காங்., தற்காலிக தலைவராக சோனியா தேர்வு

Updated : ஆக 12, 2019 | Added : ஆக 11, 2019 | கருத்துகள் (52+ 29)
Advertisement
சோனியா, ராகுல், காங்., இடைக்கால, தலைவர், கமிட்டி, குழு, ஆலோசனை

புதுடில்லி : புதிய தலைவரை தேர்வு செய்ய முடியாமல் காங். செயற்குழு கூட்டம் நேற்று இழுபறியில் முடிந்தது. பதவியில் நீடிக்க ராகுல் திட்டவட்டமாக மறுத்ததை அடுத்து சோனியா விடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் காங். கடும் தோல்வி அடைந்தது. இதையடுத்து மே 25ம் தேதி காங். தலைவர் பதவியை ராகுல் 50 ராஜினாமா செய்தார். ஆனால் அதை ஏற்க கட்சியின் மூத்த தலைவர்கள் மறுத்து விட்டனர். மீண்டும் தலைவராக தொடர வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் ராஜினாமா முடிவில் ராகுல் உறுதியாக இருந்தார். புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி மூத்த தலைவர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

அதன்படி காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று காலை நடந்தது. கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 11:00 மணிக்கு கூடிய கூட்டத்தில் சோனியா, ராகுல், மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, சிதம்பரம், வேணுகோபால், மீரா குமார், ஆனந்த் சர்மா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி என மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். அதில் தலைவராக ராகுல் தொடர வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் அதை ஏற்க ராகுல் மறுத்து விட்டதாக தெரிகிறது. அதனால் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வடகிழக்கு கிழக்கு வடக்கு மேற்கு தெற்கு என மண்டல வாரியாக ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் அந்தந்த மண்டலங்களில் உள்ள மாநில தலைவர்கள் உள்பட பல்வேறு நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து இரவு 8:30 மணியளவில் மீண்டும் செயற்குழு கூட்டம் துவங்கியது. மூத்த தலைவர்களை தொடர்ந்து சோனியா பிரியங்கா ஆகியோரும் துவக்கத்தில் இருந்தே பங்கேற்றனர். இதில் ஐந்து மண்டல குழுக்கள் எடுத்த தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.

கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் ஒன்றரை மணி நேரத்துக்கு பின் தாமதமாக ராகுல் வந்தார். இதைத்தொடர்ந்து நடந்த விவாதத்தில் கட்சி தலைவராக ராகுல் நீடிக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். அதை ஏற்க மீண்டும் ராகுல் மறுத்ததாக கூறப்படுகிறது. ராகுல் மறுத்த நிலையில் சோனியா அல்லது பிரியங்கா இப்பதவியை ஏற்க மூத்த தலைவர்கள் ஆலோசனை தெரிவித்தனர். ஆனால் சோனியாவும் பிரியங்காவும் அதை ஏற்கவில்லை. இழுபறி நீடித்த நிலையில் இரவு 10:15 மணிக்கு கூட்டத்தில் இருந்து ராகுல் வெளியேறினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராகுல் ''காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு தன் நிலைப்பாட்டை வெளிப்படையான முறையில் தெளிவுபடுத்த வேண்டும்'' என்றார். கட்சியின் தலைவர் பதவி குறித்து கேள்வி எழுப்பிய போது பதிலளிக்கமால் மவுனமாக சென்றார்.இதைத் தொடர்ந்து செயற்குழு கூட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவியில் நீடிக்க ராகுல் திட்டவட்டமாக மறுத்ததை தொடர்ந்து தற்காலிக தலைவராக செயல்பட சோனியா ஒப்புதல் தெரிவித்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து கட்சியின் புதிய தலைவராக சோனியா செயல் படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


சோனியா ராகுல் வெளியேறியது ஏன்


காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய நேற்று காலையில் செயற்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த போது சோனியாவும் ராகுலும் பாதியில் திடீரென வெளியேறினர். காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய அக்கட்சியின் உயர் அதிகார அமைப்பான செயற்கு கூட்டம் நேற்று காலையில் துவங்கியது. கூட்டத்தின் ஆரம்பத்திலேயே 'புதிய தலைவர் கூடாது; ராகுலே நீடிக்க வேண்டும்' என சில தலைவர்கள் கூற அதை சோனியாவும் ராகுலும் அமைதியாக கவனித்தபடி இருந்தனர்.

புதிய தலைவர் குறித்த விரிவான ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து மாநிலங்களின் தலைவர்கள் சட்டசபை காங்கிரஸ் தலைவர்கள் என பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆலோசனை நடைபெற்று கொண்டிருந்த போதே சோனியாவும் ராகுலும் கூட்டத்தை விட்டு வெளியேறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அங்கிருந்த நிருபர்களிடம் பேசிய சோனியா ''நானும் ராகுலும் ஏற்கனவே தலைவராக இருந்தவர்கள்; புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையில் எங்களது பங்களிப்பு இருக்கக் கூடாது என்பதற்காகவே வெளியேறினோம்'' என்றார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது: புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரையில் சோனியா இடைக்கால தலைவராக செயல்படுவார் என கூறினார்.
- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (52+ 29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-ஆக-201913:20:55 IST Report Abuse
இந்தியன் kumar உண்மையான இந்தியன் ஒருவன் கூடவா கட்சியில் இல்லை வெட்கம் வெட்கம்.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
11-ஆக-201922:29:07 IST Report Abuse
adalarasan காங்கிரசின் தலை எழுத்து ப்படி ஆகிவிட்டதே? பாவம்…?
Rate this:
Share this comment
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
11-ஆக-201921:17:42 IST Report Abuse
N.K கூட்டத்தை விட்டு வெளியேறியதை போல் நாட்டை விட்டும் வெளியேறட்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X