'370 ரத்தால் சாதக அம்சங்கள்'; காங்., மூத்த தலைவர் கரண் சிங் வரவேற்பு

Updated : ஆக 10, 2019 | Added : ஆக 08, 2019 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை முழுமையாக கண்டிக்க முடியாது. அதில் பல சாதகமான அம்சங்களும் உள்ளன' என, காங்., மூத்த தலைவர், கரண் சிங், கூறியுள்ளார்.@Image@ஜம்ம - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக
370,ரத்து, சாதக அம்சங்கள்,Congress,காங்கிரஸ், மூத்த தலைவர், கரண் சிங், வரவேற்பு

புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை முழுமையாக கண்டிக்க முடியாது. அதில் பல சாதகமான அம்சங்களும் உள்ளன' என, காங்., மூத்த தலைவர், கரண் சிங், கூறியுள்ளார்.
@Image@

ஜம்ம - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது.


எதிர்ப்பு:

இந்த நடவடிக்கைகளுக்கு, காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பார்லி.,யில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கட்சியின் சிறப்பு கூட்டத்திலும், மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவரான, கரண் சிங், 88, நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் நடவடிக்கைகளில், பல பலனளிக்கக் கூடிய அம்சங்கள் உள்ளதாக, வரவேற்றுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது, பல்வேறு ராஜ்ஜியங்கள் இணைக்கப்பட்டன. ஆனால், ஜம்மு - காஷ்மீர் மட்டும் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இறுதியில், அப்போது ஆட்சி புரிந்து வந்த மஹாராஜா, ஹரி சிங், நமது நாட்டுடன் இணைவதற்கான ஒப்பந்தம் செய்தார். மஹாராஜ் ஹரி சிங்கின் மகனான, கரண் சிங், அப்போது, ஜம்மு - காஷ்மீரில், ஜனாதிபதி அந்தஸ்தில் இருந்த, சதர் - இ - ரியாசத் என்ற பதவியை வகித்தார்.

அதைத் தொடர்ந்து, மாநிலத்தின் முதல் கவர்னராகவும் இருந்தார். பின், மத்திய அமைச்சர், ராஜ்யசபா உறுப்பினர், அமெரிக்காவுக்கான இந்திய துாதர் என பல பதவிகளை வகித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில், காங்., கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கு மாறான ஒரு நிலைப்பாட்டை, அந்த மாநிலத்தைச் சேர்ந்தவரான கரண் சிங் எடுத்துள்ளார்.

அவர், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜம்மு - காஷ்மீரில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை, முழுவதுமாக கண்டிப்பதை ஏற்க முடியாது. மத்திய அரசு எடுத்துள்ள அந்த முடிவில், பல நல்ல சாதகமான அம்சங்களும் உள்ளன. குறிப்பாக, லடாக் பகுதியை, தனி யூனியன் பிரதேசமாக்குவது வரவேற்கக் கூடிய முடிவு.


சீரமைப்பு:

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மேற்கு பாகிஸ்தான் அகதிகள் பிரச்னை, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு ஆகியவை வரவேற்க வேண்டிய அம்சங்கள்.மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளதால், எல்லை மற்றும் தொகுதி சீரமைப்பு நடைபெறும். முதல் முறையாக நடக்க உள்ள இந்த சீரமைப்புகள், அரசியல் ரீதியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். லடாக்கை, தனி யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என, சதர் - இ - ரியாசத் பதவியில் இருந்தபோதே கூறினேன்.

மாநிலத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து, அரசியல் ரீதியில் பேச்சு நடத்த வேண்டும். அங்குள்ள முக்கிய கட்சிகளான, தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியை, தேசவிரோத அமைப்புகளாக பார்க்கக் கூடாது. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். தற்போது அதிரடியாக செய்யப்பட்டுள்ள மாற்றம், பார்லி.,யில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அனைவரின் ஆதரவும் உள்ளது. தனிப்பட்ட முறையில், இந்த நடவடிக்கைகளை முழுமையாக நிராகரிக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து.

ஜம்மு - காஷ்மீருக்கு, எவ்வளவு சீக்கிரம் மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக, அதற்கான முயற்சிகளும் நடக்க வேண்டும். நாட்டின் மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல், இம்மாநில மக்களும், அரசியல் உரிமை பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
09-ஆக-201916:33:29 IST Report Abuse
r.sundaram காங்கிரஸ் காரர்கள் தலையில் இந்த கருத்துக்கள் ஏற வேண்டுமே?
Rate this:
Cancel
Balagan Krishnan - bettystown,அயர்லாந்து
09-ஆக-201916:12:23 IST Report Abuse
Balagan Krishnan Hon'ble Karan Sing is an aristocretic person.Ordinery opposition leaders must hear his statements and should act occordingly.
Rate this:
Cancel
Muradan Muthu - Madurai,இந்தியா
09-ஆக-201910:57:28 IST Report Abuse
Muradan Muthu கரண் சிங் ஒரு ஆரியர் .... வந்தேறி ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X