அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தேய்பிறையானது தி.மு.க.,'

Added : ஆக 09, 2019
Advertisement

சென்னை : ''அ.தி.மு.க., வளர்பிறையாகவும், தி.மு.க., தேய்பிறையாகவும் இருப்பதை, வேலுார் தேர்தல் முடிவு உணர்த்தி உள்ளது,'' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னை, விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:வேலுார் தேர்தலில், தி.மு.க., பண நாயகத்தை நம்பியிருந்தது; அதன்படி வெற்றி பெற்றுள்ளது. லோக்சபா தேர்தலில், ஓட்டு வித்தியாசம் இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்று இருந்தது.அப்பாவி மக்களிடம், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கூறி, ஓட்டு பெற்றனர். அது, வேலுாரில் எடுபடவில்லை. 8,000 ஓட்டுக்கு, 125 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். இது, மோசமான, மோசடியான வெற்றி.வேலுார் தேர்தலில், நாங்கள் தான் வெற்றி பெற்றோம்; மக்கள் மனதில் முழுமையாக, வெற்றி பெற்றுள்ளோம்.

லோக்சபா தேர்தல் முடிந்த குறுகிய காலத்தில், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., வளர்பிறையாகவும், தி.மு.க., தேய்பிறையாகவும் உள்ளது. வரும், 2021ல் தி.மு.க., தேறாது; அ.தி.மு.க., வெற்றி பெறுவதற்கான நல்ல அறிகுறியை, வேலுார் மக்கள் தந்து உள்ளனர். வெற்றிக்காக, கூட்டணி கட்சியினர் அனைவரும் உழைத்தோம். அதன் காரணமாக, மகத்தான ஓட்டுகள் அ.தி.மு.க.,விற்கு கிடைத்துள்ளன. பழம் நழுவி, பாலில் விழாமல், கீழே விழுந்து விட்டது. அடுத்த முறை நிச்சயம் பாலில் விழும்.இவ்வாறு, அவர் கூறினார்.

அ.தி.மு.க., கொள்கைப் பரப்பு துணைச் செயலர், வைகைச்செல்வன் கூறுகையில்,' 'வேலுாரில், தி.மு.க., மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறது. ''ஓட்டுகள் வித்தியாசம், லட்சக்கணக்கில் இருந்த தி.மு.க., தற்போது, சில ஆயிரக்கணக்கில் தன் விளிம்பு நிலையை அடைந்து விட்டது. இனி, வரும் தேர்தலில், தி.மு.க., மண்ணை கவ்வும்; அ.தி.மு.க., வெற்றி சரித்திரம் படைக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X