அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் பதவியை பிடிக்க எம்.எல்.ஏ.,க்கள் போட்டி: இரு இடங்கள் காலியால் பலருக்கு பதவி ஆசை

Updated : ஆக 12, 2019 | Added : ஆக 10, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
அமைச்சர், எம்.எல்.ஏக்கள், பதவி, போட்டி, அ.தி.மு.க,பழனிசாமி

சென்னை : ஆளும் அ.தி.மு.க.வில் அமைச்சர் பதவியை பிடிக்க எம்.எல்.ஏ.க்கள் இடையே திடீர் போட்டி ஏற்பட்டுள்ளது. இரு அமைச்சர்களின் பதவி காலியானதால் பலருக்கும் பதவி ஆசை வந்துள்ளது. யாருக்கு பதவி கொடுப்பது என தெரியாமல் முதல்வர் பழனிசாமி தவித்து வருகிறார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவ்வப்போது அமைச்சரவை மாற்றப்படும். அமைச்சர்கள் அனைவரும் எப் போது பதவி பறிபோகுமோ என்ற அச்சத்திலேயே இருக்கும் இடம் தெரியாமல் வலம் வந்தனர்; பத்திரிகையாளர்களை சந்திப்பதை அறவே தவிர்த்தனர். அவரது மறைவுக்கு பின் பழனிசாமி முதல்வரானதும் நிலைமை தலைகீழானது. அனைத்து அமைச்சர்களும் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர்.

சிலர் ஏடாகூடமாக பேசி கேலி கிண்டலுக்கும் ஆளாகினர். 'தெரியாத விஷயங்களை பேசாதீர்கள்' என முதல்வர் கண்டித்தும் அமைச்சர்கள் கேட்பதில்லை. முதல்வராக இருந்தாலும் அவரது பேச்சுக்கு அமைச்சர்கள் அதிகமாக பயப்படுவது இல்லை. மூத்த அமைச்சர்கள் அனைவரும் தன்னிச்சையாகவே செயல்படுகின்றனர்.

இதற்கிடையில் எம்.எல்.ஏ.க்களில் 18 பேர் தினகரனை ஆதரித்ததால் தகுதி நீக்கம் செய்யப் பட்டனர். அவர்களை இணைத்துக் கொண்டு தினகரன் தனி கட்சியாக செயல்பட துவங்கினார். அதனால் யார் மீது கை வைத்தாலும் அவர் அந்த பக்கம் போய் விடுவாரோ என்ற அச்சம் பழனிசாமி தரப்புக்கு இருந்து வந்தது. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் தங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தினகரன் பக்கம் சென்று விடுவோம் என முதல்வரை மறைமுகமாக மிரட்டி வந்தனர்.

இதனால் தவறு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாமல் முதல்வர் தவித்து வந்தார். இந்நிலையில் லோக்சபா தேர்தலுடன் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. அதில் அ.தி.மு.க. ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்ற நிலை உறுதியானது.

தினகரன் கட்சி படுதோல்வியை சந்தித்ததால் அங்கிருந்தவர்களும் அ.தி.மு.க.விற்கு ஓடி வந்தனர். தற்போது அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முகாம் மாறி விடுவோம் என்று மிரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. 'யாரையும் மதிப்பதில்லை' என மாவட்ட நிர்வாகிகளும் அழுது புலம்பினர். அவரது துறையில் பெரும் வசூல் வேட்டை நடப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து அவரது துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தின் தலைவராக கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனை முதல்வர் நியமித்தார்.

இது மணிகண்டனுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. அந்த கோபத்தில் அமைச்சர் ராதாகிருஷ்ணனை விமர்சித்து பரபரப்பு பேட்டி கொடுத்தார். அவரை விட்டு வைத்தால் மற்றவர்களும் இதேபோல் கிளம்பி விடுவர் என்பதால் உடனடியாக மணிகண்டனை பதவியிலிருந்து முதல்வர் நீக்கினார். அவர் கவனித்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி பதவி இழந்ததால் அவர் வகித்து வந்த துறை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கூடுதலாக வழங்கப்பட்டது.

தற்போதைய சூழலில் இரு துறைகள் அதாவது இரு அமைச்சர் பதவிகள் காலியாக உள்ளன. ஏற்கனவே முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களிடம் உள்ள துறைகளை பிரித்து கூடுதல் அமைச்சர்களை நியமிக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வந்தனர். தற்போது இரு அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் எப்படியும் அமைச்சர் பதவியை பெற்று விட வேண்டும் என்ற முனைப்புடன் முதல்வரை பல எம்.எல்.ஏ.க்கள் சுற்றி வரத் துவங்கி உள்ளனர்.

தற்போது அமைச்சரானால் இரண்டு ஆண்டுகள் அமைச்சராக வலம் வர முடியும் என்பதால் எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் அமைச்சராகும் ஆசை வந்துள்ளது. ஒருவருக்கு பதவி வழங்கினால் மற்றவர் கோபித்துக் கொள்ளக்கூடும் என்பதால் முதல்வர் முடிவு எடுக்காமல் உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11-ஆக-201906:04:56 IST Report Abuse
Mani . V ஆளும் அ.தி.மு.க.வில் அமைச்சர் பதவியை பிடித்து கொள்ளையடிக்க எம்.எல்.ஏ.க்கள் இடையே திடீர் போட்டி ஏற்பட்டுள்ளது ஸாரி, ஆளும் அ.தி.மு.க.வில் அமைச்சர் பதவியை பிடிக்க எம்.எல்.ஏ.க்கள் இடையே திடீர் போட்டி ஏற்பட்டுள்ளது.
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
11-ஆக-201902:58:04 IST Report Abuse
Palanisamy Sekar குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரே ஓர் எம் எல் ஏவின் சாதனைப்பணியினை சொல்லுங்களேன் பாப்போம்..அவருக்கு மந்திரி பதவியை கொடுக்க சொல்லலாம்.? குறைந்தபட்சம் அத்திவரதர் தரிசனத்திற்கு அங்கிருந்து செயல்பட்டிருப்பார்களா ஒருத்தராவது? ஆளுகின்ற கட்சியை அங்கே வசைமாரி பொழிகின்றார்கள். அங்கே உள்ள ஆட்சியாளர் வீ வீ ஐ பி க்களுக்கு சேவை செய்யவே துடிக்கின்றாரே தவிர மக்களுக்கு தரிசனம் செய்திட எந்த ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவே இல்லை. அந்த தொகுதி எம் எல் ஏ என்ன செய்கின்றார்? ஆளும் தரப்பு என்றுதான் எண்ணுகின்றேன்..மாதிரிகளும் சொல்லும்படியாக எந்த செயலையும் செய்யவே இல்லை..புதிதாக ஆசைப்படுகின்ற நபர்கள் எந்த தொகுதிகளிலும் உருப்படியான மக்கள் போற்றும்படியான செயலை செய்தியாவே இல்லை..ஆகவே போதும் இருக்கின்ற அமைச்சர்களின் எண்ணிக்கையே..இதற்கும் மேலே கூடுதலாக சேர்த்து என்ன பிரயோஜனம்? வேஸ்ட்..விட்டுடுங்க முதல்வரே..யாரையுமே சேர்க்காதீங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X