காஷ்மீர் விவகாரத்தில் தலையிட ஐ.நா., மறுப்பு! சிம்லா ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி பாக்.,கிற்கு, 'குட்டு'

Updated : ஆக 11, 2019 | Added : ஆக 10, 2019 | கருத்துகள் (24)
Advertisement
காஷ்மீர் விவகாரத்தில் தலையிட ஐ.நா., மறுப்பு! சிம்லா ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி பாக்.,கிற்கு, 'குட்டு'

நியூயார்க்: ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும்படி, பாகிஸ்தான் முன் வைத்த கோரிக்கையை, ஐ.நா., ஏற்க மறுத்துள்ளது. சிம்லா ஒப்பந்தப்படி, இரு தரப்பும் பேச்சு நடத்தி, சுமுக தீர்வு காணும்படி, ஐ.நா., பொதுச் செயலர் வலியுறுத்தி உள்ளார்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இதனால், கடும் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான், இந்த விவகாரத்தில், ஐ.நா., தலையிட வேண்டும் என்றும், பிரச்னையை தீர்க்க, சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்றும், கோரியது. ஐ.நா.,வுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி, மலிகா லோதியும், இது குறித்து, ஐ.நா., பொதுச் செயலரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.


நிராகரிப்பு:

இந்த கோரிக்கையை, ஐ.நா., நிராகரித்துள்ளது. இது குறித்து, ஐ.நா., பொதுச் செயலர், ஆன்டோனியோ கட்டர்சின் செய்தி தொடர்பாளர், ஸ்டீபன் டுஜாரிக், நியூயார்க்கில் நேற்று, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகளை கவனத்தில் வைத்துள்ளோம். இந்த விஷயத்தில், பாக்., - இந்தியா என, இரு தரப்புமே, பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். இந்தியா - பாக்., இடையேயான உறவு தொடர்பாக, 1972ல், ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில், ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதில், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும், இரு தரப்பு பேச்சு மூலம் சுமுக தீர்வு காண வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில், ஐ.நா., உட்பட, மூன்றாவது நபர் தலையீடு தேவையில்லை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற, பாக்., கோரிக்கையை ஏற்க முடியாது. இரு நாடுகளும் சுமுக பேச்சு நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

காஷ்மீர் விவகாரம் குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்படுமா என்பது குறித்து, தற்போதைக்கு எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. ஐ.நா., பொதுச் செயலரிடம், அதுபோன்ற திட்டம் எதுவும் உள்ளதா என்பதும் தெரியவில்லை. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, ஐ.நா., பொதுச் செயலர் கூர்ந்து கவனித்து வருகிறார். ஆனால், இதற்காக சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்பட்டு, பேச்சு நடத்தும் திட்டம் எதுவும் உள்ளதா என்பது குறித்து, எதுவும் தெரியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

ஐ.நா.,வின் இந்த அதிரடி முடிவால், பாகிஸ்தான் தரப்பு, கடும் ஏமாற்றம் அடைந்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, பிரதமர் இம்ரான் கான் ஆலோசிக்கவுள்ளதாக, பாக்., அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


சீனா யோசனை:

காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, பாக்., வெளியுறவு அமைச்சர், ஷா முகமது குரேஷி, சீனா சென்றுள்ளார். இந்நிலையில், 'காஷ்மீர் பிரச்னை குறித்து, இரு தரப்பும், பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும்' என, சீனா தெரிவித்துள்ளது.


'கொள்கையில் மாற்றமில்லை'

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், மார்கன் ஆர்டாஜஸ் கூறியதாவது: காஷ்மீர் பிரச்னைக்கு, இந்தியாவும், பாகிஸ்தானும், சுமுகமாக பேச்சு நடத்தி, தீர்வு காண வேண்டும் என்பதே, அமெரிக்காவின் கொள்கை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையால், எங்கள் கொள்கையில், எந்த மாற்றமும் ஏற்படப் போவது இல்லை. ஆனாலும், இந்த விஷயத்தில், இரு தரப்பும், நிதானத்துடன் செயல்பட்டு, பதற்றத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


பொதுமக்கள் பீதி:

காஷ்மீர் விவகாரத்தால், அதிருப்தி அடைந்துள்ள பாகிஸ்தான் அரசு, இந்தியாவுடனான, வர்த்தக உறவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மக்களுக்கு தேவையான பெரும்பாலான உணவு பொருட்கள், நம் நாட்டிலிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவுடனான, வர்த்தக உறவை ரத்து செய்துள்ளதாக, பாக்., அறிவித்துள்ளதால், பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். பாகிஸ்தானில், இறைச்சி, காய்கறி, பால் உள்ளிட்டவற்றின் விலை, ஏற்கனவே அதிகரித்துள்ளது. தற்போது, மக்களின் வருமானம் உயராத நிலையில், பொருட்களின் விலை, மேலும் அதிகரித்து, பண வீக்கம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

