பொது செய்தி

தமிழ்நாடு

10 ஆண்டாக மழை நீரை சேமித்து பயன்படுத்தும், 'மாஜி' வங்கி ஊழியர்

Updated : ஆக 11, 2019 | Added : ஆக 10, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
மழைநீர், சேமிப்பு ,உபயோகம், வங்கி ஊழியர்,10 ஆண்டு

தஞ்சாவூர் : தஞ்சையில் வசிக்கும், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர், 10 ஆண்டுகளாக, வீட்டில் குடிக்கவும், சமைக்கவும் மழை நீரை சேமித்து, பயன்படுத்தி வருகிறார்.

தஞ்சாவூர், முன்சிபல் காலனியைச் சேர்ந்தவர், சோமசுந்தரம், 66; ஸ்டேட் வங்கியில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவரது மனைவி உஷாராணி. சோமசுந்தரம், 2009ம் ஆண்டு முதல், வீட்டில் மழை நீரை சேமித்து, குடிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறார். இவர், 4,200 சதுர அடி மனையில், 900 சதுர அடியில், வீடு கட்டியுள்ளார். 400 சதுர அடி அளவிலான, முதல் மாடியில் விழும் மழை நீரை, சுத்திகரித்து, வீட்டின் உள்ளே, வெயில் படாத இடத்தில், 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு டேங்கிலும், 5,000 லிட்டர் அளவிலான நீரை, பூமியில் தொட்டி ஏற்படுத்தியும், சேமித்து வருகிறார்.


14,000 லிட்டர்


இதன் மூலம், ஆண்டுக்கு இருமுறை மழை பெய்யும் போது, 14 ஆயிரம் லிட்டர் வரை சேமித்து, பயன்படுத்தி வருகிறார். அத்துடன், அதிக மழை பெய்யும் போது, தொட்டிகளில் சேமிக்கப்பட்டதை விட எஞ்சிய நீரை, 250 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லில் செலுத்தி யும், பயன்படுத்தி வருகிறார். இவரும், மனைவியும், 10 ஆண்டுகளாக, குடிக்கவும், சமைக்கவும், மழை நீரை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

சோமசுந்தரம் கூறியதாவது: மழைநீரை விட, மற்ற குடிநீரில், மாசு சற்று அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. மழை நீரில், பாக்டீரியா உள்ளிட்ட திடப்பொருட்கள், 50 மில்லி கிராம் உள்ளது. மழைநீரை வெயில் படாமல், நிழலில் சேமித்து வைத்தால், கெட்டு போகாது.


ரூ.25 ஆயிரம்


மனிதனின் உடலுக்கு தேவைப்படும் அமிலத்தன்மையும், காரத்தன்மையும் மழைநீரில் அதிகளவு உள்ளதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது. இந்த மழை நீரை தான், எங்கள் வீட்டுக்கு வரும் உறவினருக்கும் பருக வழங்குகிறேன். 2014ம் ஆண்டு மகளின் திருமணத்துக்கும், மழை நீரையே பயன்படுத்தினேன். மழைநீர் சேமிப்பு வடிகட்டி மற்றும் தொட்டி அமைக்க, 25 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, வடிகட்டியை சுத்தம் செய்து மாற்ற வேண்டும். மழை நீரை சேமிக்கும் முறையை, பொதுமக்களுக்கு பல கருத்தரங்குகளில் எடுத்துரைப்பதுடன், வாரந்தோறும் சனிக்கிழமைகளில், வீட்டில் மழைநீர் சேகரிப்பு ஆலோசனையும் வழங்கி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-ஆக-201916:39:50 IST Report Abuse
Natarajan Ramanathan நானும் எனது சென்னைவீட்டில் மழைநீரை கிணற்றில் செலுத்தி சேமிப்பதால் எனக்கு இதுவரை தண்ணீர் பஞ்சமே கிடையாது. மேலும் RO இருப்பதால் இதுவரைதண்ணீர் விலைக்கு வாங்கியதும் இல்லை.
Rate this:
atara - Pune,இந்தியா
11-ஆக-201921:58:02 IST Report Abuse
ataraRO water all will get your side effects , you normal water if need you can Boil and drink. Drinking is just Tongue level taste....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X