உலகின் அறிவியல் மொழி சமஸ்கிருதம்: அமைச்சர்

Updated : ஆக 11, 2019 | Added : ஆக 11, 2019 | கருத்துகள் (71)
Share
Advertisement
மும்பை: உலகின் ஒரே அறிவியல் மொழி சமஸ்கிருதம் என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறி உள்ளார். மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது: உலகின் ஒரே அறிவியல்மொழி சமஸ்கிருதம் தான். அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா இதனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. எதிர்காலத்தில் பேசும்

மும்பை: உலகின் ஒரே அறிவியல் மொழி சமஸ்கிருதம் என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறி உள்ளார்.



latest tamil news




மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது: உலகின் ஒரே அறிவியல்மொழி சமஸ்கிருதம் தான். அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா இதனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. எதிர்காலத்தில் பேசும் கம்ப்யூட்டர்கள் வரும் பட்சத்தில் அது சமஸ்கிருதத்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏனெனில் சமஸ்கிருதம் ஒரு விஞ்ஞான மொழியாகும். அதில் உள்ள சொற்கள் பேசப்படும் விதத்தில் சரியாக எழுதப்படுகின்றன. என கூறினார்.


latest tamil news



தொடர்ந்து பேசிய அவர் ஆயுர்வேதம் இல்லாமல் மருத்துவ சிகிச்சை முழுமையடையாது என்றார்.மேலும் இன்று உலகமெங்கும் துவங்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் ஆயுர் வேத மருத்துவத்துடன் தான் தங்கள்பணியை துவக்குகின்றன. ஆயுர்வேதம் இல்லாமல் சிகிச்சை முழுமையடையாது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். முதல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் இந்தியாவில் இருந்து தான் வந்துள்ளார்.

தற்போது ஜப்பான்சீன தயாரிப்புகளையே நாம் பயன்படுத்தி வருகிறோம். பிரதமர் மோடியின் ஆலோசனையின்படி இனி வரும் காலங்களில் உலகில் உள்ள அனைவரும் இந்திய தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தும் நிலையை உருவாக்குவோம் என்பதை உறுதி செய்வோம் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
12-ஆக-201904:58:11 IST Report Abuse
Amal Anandan இவங்க சொல்றது எவ்வளவு உண்மைன்னு தேடி பார்த்தா எல்லாம் இந்த அடிமைகள் உருவாக்கின இணையங்கள்தான் இப்படி கடைவிரிக்கின்றன அதையே அடிமைகள் கூவுகின்றன ஆக மொத்தம் இவனுங்க வேலையே பொய் சொல்றது மட்டுமே.
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
12-ஆக-201904:54:37 IST Report Abuse
Amal Anandan கணினிக்கு தெரிந்ததே 0,1 தான் அப்புறம் எப்படி சமஸ்க்ரிதம் கணினிக்கு ஏற்றதுனு சொல்றாங்கன்னு தெரியவில்லை. அதீத விளம்பரம்.
Rate this:
Cancel
Akbar Muhthar - Madurai,இந்தியா
11-ஆக-201923:41:55 IST Report Abuse
Akbar Muhthar சமஸ்க்ரிதம் தாய் தான், எதுக்குன்னா கோவணத்துக்கும், கூழுக்கும், சொறி சிரங்கொட அலஞ்சத்துக்கும், மருந்துக்கு குடிக்கிறதுக்கும், விலங்குகள் போல கொல்லைக்கு போறதுக்கும், சட்டை இல்லாம, செருப்பு இல்லாம, பசி பிணி பட்டினியோடு வாழ்ந்ததுக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X