மோடியின் நம்பிக்கை நட்சத்திரம்: அஜித் தோவல்

Updated : ஆக 11, 2019 | Added : ஆக 11, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement

புதுடில்லி: சமீபத்தில், 'டிவி'க்களில் ஒரு காட்சி காண்பிக்கப்பட்டது. சற்று வயதான ஒருவர், 'புல்லட் ப்ருப்' உடை அணிந்து, காஷ்மீரிகள் சிலருடன் சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருக்கிறார். காஷ்மீரில் நிலைமை சீரடைந்து வருகிறது என்பதைக் காட்ட, இந்த காட்சிகள் காண்பிக்கப்பட்டன. புல்லட் ப்ருப் உடை அணிந்திருந்த அந்த நபர், இந்தியாவின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல்.latest tamil newsஇவர் மீது, பிரதமர் மோடி அதீத நம்பிக்கை வைத்துள்ளார். புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானிலிருக்கும், பாலகோட் முகாம்கள் மீது குண்டு வீசி, பாக்., பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவது எப்படி என, மோடிக்கு ஆலோசனை வழங்கியவர் இவர் தான்.கேரள கேடர், ஐ.பி.எஸ்., அதிகாரியான அஜித் தோவல், மோடி பிரதமரான, 2014ம் ஆண்டிலிருந்து இந்தப் பணியில் இருக்கிறார்.

இப்போது இவருக்கு, மத்திய அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. வாஜ்பாய் பிரதமராயிருந்த போது, அஜித் தோவல் உளவுத் துறை தலைவராக இருந்தார். கடந்த, 2005ல், பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். மோடி பிரதமரானதும், இவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக்கிவிட்டார்.தோவல், உளவுத் துறையில் பணியாற்றிய போது, பல, 'அண்டர்கிரவுண்ட் ஆபரேஷன்'களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.


latest tamil newsஇஸ்ரேல் நாட்டின், உளவு அமைப்பான, 'மொசாத்' போல, வெளியே யாருக்கும் தெரியாமல், இவர் மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகளால், சக அதிகாரிகள், இவருக்கு, 'ஜேம்ஸ் பாண்ட்' என, பெயரிட்டுள்ளனர். சீனா, பாகிஸ்தான் நாடுகளில் வேறு பெயர்களில் தங்கியிருந்து, பல உளவுத் தகவல்களை சேகரித்துள்ளதாக, இவருடன் பணியாற்றியவர்கள் தெரிவிக்கின்றனர். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது சட்டப் பிரிவை நீக்க, நாள் குறித்து கொடுத்தது இவர் தான். பாகிஸ்தான் உள்நாட்டு விவகாரத்தில் சிக்கி உள்ளது; சீனா - அமெரிக்கா இடையே, வர்த்தக சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; பிரிவு, 370ஐ ரத்து செய்ய, இது தான் சரியான நேரம் என, பிரதமருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்.

இந்திய பாதுகாப்பு விஷயத்தில், முக்கிய பங்காற்றும் அஜித் தோவலுக்கு, 74 வயதாகிறது எனச் சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். ஆள், அந்த அளவிற்கு, 'பிட்' ஆக உள்ளார்

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanjay - Chennai,இந்தியா
11-ஆக-201909:11:39 IST Report Abuse
Sanjay Hi
Rate this:
Cancel
ALL INDIAN BJP - singapore,சிங்கப்பூர்
11-ஆக-201908:54:23 IST Report Abuse
ALL INDIAN BJP வாழ்த்துக்கள் இந்த நாடே பாராட்டுகிறது எங்கள் தலைவர்கள் மோதி, அமித்ஷா அவர்களுடன் சேர்த்து உங்களையும்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
11-ஆக-201908:37:32 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Our DMK DK people don't know anything about, they know only how to get money thru vote bank politics. I suggest these people should be migrated to kashmir valleys atleast three years.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X