மும்பை: பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் என்.டி ‛டிவி' சேனல் அதிபர் அவரது மனைவி ஆகியோர் வெளிநாடு தப்ப முயன்றதாக மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் ஏற்பட்டுள்ளது.
என்.டி ‛டிவி' சேனல் உரிமையாளர் பிரனாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் வங்கி கடன் பெற்றும், பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் என்.டி. டி.வி. சேனல் சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று இருவரும் மும்பை விமான நிலையம் வந்திருந்ததையறிந்த சி.பி.ஐ.யினர் அவர்களை தடுத்து நிறுத்துமாறு மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அவர்களை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில் என்.டிடி.வி பதிவிட்டுள்ளதாவது, இது போன்ற நடவடிக்கை ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது. ஊடகங்களை மிரட்டும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் பதிவேற்றப்பட்டுள்ளது.
விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், தொழில் காரணமாக பிரனாய் ராய், ராதிகா ராய் இருவரும் வெளிநாடு செல்ல உள்ளனர். வரும் 16-ம் தேதி இந்தியா திரும்பவுதற்கான டிக்கெட்டும் வைத்துள்ளனர். விசாரணையில் இருவரும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர். இவ்வாறு விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE