அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 12, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
சுப்ரீம் கோர்ட், சென்னை, கிளை, வெங்கையா, ரஜினி, நூல் வெளியீட்டு விழா

சென்னை : ''உச்ச நீதிமன்ற கிளையை, முதற்கட்டமாக சென்னையில் அமைக்க வேண்டும்,'' என, சென்னையில் நடந்த விழாவில், துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

நுால் வெளியீட்டு விழாவில், அவர் பேசியதாவது: தமிழகம் ஒரு துடிப்பான மாநிலம்; எல்லா துறைகளிலும் தடம் பதிப்பதில், முன்னிலையிலும், முன்னோடியாகவும் திகழ்கிறது. இந்தியா வலிமை மிக்க நாடாக வேண்டும்; ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். தற்போது, உலக நாடுகளின் பார்வை, இந்தியா பக்கம் திரும்பியுள்ளது.

சீர்திருத்தம், நடைமுறைப்படுத்துதல், மறுசீரமைத்தல் போன்றவற்றை, பிரதமர் மோடி, தாரக மந்திராமாக வைத்துள்ளர். இந்தியா, 135 கோடி மக்களுக்கானது.இதில், 18 சதவீத மக்கள் வறுமை கோட்டிற்கு கீழும், 20 சதவீத பேர், கல்வியறிவு இன்றியும் உள்ளனர். இவர்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
அரசின் திட்டங்கள், அனைவரையும் சென்றடைய வேண்டும்.வரும், 15ம் தேதி, நாட்டின், 73வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், என் சிந்தனைகளை பகிர விரும்புகிறேன். நான் ஒரு அரசியல்வாதியாக சொல்லவில்லை. நான் இனி, தேர்தலில் போட்டியிட போவதும் இல்லை; அரசியலுக்கு வரப்போவதும் இல்லை. நான், சமூக விழிப்புணர்வுக்கான பணிகளில் ஈடுபட உள்ளேன்.சட்டசபை, நீதிமன்றம், நிர்வாகம் ஆகிய மூன்றையும் பலப்படுத்த வேண்டும்.

சட்டத்தை இயற்றுவது மட்டுமின்றி, அதை நடைமுறைப்படுத்துவதும், பின்பற்றுவதும் அவசியம். நீதிமன்றங்கள் மிகவும் பொறுப்புடையவை. சட்ட நடைமுறைகள், மக்களுக்கு எளிமையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும்.உச்ச நீதிமன்றத்தில், 60 ஆயிரம் வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில், 44 லட்சம் வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சமீபத்தில் தெரிவித்துள்ளார். வழக்கின் தன்மையை பொறுத்து, அவற்றை உடனடியாக விசாரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில், ஒரு தேர்தல் வழக்கு, 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கிறது. இதற்காக, சிறப்பு நீதிமன்ற தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும். மேலும், உச்ச நீதிமன்ற கிளைகளை விரிவுபடுத்த வேண்டும். முதற்கட்டமாக, உச்ச நீதிமன்ற கிளையை, சென்னையில் அமைக்கலாம்.அதன்பின், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியிலும் அமைக்க வேண்டும். நீதியை பெறுவதற்காக, மக்கள் நீண்ட துாரம் பயணம் செய்து, அதிக பணம் செலவிடுவதை இதன் வாயிலாக தவிர்க்கலாம்.

மாநில உயர் நீதிமன்றங்களில், அந்தந்த மாநில மொழிகளிலேயே வாதாட அனுமதிக்க வேண்டும்.நீதிபதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதுடன், அரசியல் சாசன வழக்குகளை விசாரிக்கவும், மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கவும், தனி தனி பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும்.

நீதிபதிகள் தேர்வு முறையில் மாற்றங்கள் வேண்டும், 'கொலீஜியம் முறையில், குறைகள் உள்ளன. இதனால், நீதிபதிகளை நியமிக்க, தேசிய நீதிபதிகள் நியமன கமிஷனை அமைக்க வேண்டும்.சட்டப் பிரிவு, 370 ரத்தை, அரசியல் பிரச்னையாக பார்க்காமல், நாட்டின் பிரச்னையாக, பாதுகாப்பின் பிரச்னையாக பார்க்க வேண்டும்.

