வாத்ராவை வறுத்தெடுக்கும், 'மீம்ஸ்'

Updated : ஆக 10, 2019 | Added : ஆக 08, 2019 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்தில், யார் வேண்டுமானாலும் சொத்துக்கள் வாங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை வைத்து, காங்கிரஸ் மூத்த தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவை, 50, கிண்டல் செய்து, சமூகவலைதளங்களில், 'மீம்ஸ்'கள் வலம் வரத் துவங்கியுள்ளன.@Image@அவற்றைப் பார்த்த, சோனியா மருமகன் ராபர்ட் வாத்ரா,
வாத்ரா,வறுத்தெடுக்கும்,மீம்ஸ்

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்தில், யார் வேண்டுமானாலும் சொத்துக்கள் வாங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை வைத்து, காங்கிரஸ் மூத்த தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவை, 50, கிண்டல் செய்து, சமூகவலைதளங்களில், 'மீம்ஸ்'கள் வலம் வரத் துவங்கியுள்ளன.

@Image@

அவற்றைப் பார்த்த, சோனியா மருமகன் ராபர்ட் வாத்ரா, கோபம் அடைந்தார். எனினும், அதை வெளிக்காட்டாமல், நெட்டிசன்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 'பேஸ்புக்' சமூகவலைதளத்தில், அவர் கூறியுள்ளதாவது: எனக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதே நேரத்தில், நீங்கள் உருவாக்கும் மீம்ஸ்கள், பிறரின் மனதை புண்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஜம்மு - காஷ்மீரில் மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகளை வைத்து, கிண்டல் செய்ய வேண்டாம். அது, பிறர் உணர்வுகளை புண்படுத்தும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


ரியல் எஸ்டேட் தொழிலதிபர்:சோனியா மருமகன் ராபர்ட் வாத்ரா, குறைந்த விலைக்கு ஏராளமான ஏக்கர் நிலங்களை வாங்கி, அதிக விலைக்கு விற்கும், ரியல் எஸ்டேட் றுவனங்களை நடத்தி வருகிறார். அதுபோல, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், வீடுகள், கட்டடங்களையும் வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். அதில், பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்துள்ளதாக கூறி, அவர் மீது, அமலாக்க இயக்குனரகம் வழக்கு தொடர்ந்துள்ளது; அந்த வழக்குகளில், அவர், 'ஜாமினி'ல் உள்ளார்.


'தால் ஏரியை வாங்கி விட்டார்'● ஜம்மு - காஷ்மீரில், 370வது பிரிவு ரத்து, வரலாறு ஆகியுள்ளது. காஷ்மீரிலும், லடாக்கிலும் ஏராளமான நிலங்கள் விற்பனைக்கு தயார். அணுகவும்: ராபர்ட் வாத்ரா, சோனியாவின் மருமகன்

● நிலாவில், ஒரு போர்டு மாட்டப்பட்டுள்ளது. அதில், 'இந்த நிலம், சோனியா மருமகனுக்கு சொந்தம்' என, எழுதப்பட்டுள்ளது

● பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர், அமித் ஷாவும் பேசிக் கொள்கின்றனர். 'ஜம்மு - காஷ்மீரில், பிற மாநிலத்தவர் சொத்துக்கள் வாங்க தடையாக இருந்த, 35-ஏ பிரிவு ரத்து செய்யப்பட்டதில், நம்மை விட, சோனியா மருமகனுக்குத் தான், மகிழ்ச்சி ஜாஸ்தியாக இருக்கும் போல!'

● பாலிவுட் நடிகர், அக் ஷய் குமார், 'ராபர்ட் வாத்ரா, முதல் முறையாக, காஷ்மீர் வந்துள்ளார்; எவ்வளவு அழகான பூமி...' என்கிறார். பின்னணியில், 'பிரேக்கிங் நியூஸ் - தால் ஏரியை, சோனியா மருமகன் விலைக்கு வாங்கி விட்டார்' என, 'டிவி'யில் ஓடுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-ஆக-201917:19:52 IST Report Abuse
ஆரூர் ரங் ஜாக்கிரதை பழைய 500 1000நோட்டு கொடுத்து ஏமாத்திருவான்
Rate this:
Cancel
09-ஆக-201913:11:39 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நீங்க பாட்டுக்கு மீம்ஸ் போட்டுக்கொண்டிருங்கள் , இந்நேரம் சில ஆயிரம் ஏக்கர்களை பேசி முடித்திருப்பார் சோனியாவின் சொக்கத்தங்க மருமகன் ராபர்ட் வத்ரா நேரு காந்தி படேல்.
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
09-ஆக-201912:05:25 IST Report Abuse
pradeesh parthasarathy லடாக்கில் உள்ள இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க நாக்கை தொங்க போட்டு கொண்டு இருப்பதை மக்கள் நாங்கள் அறிவோம் ...
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
09-ஆக-201917:56:26 IST Report Abuse
pradeesh parthasarathyதயிர் வடை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X