அத்வானி காலில் விழும் வைகோ: வீடியோ வைரல்

Updated : ஆக 10, 2019 | Added : ஆக 10, 2019 | கருத்துகள் (89)
Advertisement
advani, vaiko, bjp, mdmk, அத்வானி, வைகோ,பா.ஜ., பாஜ, ம.தி.மு.க., மதிமுக,

புதுடில்லி; பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி காலில் விழுந்து, மதிமுக பொது செயலர் வைகோ ஆசி வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட மதிமுக பொது செயலர் வைகோ, கடந்த ஜூலை 25 ம் தேதி பதவியேற்று கொண்டார். இதற்காக, டில்லி சென்ற வைகோ, அங்கு, தேசிய கட்சிகள் மற்றும் வட மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களை, மரியாதை நிமித்தமாக சந்தித்தார். கடந்த 24ம் தேதி,பா.ஜ., மூத்த தலைவர், எல்.கே.அத்வானியை, வைகோ, தன் குடும்ப உறுப்பினர்களுடன் சென்று சந்தித்தார். அப்போது, அத்வானிக்கு, சால்வை அணிவித்த வைகோ, அவரது காலில் விழுந்து வணங்கினார். இதனை தொடர்ந்து, வைகோவின் குடும்ப உறுப்பினர்களும் அத்வானி காலில் விழுந்து ஆசி வாங்கினர். இந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


23 ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜ்யசபா எம்பியாக தேர்வாகியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டில்லியில் பல்வேறு தலைவர்களை சந்தித்தார். பிரதமர் மோடி, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரை சந்தித்த வைகோ, பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானியை மனைவி, மகன், மருமகள், பேத்தி என குடும்பத்துடன் சந்தித்தார்.




Advertisement




வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.RAGHU RAMAN - chennai,இந்தியா
17-ஆக-201920:57:20 IST Report Abuse
M.RAGHU RAMAN காலில் விழும் அளவுக்கு, அவர் என்ன? கடவுளா? . நீ உன் சுயநலமான எண்ணம் நிறைவேற என்ன? வேண்டுமானாலும் செய்வாய்
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
13-ஆக-201912:16:42 IST Report Abuse
Jaya Ram இதில் தவறொன்றும் இல்லையே ஏற்கனவே அவர் மூத்த அரசியல்வாதி , இவரும் முன்னாளில் ராஜூயாசபாவில் எம்பியாக இருந்து திறமையாக பணியாற்றியவர் நல்ல நண்பர்கள் கூட
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
11-ஆக-201919:13:55 IST Report Abuse
karutthu அத்வாணி காலில் விழுந்ததில் தப்பில்லை ஆனால் அம்பானி காலில் விழாமல் இருந்தால் போதும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X