அரசியல் செய்தி

தமிழ்நாடு

விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பழனிசாமி

Updated : ஆக 12, 2019 | Added : ஆக 11, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
உள்ளாட்சி, தேர்தல், பழனிசாமி, அ.தி.மு.க,

சென்னை : ''விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரும்; பெரும்பான்மையான இடங்களில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.

சென்னை, வண்டலுாரில், முதல்வர் அளித்த பேட்டி:லோக்சபா பொதுத் தேர்தல் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின், 'பல லட்சம் ஓட்டுகள் வித்தி யாசத்தில், நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதேபோல், வேலுார் தேர்தலிலும், பல லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெறுவோம்' என, கூறியிருந்தார். அதிக ஓட்டுஆனால், 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான், வெற்றி பெற்று உள்ளனர். ஆறு சட்டசபை தொகுதிகளில், குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., அதிக ஓட்டுகளை பெற்று, வெற்றி பெற்றுள்ளது.

இதை, மிகப்பெரிய வெற்றியாக, நாங்கள் கருதுகிறோம்.சிறுபான்மையினர் ஓட்டுகள், அ.தி.மு.க.,விற்கு விழவில்லையா என்பது யூகத்தின் அடிப்படையிலான கேள்வி; அதற்கு பதில் கூற முடியாது. ஓட்டு யாருக்கு அளிக்கப்படுகிறது என்பது ரகசியம். அப்படி இருக்கும்போது, சிறுபான்மையின மக்கள் ஓட்டளித்தனரா, பெரும்பான்மையின மக்கள் ஓட்டளித்தனரா என்று, எப்படி தெரியும்?ஜாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட மாநிலம், தமிழகம். இன்றைக்கு தமிழகம் தான் அமைதிப்பூங்காவாக விளங்கி கொண்டிருக்கிறது. இங்கு மதம், ஜாதி அடிப்படையில், அரசியல் செய்வது கிடையாது. அனைத்து தரப்பு மக்களையும், ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்கிறோம்.

உள்ளாட்சி தேர்தல், விரைவில் வரும். அதில் பெரும்பாலான இடங்களில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்.நீலகிரி மாவட்டத்தில், கன மழை பெய்து வருகிறது. பந்தலுார் என்ற இடத்தில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி, காட்டுக்குப்பை என்ற இடத்தில், 34 பேர் வெள்ளத்தில் சிக்கினர்; அவர்களை, பேரிடர் மீட்பு குழு மீட்டுள்ளது.


5,500 பேர் மீட்பு


நீலகிரி மாவட்டத்தில், 5,500 பேர், பேரிடர் மீட்பு குழுவால் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அவர்களின் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.வருவாய் துறை அமைச்சர், உதயகுமார், அனைத்து இடங்களையும், நேரடியாக பார்வையிட்டு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து, பொது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். ஆந்திர முதல்வர், ஜெகன்மோகன் ரெட்டியை, அமைச்சர்கள் வேலுமணி, ஜெயகுமார் ஆகியோர் சந்தித்தனர். தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட, கோரிக்கை வைத்தனர்.அவரும் மனமுவந்து, நம் கோரிக்கையை ஏற்று, 8 டி.எம்.சி., தண்ணீரை, சென்னை மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்தார். ஆந்திர முதல்வருக்கு, தமிழக மக்கள் சார்பாகவும், என் சார்பாகவும் நன்றி.இவ்வாறு, அவர் கூறினார்.


சிங்கம், புலிக் குட்டிகளுக்கு பெயர் சூட்டிய முதல்வர்



முதல்வர், இ.பி.எஸ்., நேற்று சென்னை, வண்டலுார், அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சென்றார். அங்கு, 'சிவா' என்ற ஆண் சிங்கத்திற்கும், 'நீலா' என்ற பெண் சிங்கத்திற்கும், ஜன., 6ல், ஒரு ஆண், இரு பெண் குட்டிகள் பிறந்தன. அந்த குட்டிகளுக்கு, 'பிரதீப், தக்சனா, நிரஞ்சனா' என, முதல்வர் பெயர் சூட்டினார்.அதேபோல், 'விஜய்' என்ற ஆண் புலிக்கும், 'உத்ரா' என்ற பெண் புலிக்கும், 2018 ஆக., 8ல், ஆண் குட்டி பிறந்தது.

'நகுலா' என்ற ஆண் புலிக்கும், 'நர்மதா' என்ற பெண் புலிக்கும், ஜன., 9ல், இரண்டு வெள்ளை நிற பெண் குட்டிகளும், ஒரு ஆண் குட்டியும் பிறந்தன.இவற்றுக்கு முறையே, 'மித்ரன், யுகா, வெண்மதி, ரித்விக்' என, முதல்வர் பெயர் சூட்டினார். விலங்கின பரிமாற்றம் வழியாக, பீஹார் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து, ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் காண்டாமிருகம் பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஐதராபாத், நேரு உயிரியல் பூங்காவிலிருந்து, ஒரு ஆண் காண்டாமிருகம் வந்துள்ளது. அதற்கு, 'ராம்' என, பெயரிடப்பட்டுள்ளது.

பீஹார் மாநிலம், பாட்னா, சஞ்சய்காந்தி உயிரியல் பூங்காவிலிருந்து, ஒரு பெண் காண்டாமிருகம் வர உள்ளது. அதற்கான இருப்பிடத்தை, முதல்வர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சீனிவாசன், பெஞ்சமின், வனத்துறை செயலர், ஷம்பு கல்லோலிகர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஆக-201910:40:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இன்று ரொக்கம், நாளை கடன்..
Rate this:
Cancel
Anandan - chennai,இந்தியா
11-ஆக-201923:48:08 IST Report Abuse
Anandan ரொம்ப நாளா இதையே சொல்லிக்கிட்டு வராங்க.
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
11-ஆக-201921:40:00 IST Report Abuse
PANDA PANDI தமாஷ் OF THE WEEK
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X