சபரிமலை:சபரிமலைக்கு, தினசரி வரும் பக்தர்கள் எண்ணிக்கையை, 6,000 ஆக குறைக்க, வனத்துறை பரிந்துரைத்துள்ளது. இதற்கு பந்தளம் அரண்மனையும், பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கேரளாவின், சபரிமலை அய்யப்பன் கோவில், பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது. இங்கே, மண்டல, மகரவிளக்கு காலத்தில், தினமும், சராசரியாக, ஒரு லட்சம் பக்தர்கள் வருவர்.இந்நிலையில், சபரிமலை குறித்து ஆய்வு செய்ய, உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வனச்சூழலை பராமரிக்க, ஒரு நாளைக்கு, 6,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என, அந்தக் குழுவிடம் வனத்துறை பரிந்துரைத்துள்ளது.

இதற்கு, பந்தளம் மன்னர் குடும்பம், எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, பந்தளம் அரண்மனை நிர்வாகக் குழு செயலர், நாராயண வர்மா கூறியதாவது:
பக்தர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும். பக்தர்களுக்கும், வழிபாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, வனத்துறை கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE