மும்பை: உலகின் ஒரே அறிவியல் மொழி சமஸ்கிருதம் என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறி உள்ளார்.

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது: உலகின் ஒரே அறிவியல்மொழி சமஸ்கிருதம் தான். அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா இதனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. எதிர்காலத்தில் பேசும் கம்ப்யூட்டர்கள் வரும் பட்சத்தில் அது சமஸ்கிருதத்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏனெனில் சமஸ்கிருதம் ஒரு விஞ்ஞான மொழியாகும். அதில் உள்ள சொற்கள் பேசப்படும் விதத்தில் சரியாக எழுதப்படுகின்றன. என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் ஆயுர்வேதம் இல்லாமல் மருத்துவ சிகிச்சை முழுமையடையாது என்றார்.மேலும் இன்று உலகமெங்கும் துவங்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் ஆயுர் வேத மருத்துவத்துடன் தான் தங்கள்பணியை துவக்குகின்றன. ஆயுர்வேதம் இல்லாமல் சிகிச்சை முழுமையடையாது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். முதல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் இந்தியாவில் இருந்து தான் வந்துள்ளார்.
தற்போது ஜப்பான்சீன தயாரிப்புகளையே நாம் பயன்படுத்தி வருகிறோம். பிரதமர் மோடியின் ஆலோசனையின்படி இனி வரும் காலங்களில் உலகில் உள்ள அனைவரும் இந்திய தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தும் நிலையை உருவாக்குவோம் என்பதை உறுதி செய்வோம் என கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE