காஷ்மீரில் திட்டப்பணிகளுக்கு சிறப்பு நிதி: அரசு தீவிரம்

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 12, 2019 | கருத்துகள் (9)
Advertisement
காஷ்மீர், தீவீரம், சிறப்பு நிதி, திட்டங்கள், வளர்ச்சி பணி

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர், யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதால், அங்கு வளர்ச்சி திட்டங்களை முழுவீச்சில் நிறைவேற்றுவதற்காக, மாநிலங்களுக்கு அளிக்கப்படுவது போன்ற சிறப்பு நிதியை வாரி வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது சட்டப் பிரிவை, மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. இதன்படி, ஜம்மு - காஷ்மீர், மாநில அந்தஸ்தை இழந்து, சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. வழக்கமாக, யூனியன் பிரதேசங்களுக்கு, மாநிலங்களை ஒப்பிடுகையில், மத்திய அரசின் நிதி குறைவாகவே கிடைக்கும். ஆனால், ஜம்மு - காஷ்மீரில், புதிய திட்டங்களை அமல்படுத்தவும், வளர்ச்சிப் பணிகளை முழு வீச்சில் நிறைவேற்றவும், மத்திய அரசு தீவிரமாக களம் இறங்கியுள்ளது.


ஒதுக்கீடு


இதற்காக, ஜம்மு - காஷ்மீர், யூனியன் பிரதேசமாக இருந்தாலும், மாநிலங்களுக்கு அளிக்கப்படுவது போல், அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே, பார்லிமென்டில், ஜம்மு - காஷ்மீர் சீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்படி, நிதி விவகாரங்களை பொறுத்தவரை, ஜம்மு - காஷ்மீரை, மாநிலமாக கருதி, நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதற்கு முன், எந்த ஒரு யூனியன் பிரதேசத்துக்கும், இது போன்ற நிதி அந்தஸ்து கிடைத்தது இல்லை. இந்த மசோதாவின் படி, 15வது நிதி கமிஷன், மத்திய அரசின் வரி வசூலில், கணிசமான பகுதியை, ஜம்மு - காஷ்மீருக்கு ஒதுக்கும். இதன் மூலம், ஜம்மு - காஷ்மீரில், வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


பக்ரீத் கொண்டாட்டம்


பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், சில நகரங்களில் தடை உத்தரவு அமலில் உள்ளதால், ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம், அரசு ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும், விரிவான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது.

இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பண்டிகை காலத்தில், விடுமுறை நாட்களிலும், அரசு கருவூலங்களும், வங்கிகளும் செயல்படும். ஏ.டி.எம்.,கள், 24 மணி நேரமும் இயங்கும். அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் படிகள், உரிய நேரத்தில் வழங்கப்படும். அனைத்து ரேஷன் கடைகளும் திறந்திருக்கும். அங்கு, போதிய உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்படும்.

விமான போக்குவரத்து, திட்டமிட்டபடி இயங்கும். மக்கள் வசதிக்காக, 300 பொது தொலைபேசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் மற்றும் மின்சார வசதி, தடையின்றி கிடைக்கும். இவ்வாறு, அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.


பாதிப்பில்லை


ஜம்மு - காஷ்மீரில், இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியில், பெரிய அளவிலான அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், பாக்., ராணுவத்தினர், துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்ற பயம் காரணமாக, 'போதிய அளவில் பதுங்கு குழிகளை அமைத்து தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.


மக்களுக்கு எச்சரிக்கை


ஸ்ரீநகரில், சில பகுதிகளில், நேற்று முன்தினம் தடை உத்தரவு தளர்த்தப்பட்டது. அப்போது, சில இடங்களில், சிறிய அளவிலான வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து, நேற்று மீண்டும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வீதிகளில் நடமாடும் மக்கள், தங்கள் வீடுகளுக்கு திரும்பும்படி, ஒலி பெருக்கி மூலம், போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர். மாலையில், சில பகுதிகளில் தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இது குறித்து, ஜம்மு - காஷ்மீர், டி.ஜி.பி., தில்பக் சிங் கூறியதாவது: பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்த ஆறு நாட்களில், துப்பாக்கிச் சூடு சம்பவம் எதுவும் நடக்கவில்லை. அனைத்து பகுதிகளிலும் தடை உத்தரவு, படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
12-ஆக-201921:31:45 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பாரதிஜனதாவா கொக்கா இன்னும் போக போக பாருங்கோ அவர்களின் செயல்பாடுகளை உலகமே திரும்பி வகையில் உலகம் சுற்றி வந்த மாண்பமை மோதி(டி) துணிவான தூய்மையான நடவடிக்கைகளை எல்லா உயிரும் தொழும் .....
Rate this:
Share this comment
Cancel
12-ஆக-201918:54:08 IST Report Abuse
ஆப்பு அங்கே ராணுவத்திற்கு தீனி போட்டே கட்டுப் படியாகாது...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
12-ஆக-201908:38:26 IST Report Abuse
ஆரூர் ரங் இத்தனை காலமாக காஷ்மீரில் பெரும்பாலான அரசு கான்டிராக்ட்கள் மறைமுகமாக பயங்கரவாதிகளுக்குப் போயின . அவர்களும் ஒருவேலையும் செய்யாமல் பில் பாஸ் செய்யவைத்து பணம் பெற்று தீவீரவாதத்துக்குப் பயன்படுத்துகின்றனர் .இன்னும் என்ன வேடிக்கையென்றால் அப்துல்லா, முஃப்தி குடும்ப ஆட்சியில் வேலைவாய்ப்பில்லாததால்தான் இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் சேருக்கின்றனர் எனச்சொல்லிக்கொண்டு அதனை சாக்காகவைத்து பல தீவீரவாதிகளுக்கு அரசு வேலை கொடுத்துள்ளனர் .அவர்களும் பணிக்குவாராமலேயே சம்பளம்வாங்கிக்கொண்டு போராட்டங்களிலும் வன்முறையிலும் ஈடுபடுகின்றனர் ஆகமொத்தம் நமது வரிப்பணத்திலேயே பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் வளர்ந்தது .இப்போது அதற்கு வாய்ப்பில்லை என்றவுடன் பொங்கியெழுந்து அருந்ததி ராய் ,வில்லன் பிரகா ராஜ், சுடலை,குருமா போன்றவர்களைத்தூண்டிவிட்டு அரசின் முடிவை போட்டிபோட்டுக்கொண்டு எதிர்க்கவைக்கிறார்கள் . கொஞ்சகாலம் காஷ்மீர் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருப்பப்பதே நல்லது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X