காஷ்மீர் விவகாரம் சிந்தியாவுக்கு ஆதரவு

Updated : ஆக 12, 2019 | Added : ஆக 11, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
காஷ்மீர், எம்.பி., சிந்தியா, ஆதரவு, குணா தொகுதி,மசோதா, சிறப்பு அந்தஸ்து

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசின் நடவடிக்கைகளை வரவேற்று, காங்., மூத்த தலைவர், ஜோதிராதித்யா சிந்தியா கூறிய கருத்துக்கு, அக்கட்சியைச் சார்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.


பாராட்டு


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும், மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு, பார்லி.,யிலும், வெளியேயும், காங்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில், அக்கட்சியைச் சேர்ந்த, பல மூத்த தலைவர்கள், மத்திய அரசின் நடவடிக்கையைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ள மத்திய பிரதேசத்தை சேர்ந்த, காங்., மூத்த தலைவர், ஜோதிராதித்யா சிந்தியாவும், மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துஇருந்தார்.

ம.பி.,யின் குணா தொகுதியின் முன்னாள், எம்.பி.,யான சிந்தியா, மத்திய அமைச்சராகவும் இருந்து உள்ளார். இந்நிலையில், அவருடைய கருத்துக்கு, ம.பி., முதல்வர் கமல்நாத்துக்கு நெருக்கமானவரான, மாநில நிதி அமைச்சர், தருண் பனோட் ஆதரவு தெரிவித்துள்ளார்.


கருத்து


மாநில சுகாதாரத் துறை அமைச்சர் துள்சி சிலாவத் உட்பட, காங்கிரசைச் சேர்ந்த பலரும், சிந்தியாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு உள்ளனர். சமீபத்தில், மாநில சட்டசபையில் காங்., கொண்டு வந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த, இரண்டு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க் களில் ஒருவரான, நாராயண் திரிபாதியும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INNER VOICE - MUMBAI,இந்தியா
14-ஆக-201917:10:52 IST Report Abuse
INNER VOICE AYYA IVVALAVU NAALA ENGEYA POYIRUNTHE. NEENGA NINAITCH ANNIKKE CONGRESS ARASAI EDHIRTHU KASHMIRUKKU SUDHANTHIRAM VANGITTHANTHIRUKKALAME.SARI IPPAVATHU PURINCHUTHE ROMBA SANTHOSHAM
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-ஆக-201916:46:22 IST Report Abuse
Endrum Indian ஐயோ இந்த மோடியை எப்படியாவது நீக்கவேண்டும் இந்த பதவியிலிருந்து இல்லையென்றால் எங்களுக்குள் நிச்சயமாக பிரிவினை ஏற்படுத்திவிடுவார் என்று தெளிவாகத்தெரிகின்றது - இப்படிக்கு நேரு முஸ்லீம் காங்கிரஸ் தலைவி
Rate this:
Cancel
11-ஆக-201909:42:17 IST Report Abuse
மனித நேயன் நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X