அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேலுார் தேர்தலில் கிடைத்த முடிவு ஸ்டாலின் அதிர்ச்சி;

Added : ஆக 09, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 வேலுார் தேர்தலில் கிடைத்த முடிவு ஸ்டாலின் அதிர்ச்சி;

ஏப்ரல் மாதம் நடந்த, லோக்சபா பொதுத்தேர்தலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள், ஓரிருவரை தவிர, அனைவரும் லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். தி.மு.க., கூட்டணிக்கு, 51 சதவீத ஓட்டுகள் கிடைத்தன.

அ.தி.மு.க., கூட்டணிக்கு, 18 சதவீத ஓட்டுகளே கிடைத்தன.எதிர்பார்ப்புஇதனால், தி.மு.க.,வினர் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். அடுத்து, எப்போது தேர்தல் வந்தாலும், தி.மு.க., ஆட்சி தான் என்று பெருமிதப்பட்டனர். எனவே, வேலுார் லோக்சபா தேர்தலில், நான்கு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெறலாம் என, எதிர்பார்த்தனர்.ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல, வேலுார் தேர்தல் முடிவுகள் அமையவில்லை. ஆரம்பத்தில், அ.தி.மு.க., முன்னிலை பெற்றது, தி.மு.க.,வினரை அதிர்ச்சி அடையச் செய்தது.

அதன்பின், தி.மு.க., முன்னிலை பெற்றாலும், அ.தி.மு.க., அதிக ஓட்டுகளை பெற்று, தி.மு.க.,வுக்கு நெருக்கடியை அளித்து வந்தது.இறுதியில், தி.மு.க., 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான், வெற்றி பெற்றது. லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தை எதிர்பார்த்தவர்கள், தற்போது, 'தலை தப்பியது' என்ற நிலையில் உள்ளனர். லோக்சபா பொதுத் தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைத்ததால், வேலுாரில் எளிதாக வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஸ்டாலினுக்கு, ஓட்டு வித்தியாசம் மிகவும் குறைந்தது, கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

லோக்சபா பொதுத் தேர்தல் தோல்வியால், அ.தி.மு.க.,வினர் துவண்டு போயிருந்தனர். வேலுார் தேர்தலில், வெற்றி பெறாவிட்டாலும், கடும் போட்டியை கொடுத்ததும், வித்தியாசத்தை கணிசமாக குறைத்ததும், அ.தி.மு.க.,வினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.காரணம்இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது: லோக்சபா பொதுத் தேர்தலின் போது, கூட்டணி கட்சி தலைவர்களை, ஸ்டாலின் அரவணைத்து சென்றார். அவர்கள் அனைவரும், வெற்றிக்காக தீவிர பிரசாரம் செய்தனர்; மகத்தான வெற்றி கிடைத்தது.

ஆனால், ஸ்டாலினை சுற்றியிருந்தவர்கள், 'உங்களுடைய பிரசாரம் மற்றும் உதயநிதி பிரசாரத்தால் தான், இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது' எனக்கூற, ஸ்டாலின், அதை நம்பி விட்டார்.இதன் காரணமாக, வேலுார் தேர்தலுக்கு, கூட்டணி கட்சி தலைவர்களை, பிரசாரத்திற்கு அழைக்கவில்லை. வேலுார் தொகுதியை, முஸ்லிம் லீக் கேட்டும், தி.மு.க., கொடுக்கவில்லை. இதனால், அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை, 'பிரசாரத்திற்கு வரக்கூடாது' என, தடை போட்டு விட்டனர். இதனால், அவர்களும் அதிருப்தியில் இருந்தனர்.

மகளிர் அணி செயலரான கனிமொழியையும், பிரசாரத்திற்கு அழைக்கவில்லை. எனவே, அவர் தரப்பும் ஒதுங்கிக் கொண்டது. ஸ்டாலின், உதயநிதி மட்டும் பிரசாரம் செய்தனர். பிரசாரத்தின் கடைசி நாளில், பெயரளவிற்கு கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்தனர். இதன் காரணமாக, கூட்டணி கட்சியினர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதுவே, தி.மு.க., ஓட்டு சரிந்ததற்கு காரணம். இனிமேலாவது, ஸ்டாலின், உண்மை நிலையை உணர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
14-ஆக-201907:38:53 IST Report Abuse
rmr இந்த முஸ்லீம் கிறிஸ்டின் வாக்கு இல்லை என்றால் இவர்கல் படு தோல்வி அடைந்து இருப்பார் என்பதே உண்மை மத அரசியல் ஜெய்ததது என்பதே உண்மை . இந்த ஹிந்து விரோத அரசியல் கட்சிக்கு மக்கள் முற்று புள்ளி வைக்க போகின்றனர் என்பதிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு
Rate this:
Share this comment
Cancel
kumarkv - chennai,இந்தியா
11-ஆக-201922:16:40 IST Report Abuse
kumarkv தி மு க மொத்தமாக அழியவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
10-ஆக-201915:38:18 IST Report Abuse
Baskar உதயநிதி என்றைக்கு கட்சிக்குள் நுழைந்தானோ அன்றிலிருந்து தி.மு. க வின் அழிவு காளான் ஆரம்பம் ஆகிவிட்டது.
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
10-ஆக-201922:42:15 IST Report Abuse
s.rajagopalanஉதயநிதி , குடும்பத்திற்குள்ளேயே உதித்த வை கோ வா.......? அ தி மு க இன்னும் கொஞ்சம் சுதாரித்திருந்தால் தி மு க காலி ஆகியிருக்கும். இனி என்ன செய்ய என்று ஸ்டாலின் தலையை சொரிந்துகொண்திருப்பாற். ஒரு சின்ன யோஜனை: கொஞ்ச நாள் மைக்கை பார்த்ததும் ஏதாவது உளராமல் இருக்கலாம். ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X