அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னைக்கு தண்ணீர் திறக்க ஆந்திர முதல்வர் சம்மதம்

Added : ஆக 09, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 சென்னைக்கு தண்ணீர் திறக்க ஆந்திர முதல்வர் சம்மதம்

சென்னை : தமிழக முதல்வர், இ.பி.எஸ்., கோரிக்கையை ஏற்று, கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து, சென்னை குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்து விட, ஆந்திர முதல்வர், ஜெகன்மோகன் ரெட்டி சம்மதம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், பருவ மழை பொய்த்ததால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும், அனைத்து நீர்நிலைகளும் வறண்டதாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததாலும், மக்கள் கடும் துயரத்திற்கு உள்ளாகினர். ஆந்திர மாநிலத்தில் இருந்து தரப்பட வேண்டிய, கிருஷ்ணா நீரும் வரவில்லை.வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து, ரயிலில் குடிநீர் எடுத்து வந்து, நிலைமையை சமாளிக்கின்றனர்.

தற்போது, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில், பலத்த மழை பெய்து வருகிறது. எனவே, ஆந்திர முதல்வரை சந்தித்து, தண்ணீர் கேட்பதற்காக, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் ஆகியோரை, முதல்வர், இ.பி.எஸ்., ஆந்திரா அனுப்பினார்.அமைச்சர்கள் இருவரும், நேற்று ஆந்திர முதல்வர், ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தனர். சென்னை குடிநீர் தேவைக்காக, கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து, தண்ணீர் திறந்து விடக்கோரி, இ.பி.எஸ்., எழுதிய கடிதத்தை அளித்தனர்.

அதை பெற்ற, ஜெகன்மோகன் ரெட்டி, சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு, போதுமான தண்ணீரை, உடனடியாக விடுவிக்க, சம்மதம் தெரிவித்தார். இது குறித்து, அமைச்சர் வேலுமணி கூறியதாவது:ஆந்திர முதல்வரை சந்தித்து, நமக்கு தர வேண்டிய தண்ணீரை கேட்டோம். அவரும் மனமுவந்து, உடனடியாக தண்ணீர் தர சம்மதித்தார். ஸ்ரீசைலத்தில் இருந்து, சோமசீலா வழியே, கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விட, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதல்வர் எடுத்த வேகமான நடவடிக்கைக்கு, ஆந்திர முதல்வரும் ஆதரவு அளித்துள்ளார்.

இதனால், சென்னை மக்களின், குடிநீர் தேவை பூர்த்தியாகும். முதல்வர் மற்றும் தமிழக மக்கள் சார்பில், ஆந்திர முதல்வருக்கு நன்றி. நமக்கு, 8 டி.எம்.சி., தண்ணீர் திறக்க, ஆந்திர முதல்வர் சம்மதித்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
10-ஆக-201922:38:18 IST Report Abuse
adalarasan இப்ப. கோதாவரி, கிருஷ்ணா நதியில் 500tmc நீர் ,வெள்ளமாக பாய்ந்து வந்து கொண்டு இருக்கிறது8tmc என்ன 20tmc, தரலாம் அதே சமயம், நம்ம ஆட்கள், தண்ணீரை வீணாக்காமல், முறையாக, சேர்த்து வைக்க, முன்னேற்பாடுகளை செய்வார்கள் என்று நம்புகிறோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X