எவரெஸ்ட் சிகரத்திலே நம்மூர் ஹரிணி

Added : ஆக 08, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
எவரெஸ்ட் சிகரத்திலே நம்மூர் ஹரிணி

ஹரிணி நாராயணன்

சென்னையைச் சேர்ந்தவர்.

சார்ட்டர்டு அக்கவுண்ட்,கம்பெனி செகரட்டரி,காஸ்ட் அக்கவுண்ட்,எஸ் ஏபி நிதி மற்றும் பொருளாதாரத்தில் முதுகலை என்று கணக்கியல் துறை படிப்பில் மிச்சம் வைக்காமல் உச்சம் தொட்டவர். இதன் காரணமாக 24 வயதிலேயே இந்தியாவிற்கான வெளிநாட்டு பாங்கின் உயர்பொறுப்பில் இருப்பவர்.

ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒரு நிமிடம் கூட இவரால் சும்மா இருக்கமுடியாது. துருதுரு வென்று ஏதாவது செய்து கொண்டே இருப்பார். முறையாக நிறைய சம்பாதிக்கவேண்டும் அதை ஏழை எளியவர்களுக்கு பொருளாக கொடு்த்து சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதை வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டவர்.

இதை எல்லாம் தாண்டி பெண்ணால் அதுவும் என்னால் எதையும் சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டவர்.

இதன் காரணமாக சமீபத்தில் எவரெஸ்ட் சிகரம் சென்று வந்திருக்கிறார்.இதனை நாம் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டோம் ஆனால் பெற்றோர் உற்றோர் நண்பர் என்று யாரிடமும் போனில் கூட தொடர்பு கொள்ள முடியாமல் பதினைந்து நாட்கள் சென்று வந்திருக்கிறார்.

இதற்காக அதிகாலை பயிற்சி, மாரத்தான் ஒட்டம் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னை தயார் செய்துகொண்டுள்ளார்.

காட்மண்ட்டில் இருந்து உலகின் சிறிய விமான நிலையமான ‛லுக்லாவில்' காலடி எடுத்து வைத்தது முதல் இவரது எவரெஸ்ட் பயணம் ஆரம்பமானது.

கையுறை,கால்சாக்ஸ்,கம்பளி உடைகள்,படுக்கும் பை மற்றும் பதினைந்து நாட்களுக்கு தேவையான பொருட்களில் பெரும்பாலனவற்றை ‛செர்பா' என்று சொல்லப்படும் சுமைகூலிகளிடம் கொடு்த்துவிட்டார், அதன்பிறகும் இரண்டு பைகளை இவர் துாக்கும்படியாகிவிட்டது.

செர்பாக்களை சுமை கூலிகள் என்று சொல்லவேகூடாது மலை ஏறும் மக்களின் ‛தெய்வங்கள்' அவர்கள், நாங்கள் துாக்கிச் செல்வது போல பத்து மடங்கும் பொருட்களை அவர்கள் சாதாரணமாக துாக்கிக்கொண்டு மலையேறுகின்றனர்.

எவரெஸ்டின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோலாபத்தர் கிராமம் மூன்று மணி நேரத்தில் ஹெலிகாப்டரில் சென்றுவிடும் துாரம்தான் ஆனால் நடந்து செல்லும் போது பத்து நாட்களாகிவிடுகிறது.

புரியும்படியாகச் சொல்லவேண்டும் என்றால் நமது ஊர் கொடைக்கானல் மலையின் உயரம் 6ஆயிரத்து 998 அடி உயரமாகும் என்றால் இவர் சென்ற எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திற்கான உயரம் 29ஆயிரத்து29 அடிஉயரமாகும்.கிட்டத்தட்ட ஐந்துமடங்கு அதிகம்.ஆனால் குளிரோ பத்து மடங்கு அதிகம்.

காத்மண்டுவி்ல் இருந்து எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரம் வரை செல்வதற்குள் நாம்சிபஜார்,டெங்க் போசா,டிஜோ போசா,கோகல்சர்ப்,உள்ளீட்ட பல கிராமங்களை கடக்கவேண்டும், தங்கவேண்டும்.

