report Abuse
vnatarajan குளத்திற்குள் அத்தி வரதரை மறைத்து வைப்பது என்ற முடிவை மனிதர்கள்தான் நிச்சயப்படுத்துகிறார்கள். திருப்பதி வெங்கடாசலபதியைப்போல் நிரந்தரமாக அவரை வெளியில் வைத்தால் மக்கள் எந்நேரமும் எக்காலத்திலும் தரிசனம் செய்யலாம். அந்த சிலை அத்தி மரத்தால் செய்யப்பட்டது என்றால் சிவலிங்கத்திற்கு தலைக்கு மேல் தண்ணீர் தாரை வைப்பதுபோல் தண்ணீர் தாரை எந்நேரமும் வைத்து அந்தசிலைக்கு பாத்து காப்பு கொடுக்கலாமே. அதற்கென்று வேறு தைலங்கள் எண்ணெய்கள் இருந்தால் அதை தினம் பூசி சிலையை பாதுகாக்கலாமே நாடு மற்றும் மக்கள் நன்மைக்காக சிந்தித்து செயல்படுவது நல்லது. ஏனென்றால் பல வருடங்களாக சிலை வெளியில்தான் இருந்தது என்று கூறுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X