நிர்மலா சீதாராமனுடன் கட்டுமான துறையினர் ஆலோசனை

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 11, 2019 | கருத்துகள் (4)
Advertisement
நிர்மலா, கட்டுமானத்துறை, நெருக்கடி நிதி, தீர்வு, பிரச்னை

புதுடில்லி : கட்டுமானத் துறையினர் மற்றும் வீடு வாங்க விரும்புவோரிடம், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், இரு துறையினரின் முக்கிய கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என, உறுதியளித்தார்.

டில்லியில் நேற்று, அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த உயர் மட்டக்குழு கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி, நிதித் துறை இணையமைச்சர், அனுராக் தாக்குர் பங்கேற்றனர். மேலும், பொருளாதார விவகாரங்கள், நிதி, வீட்டு வசதி போன்ற துறைகளின் உயரதிகாரிகளும் பங்கேற்றனர். இரண்டு தனி கூட்டங்களாக நடந்த ஆலோசனையில், கட்டுமானத் துறையின் இரு முக்கிய அமைப்புகளான, 'கிரெடாய்' மற்றும் 'நாரெட்கோ' நிர்வாகிகளை, அமைச்சர் சந்தித்தார்.

பின், வீடு வாங்க விரும்பும் பொதுமக்கள் சார்பிலான சங்கங்களுடன் கலந்து பேசி, இரு தரப்பினர் தேவைகளையும், அமைச்சர் அறிந்தார். இதையடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்த, அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: நிதியமைச்சருடனான சந்திப்பு, மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. இரு தரப்பினரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள், பிரச்னைகள், அதை தீர்க்கும் முறைகளை, அமைச்சர் கேட்டறிந்தார்.

பிரச்னைகளுக்கு தீர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள், விரைவில் அறிவிக்கப்படும் என, அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார். இவ்வாறு, அவர் கூறினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற, வீடு வாங்க விரும்புவோர் சங்கத்தினர், 'நாடு முழுவதும், ஐந்து லட்சம் பேர், குறிப்பிட்ட காலத்தில் வீடுகள் வழங்கப்படாததால், பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றனர்.

'முடங்கிக் கிடக்கும் கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்த, 10 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு, நெருக்கடி நிதியமாக ஏற்படுத்த உதவ வேண்டும்' என, கட்டுமானத் துறையினர் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக, கிரெடாய் தலைவர், ஜேக்சி ஷா, நாரெட்கோ தலைவர், நிரஞ்சன் ஹிராநந்தினி கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
12-ஆக-201915:39:11 IST Report Abuse
Gopi ஒரு சிறந்த வழி, ஒரு வீடு கூட வாங்காத நடுத்தர மக்களின் கனவை நினைவாக்க, தொழிலில் முடங்கிய கட்டுமான நிறுவனங்களின் ப்ராஜெக்ட்டுகளை வங்கிகளே எடுத்து கொண்டு, குறைந்த பட்ச முன்பணத்தை மக்களிடம் பெற்று, அவர்களை குடியமர்த்தி, மாதம் கட்டும் வாடகை தொகையை வங்கி கணக்கில் சேர்ப்பித்து வர அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்களுக்கு அந்த வீடு சொந்தமாக செய்யவேண்டும். இப்படி செய்தால் வங்கியின் வாராக்கடனும் அடையும், ஏழை நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவும் நிறைவுறும், பாதிக்க பட்ட கட்டுமான நிறுவனங்கள் அநியாய விலையேற்றி விற்கவும் மாட்டாமல் வங்கிக்கு வட்டியும் கடனும் செலுத்தாமல் இருக்கும் நிலை மாறும்
Rate this:
Share this comment
Cancel
Ram - ottawa,கனடா
12-ஆக-201911:22:50 IST Report Abuse
Ram இந்த கட்டுமான கொள்ளையர்களை விரட்டி விரட்டி புடிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
12-ஆக-201908:52:37 IST Report Abuse
ஆரூர் ரங் அதிகமான கறுப்புப்பணம் ரியல் எஸ்டேட் கட்டுமானத்துறையில்தான் நடமாடியது.இப்போது அதற்கு ஆப்பு வைத்ததால் தடாலென்று கீழேவிழுந்து பலத்த அடி .தமிழகத்தில் மட்டும் ரியல் எஸ்டேட் நிலங்களும் வீடுகளும் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கியுள்ளதால் அதிகம் இறங்கவில்லை. வீட்டுமனை என்பது மக்கள் வாழ்வதற்கே .லாபம்பார்க்கும் முதலீடே அல்ல எனும் மனப்பான்மையை அரசு கொண்டுவரவேண்டும். இல்லையெனில் அனைவருக்கும் வீடு என்பது கனவுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X