பொது செய்தி

தமிழ்நாடு

வரும், 17ல் அத்தி வரதர் தரிசனம் ரத்து: வி.ஐ.பி., வழியில் நேற்று அவதியடைந்த பக்தர்கள்

Updated : ஆக 10, 2019 | Added : ஆக 09, 2019 | கருத்துகள் (2)
Advertisement
அத்தி வரதர், தரிசனம் ரத்து, வி.ஐ.பி., பக்தர்கள்

காஞ்சிபுரம்: வி.ஐ.பி., தரிசன வழியில், நேற்று நடந்த குளறுபடியால், பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவத்தின் கடைசி நாளான, 17ம் தேதி, அனைத்து வகைதரிசனமும் ரத்து செய்யப்படுவதாக, கலெக்டர், பொன்னையா அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், வரதராஜர் கோவிலில், அத்தி வரதர் வைபவம், 39 நாட்களாக, வெகு விமரிசையாக நடைபெறுகிறது.கடும் கூட்டத்தில், வரிசையில் நின்று, பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். நேற்று ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 35 - 70 வயதுடைய ஒன்பது பேர் மயக்கமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


குடிநீர்


பக்தர்கள் வசதிக்காக, பல இடங்களில் கழிப்பறை, குடிநீர் வசதிகள் இருந்தாலும், வி.ஐ.பி., வரிசையில் கழிப்பறை இல்லை.அதேபோல், கிழக்கு கோபுரம் - செங்கல்பட்டு சாலையில், திறந்தவெளியில் நிற்கும் பக்தர்களுக்கு, குடிநீர் வசதி இல்லை.இந்நிலையில், கலெக்டர், பொன்னையா, நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளிகளுக்கு, 13, 14 மற்றும், 16ம் தேதிகளில், விடுமுறை அளிக்கப்படுகிறது.அத்தி வரதர் வைபவம் தொடர்பாக, வரதராஜ பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்கள், அறநிலையத் துறையினரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அத்தி வரதரை, அனந்தசரஸ் குளத்திற்கு மீண்டும் எடுத்துச் செல்ல வேண்டிய சில பூஜைகள், 17ம் தேதி நடைபெற உள்ளன. எனவே, அன்றைய தினம், அனைத்து தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது. இந்நிகழ்வை பார்க்க, பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.வரும், 16ம் தேதி இரவு, எவ்வளவு கூட்டம் வந்தாலும், 17ம் தேதி அதிகாலை வரை அனுமதிக்கப்படும். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருவோருக்கு, வந்த வாசி சாலை, கீழம்பி, முத்தியால்பேட்டை ஆகிய இடங்களில், பெரிய பந்தல் அமைக்கப்படுகிறது.அங்கு காத்திருந்து, மினி பஸ் மூலம், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரலாம். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், மூன்று பந்தலில் செய்யப்படும்.தற்போது, 45 மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன; கூடுதலாக, 25 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.அத்தி வரதர் விழா ஆரம்பித்ததில் இருந்து, நேற்று (ஆக., 08) வரை, 70.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.மரணம்


பக்தர்கள் பாதுகாப்பு பணிக்காக, கோவையிலிருந்து வந்து, வாலாஜாபாத்தில் உள்ள கல்லுாரி ஒன்றில், வெள்ளியங்கிரி, 50, என்ற உதவி ஆய்வாளர் தங்கியிருந்தார்.இவருக்கு, ஓய்வு இல்லாத காரணத்தால், உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று (ஆக., 08) காலை, 6:00 மணிக்கு, அவர் மயங்கி விழுந்து இறந்தார்.