'இந்த ஆண்டு, பக்ரீத் பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவது என்பது, கடினமான விஷயமாகவே இருக்கும்' என, பாக்., மக்கள் கருதுகின்றனர். இதற்கிடையே, டில்லி - லாகூர் இடையேயான, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலை ரத்து செய்வதாக, பாக்., ஏற்கனவே அறிவித்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே ஓடும், வாராந்திர இணைப்பு ரயிலான, தார் எக்ஸ்பிரஸ் போக்குவரத்தையும், பாக்., நேற்று ரத்து செய்தது.

''ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. என்ன செய்வது என தெரியாமல், பாக்., அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். காஷ்மீர் விஷயத்தில், பொய்யான தகவல்களை கூறி, சர்வதேச நாடுகளையும், ஐ.நா., வையும், பாகிஸ்தான் ஏமாற்ற முடியாது''
- ரவீஸ் குமார், வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர்

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-201919:38:53 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren J K issue resolved after 70years, it.is not late you think? then it is parents responsibility to raise their sons to respect women. what you expect.from government? to keep a police by every women? First if you have a son raise him the way to.respect the women..
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
10-ஆக-201913:53:43 IST Report Abuse
RM Every day women are becoming victims including children .India is defined as a country not safe for women at international level. Economy is going down.Un employment problem is increasing. Water scarcity or flood in southern states.No one care for southern states.No proper functioning of Govt. dept. Ruling party first give priority to these issues. Kashmir problem is solved good. But first priority should be peoples basic needs. Kashmir issue can be done step by step. not in a hurry.Every hour a child or girl or women are harassed. why any urgent strict law cannot be passed by ruling party on high priority basis.?
Rate this:
Share this comment
mohan - chennai,இந்தியா
10-ஆக-201918:59:38 IST Report Abuse
mohanமிக்க நன்று......
Rate this:
Share this comment
Cancel
Rohin - jk ,இந்தியா
10-ஆக-201913:40:41 IST Report Abuse
Rohin இப்போது புரிகிறதா மோடி எதற்காக வெளிநாடு சென்றார் என்று, உலக நாடுகள் ஆதரவு இல்லை என்றால் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு பெரும் சிக்கல் எழுந்திருக்கும், இதை ஐநா, அமெரிக்கா, முஸ்லீம் கூட்டமைப்பு நாடுகள் மற்றும் உலகநாடுகள் எதிர்க்கும் மேலும் பொருளாதார தடைகள் இந்தியா மீது வரும் என்று பெரிதும் நம்பியது, ஆனால் நடந்ததோ நேர் எதிரானது, அவர்களது உற்ற தோழனான சீன கூட சப்போர்டுக்கு வராமல் பின்வாங்கியது, இதையெல்லாம் முன்கூட்டியே அறிந்துதான் இந்த இரும்பு மனிதர் உலகநாடுகளுக்கு சென்று முன்பே ஆதரவு திரட்டி இருந்தார் அதனால் இவர்களின் கூட்டாளிகளான முஸ்லீம் நாடுகளே இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது, பப்புவை போல் இவர் ஒன்றும் ஜாலிக்காக பட்டயாவுக்கோ, கடற்கரைக்கோ, பீச்சுக்கோ போய் சுற்றவில்லை, ஆனால் சில அல்லக்கைகள் வேண்டும் என்றே இந்த இந்திய தாயின் உண்மையான சேவகனை வசைபாடினார்கள், இன்று புரிந்ததா இந்த அல்லக்கைகளுக்கு எதற்கு வெளிநாடு போனார் என்று
Rate this:
Share this comment
B.s. Pillai - MUMBAI,இந்தியா
11-ஆக-201906:37:48 IST Report Abuse
B.s. PillaiYes.His world tour has been with a hidden agenda and brought good results diplomatically. Yielded support to India which no other P.M. of India could achieve. Not only J&K matter, but his work for environment pollution control , the idea that no country is superior but each one is inter dependant on each other, so let us keep good relation with each other and live peacefully are some of his preachings and message to the world leaders. His purpose has been properly understood by the International arena, but it paining very much and it is a pity that there are people in India and certain party leaders show blind eyes and go on criticising his tours.The fact that he did not waste funds for staying even one night more than absolutely necessary while on tours , but spent nights in the flights speak volumes about his thrift nature .He is True Gandhian by being ambassador for Khadi emporium .Its sale increased 500 times after he changed the clothes in his flight and in his office to Khadi clothes.Our main duty towards him is to strengthen his hands, beyond party affiliations and by stopping selfish goal criticisms on each and every good move he makes....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X