குலாம் நபி வெளியேற உத்தரவு

Updated : ஆக 08, 2019 | Added : ஆக 08, 2019 | கருத்துகள் (112)
Advertisement

புதுடில்லி: பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் உங்களுடன் வந்து நடிப்பார்கள் என அஜித் தோவல், காஷ்மீர் மக்களுடன் உணவு சாப்பிட்டதை ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார். அவர் காஷ்மீரில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.





காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பிறகு காஷ்மீர் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சோபியான் பகுதி மக்கள் சிலருடன் பேசியது, அவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில், மூடப்பட்ட கடைகளின் படிக்கட்டில் அமர்ந்து உள்ளூர் மக்களுடன் தோவல் உணவு சாப்பிடுவது போன்ற காட்சி அமைந்துள்ளது.





எல்லாம் சரியாக செல்வதாகவும், உங்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பு எனவும் உள்ளூர் மக்களிடம் தோவல் தெரிவித்துள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்., கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், பணம் கொடுத்து யாரை வேண்டுமானாலும் உங்களுடன் சாப்பிட வைக்கலாம் என்றார். 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் உள்ளூர்வாசிகள் சிலரிடம் பணம் கொடுத்து நடிக்க வைத்து, மத்திய அரசு இந்த வீடியோவை எடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஷா நவாஸ் ஹூசைன், இது போன்ற கருத்துகள் பாகிஸ்தான் மக்களிடம் தான் எதிர்பார்க்க முடியும். இந்தியாவின் பெரிய அரசியல் கட்சிகளிடம் அல்ல. ஆசாத்தின் கருத்து எதிர்பாராதது. இதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்றார்.

இதற்கிடையே காஷ்மீரில் கைது செய்யப்பட்ட குலாம் நபி. உடனே காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
15-ஆக-201915:07:25 IST Report Abuse
meenakshisundaram இவர்களையும் அதே போன்ற 'தொப்பி' மற்றும் தொப்பி அல்லாத சிதம்பரம் போன்றவர்களையும் இந்தியாவை விட்டே வெளியேற்றுவது நல்லது ,வைகோ போன்றோரும் அவர்களுக்கேற்ற போட்டியாளர்கள்.
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
13-ஆக-201912:02:05 IST Report Abuse
karutthu காஷ்மீரில் கைது செய்யப்பட்ட குலாம் நபி. உடனே காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.செய்தி இவரையும் சிதம்பரத்தையும் காங்கிரஸ் கட்சி வெளியேற்ற அன்னை சோனியா நடவடிக்கை எடுக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
11-ஆக-201903:06:21 IST Report Abuse
s t rajan air him in Islamic Terrorist camp.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X