காங்., தலைவர் பதவி: சோனியா சம்மதித்தது எப்படி?

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 11, 2019 | கருத்துகள் (44)
Advertisement
sonai, சோனியா, காங்., தலைமை பொறுப்பு, காஷ்மீர், சம்மதம்

புதுடில்லி : காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவே, தலைவர் பதவியை மீண்டும் ஏற்க, சோனியா சம்மதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பேற்று, கட்சி தலைவர் பதவியை, ராகுல், ராஜினாமா செய்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வி அடைந்தன.


உறுதி


இதையடுத்து, மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்கும்படி, கட்சியின் மூத்த தலைவர்கள், சோனியாவிடம் வலியுறுத்தினர்; அவரும் ஏற்க மறுத்து விட்டார். இந்நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் செயற்குழு கூட்டம், நேற்று முன்தினம் இரவு, டில்லியில் நடந்தது. இதில், ராகுலின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. 'புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, சோனியா, இடைக்கால தலைவராக பதவி வகிப்பார்' என, அறிவிக்கப்பட்டது.

'தலைவர் பதவியை ஏற்க மாட்டேன்' என, இரண்டு மாதங்களுக்கு முன் திட்டவட்டமாக கூறிய சோனியா, தற்போது சம்மதித்தது எப்படி என்பது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், மீண்டும் தலைவர் பதவியை ஏற்கும்படி, ராகுலிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவர், தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும், பிரியங்காவுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். பிரியங்காவும், இந்த விஷயத்தில் பிடி கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே, ஜோதிராதித்யா சிந்தியா, முகுல் வாஸ்னிக் ஆகியோரது பெயர்கள், தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டன. செயற்குழு உறுப்பினர்களில் ஒரு சிலர் மட்டுமே, அவர்களுக்கு ஆதரவாக கைகளை துாக்கினர். மொத்த செயற்குழு உறுப்பினர்களில், 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே, இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

வேறு வழியில்லாமல், மீண்டும் சோனியாவை அணுக வேண்டிய நிலை, கட்சியின் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டது. சோனியா, 19 ஆண்டுகள், காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து உள்ளார். மூத்த நிர்வாகிகள் முதல், அடிமட்ட தொண்டர்கள் வரை, அனைவரது மனநிலையும், அவருக்கு நன்கு தெரியும்.


ஆதரவு இல்லை


தேர்தல் வெற்றி, தோல்விகளை சமாளித்த அனுபவமும், அவருக்கு உள்ளது. நேரு குடும்பத்தைச் சேராதவர்களுக்கு, தலைவர் பதவியை கொடுப்பதற்கு, செயற்குழுவில் போதிய ஆதரவு இல்லை. அதையும் மீறி, நேரு குடும்பத்தைச் சேராதவர்களை தலைவராக நியமித்தால், கட்சியில் பிளவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என, சோனியாவிடம் எடுத்து கூறப்பட்டது. இதைத் தொடர்ந்தே, தலைவர் பதவியை ஏற்க, அவர் சம்மதித்தார்.

லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், பல மாநில நிர்வாகிகள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களுக்கு பதிலாக, விரைவில் புதிய நிர்வாகிகளை, சோனியா நியமிக்க உள்ளார். மேலும், காங்கிரசின் பல முக்கிய தலைவர்களுக்கு, பா.ஜ., மேலிடம் வலை விரித்துள்ளதால், அவர்கள் கட்சி தாவி விடாமல் தடுக்கும் ஆளுமை திறனும் சோனியாவுக்கே உள்ளது. இதனால் தான், சோனியாவிடம் தலைவர் பதவி, மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வாரிசு அரசியலை, நாட்டு மக்கள், வெறுத்து ஒதுக்குகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் மட்டும், ராகுல், சோனியா, பிரியங்கா என, வாரிசு அரசியலை, விடாமல் பிடித்து தொங்குகின்றனர். தேர்தல் தோல்வியிலிருந்து, காங்கிரஸ் கட்சியினர், இன்னும் பாடம் கற்கவில்லை என்பது, இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

சிவ்ராஜ் சிங் சவுகான், துணைத் தலைவர், பா.ஜ.,


காங்., செயற்குழுவில் ராகுலுக்கு பாராட்டு


காங்., செயற்குழு கூட்டத்தில், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானத்தில், 'கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பட்ட ராகுலுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கிறோம். ஓய்வில்லாமல், மிகவும் உறுதியுடன், அவர் பணியாற்றினார். ராஜினாமாவை திரும்பப் பெற்று, தலைவராக தொடர வேண்டும் என, வலியுறுத்தினோம். ஆனால், தன் முடிவில் அவர் உறுதியாக இருந்தார். இதன் மூலம், பொது வாழ்க்கையில், பொறுப்புடைமைக்கு புதிய தரத்தை அவர் நிர்ணயித்துள்ளார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, முன்னாள் தலைவரான, சோனியா, மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என, இரண்டாவது தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
12-ஆக-201921:29:12 IST Report Abuse
r.sundaram காங்கிரஸ் கட்சியை இனி அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
13-ஆக-201919:38:07 IST Report Abuse
Sathya Dhara கான் கிராஸ் கட்சி என்று கூற வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
12-ஆக-201920:56:37 IST Report Abuse
Girija மூதாதயர்கள் கொடூர செயல்களுக்கு பிற்கால சந்ததிகள் எப்படி அவஸ்தைப்படுகிறது என்பதற்கு இந்த குடும்பம் சரியான உதாரணம். எல்லாம் இருக்கிறது யாரும் இன்பமாக வாழவில்லை.
Rate this:
Share this comment
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
12-ஆக-201919:07:05 IST Report Abuse
S.BASKARAN இதை மக்கள் நம்பவேண்டும் இவர்கள்( காந்தி பரிவார் ) உள்ளவரை யாராலும் மாற்றமுடியாது, மாற்றவும் விடமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X