சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்த தந்தையின் முன் திருமணம்

Added : ஆக 11, 2019 | கருத்துகள் (10)
Advertisement
 இறந்த தந்தையின் முன் திருமணம்

மயிலம்:திண்டிவனம் அருகே, இறந்த தந்தையின் உடல் முன், தனியார் பள்ளி ஆசிரியரின் திருமணம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த, சிங்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர், தெய்வமணி மகன், அலெக்சாண்டர், 29; மயிலத்தில் உள்ள, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும், அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும், கொணமங்கலத்தைச் சேர்ந்த, ஜெகதீஸ்வரி என்பவருக்கும், சில நாட்களுக்கு முன், நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம், செப்., 2ம் தேதி நடக்க இருந்தது.இந்நிலையில் தெய்வமணி, திடீரென, நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, தந்தையின் முன், தன் திருமணம் நடைபெற வேண்டும் என, அலெக்சாண்டர் நினைத்தார். தன் விருப்பத்தை, பெண் வீட்டாருக்கு தெரிவித்தார்.இதற்கு அவர்களும் சம்மதம் தெரிவிக்க, உடனடியாக, ஜெகதீஸ்வரியை, சிங்கனுார் கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.அங்கு, இறந்த தந்தையின் உடல் முன், தாலியை பெற்று, இரு வீட்டாரின் முன்னிலையில், திருமணம் நடந்தது.இந்த சம்பவத்தை பார்த்த கிராம மக்கள், கண்ணீருடன், மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Achchu - Chennai,இந்தியா
16-ஆக-201905:22:31 IST Report Abuse
Achchu சும்மா சொல்லக் கூடாது அரிதான நிகழ்வுதான் சும்மா இருந்த அம்மாவை அக்கம் பக்கத்திலே நீ சும்மாதான் இருக்கியான்னு கேட்டாளுங்க சும்மா இருந்த அம்மாவை சும்மா இல்லாமே அம்மா ஆக்கிய அவனை யாரும் நினைப்பதேயில்லை அம்மா அம்மான்னு சும்மா சும்மா உருகுவாங்க "அவனை" எவனும் நினைப்பதில்லை
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
15-ஆக-201917:26:49 IST Report Abuse
karutthu இது மதம் மாறிய திருமணம் போல இருக்குதே ? இந்த ஜெகதீஸ்வரிக்கு ஒரு ஹிந்து மாப்பிள்ளை கிடைக்கவில்லையா ?
Rate this:
Share this comment
Achchu - Chennai,இந்தியா
16-ஆக-201906:43:27 IST Report Abuse
Achchuமதம் மாறிய இல்லை மதங்களுக்கிடையேயான காதல் திருமணம் ஒரு ஹிந்து மாப்பிள்ளை கிடைக்கவில்லையா? நல்ல கேள்வி ஆனா பொண்ணுக்கு "செவ்வாய் தோஷம்"னு சொல்லி யாரும் சம்பந்தம் போட சம்மதிக்கலை அவங்க பயந்தது போலவே நடந்துடுத்தோ...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-ஆக-201915:26:12 IST Report Abuse
Nallavan Nallavan தந்தை மீதான பாசம் நெகிழ வைக்கிறது ...... இறந்த தந்தை நல்ல கதி அடையட்டும் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X