370 பிரிவு ரத்து பயங்கரவாதத்துக்கு முடிவு அமித் ஷா

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 11, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
370 பிரிவு ,காஷ்மீர், ரத்து, பயங்கரவாதம், முடிவு, அமித் ஷா

சென்னை : ''ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததால் அந்த மாநிலத்தில் பயங்கரவாதம் முடிவுக்கு வரும்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பொறுப்பேற்று இரண்டு ஆண்டு முடிந்துள்ளது. அவரின் இரண்டு ஆண்டு கால பணியை ஆவணப்படுத்தும் விதமாக 'கற்றல் கற்பித்தல் மற்றும் தலைமையேற்றல்' என்ற நுால் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.அமித்ஷா வெளியிட வெங்கையா நாயுடு பெற்றுக் கொண்டார். அமித்ஷா பேசியதாவது:தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்; தமிழை கற்க முயன்றேன்; பல்வேறு காரணங்களால் முடியவில்லை. சென்னையில்ஒரு நாள் நிச்சயம்தமிழில் பேசுவேன்.

இந்த நுால் வெளியீட்டு விழாவிற்கு மத்திய அமைச்சராகவோ, எம்.பி.யாகவோ வரவில்லை; வெங்கையா நாயுடுவின் மாணவராக வந்துள்ளேன்.'கற்றல் கற்பித்தல் தலைமையேற்றல்' என்ற தலைப்பு சம்பவங்களின்தொகுப்பு இல்லை. தன் வாழ்நாளில் ஒருவர் எவ்வாறு இருக்க வேண்டும்; நாம் கவனித்து கேட்டு அறிந்து எப்படி தலைமையேற்று நடக்க வேண்டும் என்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சட்டப்பிரிவு 370ஐ சமீபத்தில் மத்தியஅரசு ரத்து செய்தது. வெங்கையா நாயுடு மாணவராக இருந்த போது இந்த சட்டப்பிரிவை எதிர்த்து போராடியிருக்கிறார்.காஷ்மீர் விவகாரம் பற்றி கம்யூனிஸ்ட் பேராசிரியர் ஒருவர் அவரிடம் கேட்டபோது, 'ஒரு கண்ணை மற்றொரு கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் ஒரு கண்ணில் வலி இருந்தால் அதை மற்றொரு கண் உணரும். அது போல காஷ்மீர் பிரச்னையை உணர வேண்டும்' என பதில் அளித்தார்.

துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவராக வெங்கையா நாயாடு இருக்கிறார். சட்டப் பிரிவு 370ஐ நீக்க வேண்டும் என்று போராடிய ஒருவர் அதை நீக்குவதற்கான மசோதா வரும் போது ராஜ்யசபா தலைவராக இருந்துள்ளார் என்பது காலத்தின் முடிவு.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த பிரிவு ரத்து செய்யப்பட்டதால் பயங்கரவாதம் ஒழிவதோடு அப்பகுதி முன்னேற்றம் அடையும்.இந்த சட்டப்பிரிவை ரத்து செய்வதா அல்லது வேண்டாமா என்ற குழப்பமே என் மனதில் உருவாகவில்லை.

இந்தச் சட்டப்பிரிவால் நாட்டிற்கோ ஜம்மு - காஷ்மீருக்கோ எந்த நன்மையும் இல்லை என நம்பினேன். அதனால் அதை விரைவாக ரத்து செய்ய முடிவு செய்தேன்.நான் குஜராத் மாநிலத்தில் எம்.எல்.ஏ. ஆனது முதல் மத்திய உள்துறை அமைச்சராகும் வரை சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதில் மாற்று கருத்து இருந்ததில்லை. ராஜ்யசபாவில் மசோதாவை எடுத்து வரும் போது ஒருவித தயக்கம், அச்சம் இருந்தது.

வேண்டுமென்றே முதலில் ராஜ்சபாவில் நிறைவேற்றுவோம்; பின் லோக்சபாவிற்கு எடுத்து செல்வோம் என முடிவு செய்தோம்.ஆனால் ராஜ்யசபாவில் விவாதம் முதல் ஓட்டெடுப்பு வரை வெங்கையா நாயுடுவின் சீரிய தலைமை காரணமாக அனைத்து கட்சி ஆதரவுடன் மாசோதா நிறைவேறியது. வெங்கையா நாயுடு ஆளுங்கட்சி, எதிர்கட்சியை சமமாக நடத்துகிறார். துணை ஜனாதிபதி எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு அவரது நுால் வழிகாட்டியாக இருக்கும். இவ்வாறு அமித்ஷா பேசினார்

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
12-ஆக-201915:01:29 IST Report Abuse
Bhagat Singh Dasan சீக்கிரம் தமிழ் கற்றுக்கொண்டு வரவும், பூரா பயல்களும் யூரின் போவார்கள்
Rate this:
Cancel
12-ஆக-201913:38:26 IST Report Abuse
பச்சையப்பன் என்ன பலூனைப் பற்றி எந்த செய்தியுமில்லை?
Rate this:
Cancel
Naren - Chennai,இந்தியா
12-ஆக-201912:40:28 IST Report Abuse
Naren எவராலும் மறுக்க முடியாத மிகத் தைரியமான சரித்திர முடிவு. வல்லரசு நாடுகளும் நமது நிலைப்பாட்டிற்கு ஆதரவு தந்து அமைதி காத்தது கூடுதல் பலமாக அமைந்தது. நமது நோக்கம் நேர்மையானது என்பதை அந்த பகுதி மக்களும் இவ் உலகும் அறிய நல்ல விசயங்களை அங்கு செயல் படுத்த வேண்டும். எனக்கு நம்பிக்கையுள்ளது உங்கள் ஆட்சியில் மட்டும் தான் நாட்டின் அனைத்து நதிகளையும் தேசிய மயமாக்கி இணைக்க முடியும் என்று. அதற்கு முன் ஒரு வேண்டுகோள் இன்று நாட்டில் மக்கள் படும் கஷ்டங்களை அறிந்து அதை சரி செய்ய முயலுங்கள். மக்களின் நம்பிக்கைக்கு முழு பாத்திரமாகுங்கள் என்பதே அது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X