பொது செய்தி

இந்தியா

மோடியுடன் எனது அனுபவம் : பியர் கிரில்ஸ் பேட்டி

Updated : ஆக 11, 2019 | Added : ஆக 11, 2019 | கருத்துகள் (37)
Advertisement

புதுடில்லி : பியர் கிரில்ஸ் என அனைவராலும் அறியப்படும் எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ், பிரிட்டனின் சிறப்பு படை அதிகாரியாக பணியாற்றியவர். இவர் தற்போது வனப்பகுதியில் பிரபலங்களுடன் சுற்றி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தி வருகிறார். நடிகர் பென் ஸ்டில்லர், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா போன்றோரை பேட்டி எடுத்த பியர் கிரில்ஸ், Man Vs Wild என்ற நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி உடன் கலந்துரையாடி உள்ளார்.


உத்திரகாண்டில் உள்ள ஜிம் கோர்பெட் தேசிய பூங்காவில் உள்ள வனப்பகுதிக்குள் எடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நாளை (ஆக.,12) இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட உள்ளது.மோடி உடனான தனது அனுபவம் குறித்து இமெயில் மூலம் கிரில்ஸ் அளித்த பேட்டி விபரம் :

* பிரதமர் மோடியை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டும் என்ற எப்படி வந்தது ?2 ஆண்டுகளுக்கு முன் ஒபாமா அதிபராக இருந்த போது, அலாஸ்கா வனப்பகுதியில் பருவநிலை மாற்றம் குறித்து நிகழ்ச்சி நடத்தினேன். உலகம் முழுவதும் பலராலும் பார்க்கப்பட்ட அந்த நிகழ்ச்சி போன்று நடத்த பிரதமர் மோடி மற்றும் டிஸ்கவரி இந்தியா நிறுவனத்திடம் பேசினேன். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான மோடியுடன் அவர்கள் நாட்டில் உள்ள வனப்பகுதியில் பயணிப்பது ஒரு சாகசமாக இருக்கும் என நினைத்தேன். உலகிற்கு தலைமை ஏற்கும் திறமை உடைய அவருடன் பருவநிலை மாற்றம் பற்றி பேசுவதும், தூய்மை இந்தியா பற்றிய அவரது பார்வையை பகிர்ந்து கொள்வது சரியானதாக இருக்கும் என எனக்கு தோன்றியது.
* இதற்கு தயார் செய்வது அவரை சந்தித்தீர்களா? அந்த ஆலோசனை எப்படி இருந்தது?அடர்ந்த வனப்பகுதியில் நாங்கள் சந்தித்து கொள்ளும் வரை அவரை நான் சந்திக்கவில்லை என்பது தான் ஆச்சரியம். இயல்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்தோம். எனக்கு அந்த பாதை தெரியும். அத்துடன் அந்த பாதையில் உள்ள காட்டாறை கடப்பது குறித்தும் திட்டம் இருந்தது. அது அரசியலுக்கு அப்பாற்பட்ட மோடி என்ற மனிதரை பற்றி அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இருந்தது.

* இந்த நிகழ்ச்சி பற்றி நீங்களும், பிரதமரும் எப்படி முடிவு செய்தீர்கள் ?இந்தியா எவ்வளவு மறக்க முடியாதது, இந்தியாவின் வளம், நல்ல பல விஷயங்களின் குவியலாக உள்ளது, இந்தியாவின் சுற்றுச்சூழல் எத்தகையது என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என நாங்கள் இருவருமே விரும்பினோம்.

* நிகழ்ச்சிக்கு அப்பாற்பட்டு நீங்கள் பகிர்ந்து கொண்ட சின்ன சின்ன விஷயங்கள் ஏதாவது?நாங்கள் நிகழ்ச்சியை படமாக்குவதற்கு சில மணி நேரம் முன்பு மிக கடுமையான சீதோஷ்ண நிலை நிலவியது. ஒரு சிறிய படகில் ஒரு மணி நேரம் பிரதமருடன் பயணித்தேன். ஆற்றில் நீரின் அளவு அதிகரிப்பதை கண்டு பிரதமரின் பாதுகாப்பு குழுவினர் கலக்கம் அடைந்தனர். ஆனால் பிரதமர் மிக அமைதியாக இருந்தார். பின்னர் நாங்கள் நிகழ்ச்சியை தொடங்கிய போது அவர் முழு உற்சாகத்துடன், பலமுறை சிரித்தார். நான் மூங்கிலால் செய்யப்பட்ட சிறிய படகு போன்றதை வைத்திருந்தது பார்த்துக் கூட அவர் சிரித்தார்.