சில இடங்களுக்கு சென்றதும் அங்குள்ள சீதோஷ்ணம் உடலுக்கு ஒத்துக்கொண்டால்தான் அடுத்த அடி எடுத்துவைக்க முடியும் ஆகவே சில கிராமங்களில் ஒரு நாள் இரண்டு நாள் தங்கி தங்கிதான் செல்லவேண்டும், அதுதான் மலையேறும் முறையும் கூட.

தங்கவேண்டும் என்றால் உட்கார்வது துாங்குவது அல்ல அந்த பகுதியில் உள்ள சிறு சிறு மலைகளில் ஏறி இறங்க வேண்டும் மாறாக உட்கார்ந்து படுத்து ஒய்வெடுத்துவிட்டால் பிறகு மறு நாள் நீண்ட துார பயணத்திற்கு உடம்பு ஒத்துழைக்காது.

இந்த கிராமங்களி்ல் கிடைக்கும் உணவு தண்ணீருக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் ஒரு ஆம்லெட் 800 ரூபாய் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.உயரத்தில் ஏற ஏற இந்தக்கட்டணம் இன்னும் அதிகமாகும்.

இந்த கிராமங்களில் ‛சேட்டிலைட்' போன் இருக்கும் இது ஒன்றுதான் வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ள உள்ள ஒரே வழி.ஆனால் கட்டணம் மிக அதிகம் பெரும்பாலும் மலையேறுபவர்களில் சிலர் உடல் நலமில்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டுவிடுவர் அவர்களை மீ்ட்டுக்கொண்டுவர ஹெலிகாப்படருக்கு தகவல் சொல்லத்தான் இந்த போன் பெரும்பாலும் பயன்படும் நாங்கள் போனபோது நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர் போலும் மலையில் ஹெலிகாப்டர்கள் பறந்தபடி இருந்தது.

இவ்வளவு சிரமப்பட்டு அப்படி ஏன் மலையேறவேண்டும் என்ற கேள்வி சாதாரணமாக எழக்கூடும் ஆனால் இமயத்தில் காணப்படும் ஆறுகளும்,ஏரிகளும்,பனி மலையும்,தாவரங்களும்,நீர்வீழ்ச்சிகளும்,காலை உதயமும் மாலை சூரிய அஸ்தமனமும்,நிலவொளியும் எங்கும் காணமுடியாது எத்தனை முறை பார்த்தாலும் ரசித்தாலும் சலிக்காதது இப்படிப்பட்ட இமயத்தின் அழகைக் காண எவ்வளவு வேண்டுமானாலும் சிரமப்படலாம்.வெளிநாட்டினர் வருடந்தோறும் டூர் போல வந்து இந்த சந்தோஷத்தை அனுபவித்து செல்கின்றனர் .

இமயத்தில் குப்பை சேர்கிறது என்று படித்ததன் காரணமாக ஒரு சின்ன துண்டு பேப்பரைக்கூட இமயத்தில் போடாமல் பையில் சுமந்து கொண்டுவந்து கிழே உள்ள குப்பைக்கூடையில் போட்டிருக்கிறார் இதைப்பார்த்து ஹரிணியை வழிகாட்டி மனதார பாராட்டியுள்ளார்.

மலையேறுவதற்குதான் பத்து நாட்கள் ஆனது ஐந்து நாட்களில் இறங்கிவிட்டோம்.அமைதியும்,அழகும் பொங்கி வழியும் இமயத்தைவிட்டு வரவே மனமில்லை இதோ அடுத்த வருடம் போவதற்கு இப்போது முதலே தயராகிவிட்டேன் என்று சொல்லிச்சிரித்தார் ஹரினி நாராயணன்.

-எல்.முருகராஜ்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruganandam.S - Jubail,சவுதி அரேபியா
10-ஆக-201912:52:16 IST Report Abuse
Muruganandam.S வாழ்த்துக்கள் . கயிலை நாதனின் திருவருளால் இமயத்தின் உச்சி தொட்டமைக்கு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X