மழை பாதிப்பு: மத்திய அரசு உதவ ராகுல் கோரிக்கை

Updated : ஆக 09, 2019 | Added : ஆக 09, 2019 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுங்கள் என காங். கட்சியினருக்கு எம்.பி.,ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ரா, குஜராத், ஒடிசா, அசாம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்த மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் (அதிக பட்ச
மழை, பாதிப்பு உதவ ,ராகுல் கோரிக்கை

புதுடில்லி: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுங்கள் என காங். கட்சியினருக்கு எம்.பி.,ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ரா, குஜராத், ஒடிசா, அசாம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்த மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் (அதிக பட்ச மழை ) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news




மழை பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தினர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழை, வெள்ளத்திற்கு நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பு குறித்து டுவிட்டரில் காங். எம்.பி., ராகுல் கூறியது, மாநிலங்களில் பெய்த மழையால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காங். கட்சியினர் உதவ வேண்டும். பிரதமர் கவனம் செலுத்தி வேண்டிய உதவிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மீண்டுவர இறைவனை பிரார்திக்கிறேன். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.



இதனிடையே, டுவிட்டரில் ராகுல் கூறியுள்ளதாவது:எனது தொகுதி வயநாட்டில் வெள்ள சூழ்நிலை மோசமாக உள்ளது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மீட்பு பணிகளை விரைவுபடுத்துவது குறித்து கேரள முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் பேசி வருகிறேன். பிரதமரை தொடர்பு கொண்டு சூழ்நிலையை விளக்கி, மத்திய அரசின் உதவியை கேட்பேன் எனக்கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஆக-201921:22:37 IST Report Abuse
Ramki கவுல் ப்ராஹ்மண வேஷம் கலைஞ்சு போச்சு.வின்சின்னும் வெளிய சொல்லமுடியாது .வயநாடு ஆச்சே, இப்போ எந்த பேரோடு அங்கே களத்தில் இறங்கலாம்னு யோசனையில் இருக்காரு.வெள்ளம் எல்லாம் வடிஞ்சு நிலைமை சீரானதும் புதுப்பேரோட போய், ஒரு ரவுண்டு கட்டினால் வயநாட்டை அப்படியே வாயால வளச்சிரலாம்னு ஐடியாவோட இருக்கோ என்னவோ பய புள்ள
Rate this:
Cancel
appavi - doha,கத்தார்
09-ஆக-201918:43:53 IST Report Abuse
appavi உண்மை..
Rate this:
Cancel
PSN - CHENNAI,இந்தியா
09-ஆக-201916:23:25 IST Report Abuse
PSN கஜா புயலுக்கு மோடி வரலைன்னு என்ன ஆட்டம் போட்டானுங்க தி க பசங்க. இப்போ என்னடான்னா நோகாம பி எம் க்கு அறிக்கை விட்டா போதுமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X