இருவரும் நன்றாக நனைந்திருந்ததை பார்த்து அவரின் பாதுகாப்பு குழுவினர் கலக்கத்துடனேயே இருந்தனர். ஆனால் உலகின் அதிக சக்திவாய்ந்த ஒருவரின் முன்னுதாரணமான, குறும்பான, விளையாட்டான, தன்மையான மற்றொரு பக்கத்தை உலகம் பார்க்கக் கூடியதாக இருந்தது. நாங்கள் பயணத்தை முடிக்கும் போது இருவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என விரும்பினார். அது மிக நெருக்கமான, எங்களுக்குள் ஏற்பட்ட நட்பு மற்றும் ஒற்றுமையை காட்டும் தருணமாக இருந்தது.
* பல பிரபலங்களை பேட்டி கண்ட உங்களுக்கு அவரை பற்றி என்ன தோன்றுகிறது?வனப்பகுதியில் இதுவரை நான் எடுத்ததில் வயதான விருந்தினர் அவர். ஆனால் எப்போதும் பிரகாசமாக இருக்க கூடியவர். அவர் இயற்கையின் ஆற்றல், அதுமட்டுமின்றி மிக தெளிவானர். மிக அற்புதமான மனிதநேயம் அவரிடம் உள்ளது. தூய்மை இந்தியாவிற்காக அவரது அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.

* சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வளர்ச்சி பற்றிய முக்கிய கேள்விகளுக்கு பிரதமர் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் பற்றி?ஒரு இளைஞராக, பிரதமருடன் சிறிது நேரம் வனப்பகுதிக்குள் கழித்ததை வைத்து கூற வேண்டுமானால் அவர் இயற்கை மீது அற்புதமான ஈர்ப்பும், அக்கறையும் கொண்டவர். இந்தியாவை முன்னேற்றுவது முக்கியம் என்பதை நன்கு அறிந்தவர். பிளாஸ்டிக் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவர் தொடர்ந்து இதை செய்து காலநிலையை பாதுகாத்து, இந்தியாவை தூய்மையானதாக, பிரகாசமானதாக ஆக்குவார் என நம்புகிறேன்.
* உங்களின் கலந்துரையாடலில் முக்கிய அம்சம் என்றால் எதை சொல்வீர்கள்?சில அதிகாரம் மிக்க மனிதர்களிடம் மனிதாபிமானத்தை பார்க்க முடியாது. ஆனால் அவர் மிக நல்ல மனிதர். சிறப்பானவர். அவரது நட்பு கிடைத்ததை சிறப்பாக நினைக்கிறேன். வனங்கள் மனிதர்களை ஈர்க்கக் கூடியவை. அதனால் தான் சுற்றுப்புறங்களை படம்பிடிப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். உலக சாரணர் இயக்க தலைமை தூதராக இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். இந்தியாவில் திறமைமிக்க பல லட்ச கணக்கான இளைஞர்கள் இந்த பணியில் தங்களை இணைத்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

* பிரதமரின் மாறுபட்ட கோணம் குறித்து நிகழ்ச்சி என புரோமோவில் கூறி உள்ளீர்கள் அதை பற்றி ஏதாவது?இந்தியாவின் செல்வாக்கு மிக்க ஒரு மனிதர் தண்ணீரில் நனைந்தது, மனிதர்களால் தயாரிக்கப்பட்ட சிறிய மிதவையில் ஆற்றில் மிதந்து சென்றது இவற்றை நீங்கள் பார்த்திருந்தால் நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள். இளைஞர்களுக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக அவர் உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
12-ஆக-201909:07:24 IST Report Abuse
Rajavelu E. தான்தோன்றி தனமான செயல். ஒன்றுக்கும் உதவாது.
Rate this:
Share this comment
Cancel
Charles - Burnaby,கனடா
11-ஆக-201922:37:53 IST Report Abuse
Charles மிகவும் வருத்தமான வாசகர் விமர்சனம்.மோடி எத்தனை நெருக்கடியிலும் ஒபாமா போல் இயற்க்கை காக்கும் போராட்டத்திற்காக இந்த யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். இது உலக அளவில் நிச்சயமாக நற்பெருமை தரும். தமிழ் நாட்டில் இருக்கும் திராவிட காட்சிகள் மணலையும், க்ரானைட் கற்களையும் கடத்தும் கும்பலுக்கு கூட்டு, தமிழ் மக்களும் அதில் கூட்டாக அவர்களுக்கு பெரும்பான்மை ஒட்டு. தலையிட்ட அதிகாரிகளுக்கு வேலை மாற்றம், அதைத்தான்நீங்கள் வரவேற்பீர்களா
Rate this:
Share this comment
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
11-ஆக-201921:16:19 IST Report Abuse
chakra நான் சுடலை மற்றும் இத்தாலியன் மாபியா ஆதரவாளன் இல்லை
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
11-ஆக-201921:56:11 IST Report Abuse
blocked userஎங்கப்பன் குதிருக்குள் இல்லவே இல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X