'டோனர் பாஸ்' வழியில் குளறுபடிவரதராஜர் கோவிலில், கடும் நெரிசல் காரணமாக, மேற்கு கோபுரத்தில், மேம்பாலம் போல் அமைத்து, வி.ஐ.பி.,க்களுக்கு தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.பொது தரிசன பக்தர்கள், தரிசனம் முடித்து வெளியேவர கீழாகவும், வி.ஐ.பி., - வி.வி.ஐ.பி., வரிசையில், தரிசனம் செய்ய மேலாகவும் செல்வதற்கு ஏற்ப, தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கான பணிகள், நேற்று முன்தினம்(ஆக., 07) நள்ளிரவே முடிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று (ஆக., 08) மதியம் வரை, பணிகள் தொடர்ந்ததால், ஆயிரக்கணக்கான பக்தர்கள், வி.ஐ.பி., வரிசையில் நிற்க துவங்கினர். 9 மணி நேரத்திற்கும் மேலாக, தரிசனம் செய்வதில் சிக்கல் நீடித்தது. ஆனைக்கட்டி தெருவில், காலையில் நின்ற பக்தர்கள், மாலை வரை அங்கேயே நின்று, வெறுத்து போய் வீட்டிற்கு திரும்பினர்.'டோனர் பாசில்' குறிப்பிடப்படும் தேதி அன்றே, தரிசனம் செய்ய முடியும். ஆனால், நேற்று (ஆக., 08) வரிசையில் நின்று, பலர் வீடு திரும்பினர். அவர்கள், 8ம் தேதி குறிப்பிட்ட பாசை எடுத்து வந்து, அத்தி வரதரை, எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம். வி.ஐ.பி., தரிசனத்தில், நேற்று (ஆக., 08) நடைபெற்ற குளறுபடியால், பக்தர்கள் கடும் கோபமடைந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
appavi - doha,கத்தார்
09-ஆக-201918:21:58 IST Report Abuse
appavi உண்மை...
Rate this:
Share this comment
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
09-ஆக-201908:44:55 IST Report Abuse
Palanisamy Sekar மஹா கேவலம்..இப்படி ஒரு நிர்வாகமே அங்கே? இவர்கள் எல்லாம் நாட்டின் சுமைகள்..நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் தரிசனம் தருகின்றார்..நிச்சயம் கூட்டம் அலைமோதும்..அதற்கான முன்னேற்ப்பாடுகளை கூட ஏற்பாடு செய்யாமல் இப்படித்தான் செயல்படுமோ அரசு இயந்திரங்கள்? குடிக்க நீர்.. காற்று வசதிக்கு மின்விசிறிகள்..கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார்.. போக்குவரத்து ஏற்படுகள் என்று ஆரம்பத்திலேயே செய்திருக்கணும்.. தூங்கிவழிந்துவிட்டார்களே..கடவுள் மறுப்பு பிரச்சார குடும்பங்கள் எல்லாம் வெகு சுலபமாக தரிசித்து செல்கின்றார்கள்..உண்மையான பக்தர்களுக்கு அந்த பாக்கியமில்லை..நடிகை நடிகர்களெல்லாம் பக்கத்திலிருந்து தரிசனம் செய்ய ஏற்படு செய்த நிர்வாகம்..உண்மையான பக்தர்களை வாட்டிவதைத்து விட்டார்களே..அங்கே உள்ள கலெக்டர் இந்து சமய எதிர்ப்பாளராக இருப்பாரோ? .ஆனால் ஒன்று இங்கே தரிசனம் செய்துவிட்டு போனவர்கள் ஒருக்காலும் ஆளும் கட்சிக்கு ஓட்டே போடமாட்டார்களாம்..அந்த அளவுக்கு வாட்டி வதைத்து அனுப்பியுள்ளார்கள்..வரதர் பெருமானே..அடுத்த முறை இவர்களை நம்பி வராதீர்கள்..நீரிலேயே இருந்துகொள்ளுங்கள்..நீங்களே பார்க்கிண்றீர்கள் அல்லவா..எப்படியெல்லாம் இங்கே பக்தர்களை வதைக்கின்றார்கள் என்று..இந்துக்களுக்கு என்று ஆட்சியாளர்களை அடுத்த முறை மக்கள் தேர்ந்தெடுக்கணும்..அப்போதுதான் இதுபோன்ற குறைகளில்லாமல் பக்தர்கள் பக்தியோடு தரிசிப்பார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X