அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிதறாமல் இருக்கும் ஜெ., ஓட்டு; ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., பெருமிதம்

Updated : ஆக 11, 2019 | Added : ஆக 10, 2019 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை: 'ஜெயலலிதா அளித்து சென்ற, ஓட்டு சதவீதம் சிந்தாமல், சிதறாமல் உள்ளதை, வேலுார் தொகுதியில், இரட்டை இலை பெற்றிருக்கும் ஓட்டுகள் பறைசாற்றுகின்றன' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்.,ஆகியோர் தெரிவித்துள்ளனர்.அவர்கள் அறிக்கை: வேலுார் லோக்சபா தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க.,வின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன.
சிதறாமல் இருக்கும் ஜெ., ஓட்டு; ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., பெருமிதம்

சென்னை: 'ஜெயலலிதா அளித்து சென்ற, ஓட்டு சதவீதம் சிந்தாமல், சிதறாமல் உள்ளதை, வேலுார் தொகுதியில், இரட்டை இலை பெற்றிருக்கும் ஓட்டுகள் பறைசாற்றுகின்றன' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்.,ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அறிக்கை: வேலுார் லோக்சபா தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க.,வின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன. அ.தி.மு.க., வேட்பாளர், ஏ.சி.சண்முகம், 4.77 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளார். மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார். இது, வெற்றி என்ற இலக்கணத்திற்குள் அடங்கும் என்பதை, யாரும் மறுக்க முடியாது.

வேலுார் லோக்சபா தொகுதியின், தனித்தன்மை குறித்தும், அங்கு எத்தகைய சூழலில்,ஓட்டுப்பதிவை, அ.தி.மு.க., எதிர்கொண்டது என்பது குறித்தும், அரசியல் ஆர்வலர்களுக்கு தெரியும்.எனவே, வேலுார் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர், 46.51 சதவீதம் ஓட்டுகளை பெற்றிருப்பதன் முக்கியத்துவம், தெளிவாகப் புரியும்.அ.தி.மு.க., தலைமையில், தேர்தல் களம் புகும் அணி தான், தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய அணியாக, வெற்றிக்கனியை பறிக்கும் என்பது, வேலுார் தொகுதியில், அ.தி.மு.க., பெற்ற ஓட்டுகள் உணர்த்துகின்றன.

ஜெயலலிதா அளித்து சென்ற ஓட்டுகளின் சதவீதம் சிந்தாமல், சிதறாமல், அப்படியே உள்ளதை, வேலுார் தொகுதியில், இரட்டை இலை பெற்றிருக்கும் ஓட்டுகள் பறைசாற்றுகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiyagarajan - Bangalore,இந்தியா
10-ஆக-201921:32:50 IST Report Abuse
Thiyagarajan இந்த தேர்தலில் தோற்றாலும், அம்மா இல்லாத சூழ்நிலையிலும் பாராளுமன்ற தேர்தலின் மிக பெரிய சரிவிலும் மீண்டதாகவே கருதப்படுகிறது.இந்த உத்வேகத்தை பயன்படுத்தி உடனே உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் கண்டிப்பாக 70 % வடுக்களை கைப்பற்ற முடியும்.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
10-ஆக-201920:27:42 IST Report Abuse
jagan அடுத்த முறை பா ஜா இல்லாமல் தனியாய் நின்றால் வெற்றி தான்...சுடலைக்கு இப்பவே வவுத்தை கலக்கும் (சொம்புக்கு தான் தண்ணி இல்ல)
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
10-ஆக-201918:52:31 IST Report Abuse
Nagercoil Suresh ஆசான் கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டாமல் பார்த்த கதையைபோல் உள்ளது இவர்களின் கூற்று...பொது தேர்தல் வந்தால் சிந்தாமல் சிதறாமல் அனைத்து இடங்களிலும் தோல்வி தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X