இது, நாட்டின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட முடிவு. இவ்வாறு, வெங்கையா நாயுடு பேசினார். தமிழக முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது: எல்லாரும் எளிதாக அணுகக் கூடிய வரும், அனைவரும் விரும்பும் ஒருவராக இருப்பவர், துணை ஜனாதிபதி. வண்ணாரப் பேட்டையிலிருந்து, திருவெற்றியூர் - விம்கோ நகர் வரை, மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கு, ஒப்புதல் பெற்று தந்தவர்.

மேலும், தமிழ்நாடு கேபிள், 'டிவி' நிறுவனம் டிஜிட்டல் உரிமை பெறுவதற்கு, மிகவும் உறுதுணையாக இருந்தவர். மாநில திட்டங்களுக்கு, மத்திய அரசின் நிதியை பெறுவதற்கும், பாலமாக இருந்தவர்.இவ்வாறு, அவர் பேசினார்.தமிழக துணை முதல்வர், ஓ.பி.எஸ்., பேசியதாவது: ராஜ்யசபா தலைவராக, இரண்டு ஆண்டுகளில், பல்வேறு சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்தியவர், வெங்கையா நாயுடு.தமிழகத்திற்கு, சிறந்த நண்பராக இருந்து வரும் அவர், தொடர்ந்து அவ்வாறே இருப்பார் என, நம்புகிறேன்.

பார்லிமென்ட் வரலாற்றில் சிறப்பு மிக்க, துணிச்சலான ஒரு நிகழ்வை உள்துறை அமைச்சர், அமித் ஷா செயல்படுத்தி இருக்கிறார்.காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 1984ல், ராஜ்யசபாவில் கோரிக்கை வைத்தார். இது, நீண்ட காலமாக எதிர்பார்த்த நடவடிக்கை. இவ்வாறு, அவர் பேசினார். இந்த விழாவில், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், வேளாண் விஞ்ஞானி, எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட, பலர் பங்கேற்றனர்.


கிருஷ்ணன் - அர்ஜுனன் புகழ்ந்து பேசிய ரஜினி
நுால் வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினி பேசியதாவது: காஷ்மீர் ஆப்பரேஷனை வெற்றிகரமாக நிறைவேற்றிய, உள்துறை அமைச்சர், அமித் ஷாவுக்கு என் வாழ்த்துக்கள். ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டுள்ளார். லோக்சபாவில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது.பிரதமர் மோடியும், அமித் ஷாவும், கிருஷ்ணர் -- அர்ஜுனன் போன்றவர்கள். இதில், யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனன் என்பதை, அவர்களே அறிவர்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
12-ஆக-201922:19:51 IST Report Abuse
Girija சென்னைக்கு சுப்ரீம் கோர்ட் வந்தால் இதுநாள் வரையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தது போல தான், மேல் தட்டு வழக்குகளை இங்கே அங்கே என்று பந்தாடி முடித்துக்கொள்ளும். சாதாரண மக்களுக்கு இவர்களால் இட நெருக்கடி, போக்குவரத்து நெருக்கடி, சுற்றுலாத்தலங்களில் முன்னுரிமை , டோல் கேட்டில் இலவசம், போலீஸ் பந்தோபஸ்து போன்ற வரி சுமைகள் தான் கூடும். இந்த தெய்வங்கள் டெல்லியிலே இருக்கட்டும்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
12-ஆக-201920:40:34 IST Report Abuse
Girija சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் வக்கீல்களின் பீஸ் எவ்வளவு என்று தெரியுமா? அதுவும் இத்தனை அமர்வுக்கு இத்தனை மணி நேரத்திற்கு என்று கோடி கணக்கில். குறிப்பிட்ட சில வக்கீல்களின் வழக்குகள் தான் உள்ளே நுழையவே முடியும். "இவர்கள் வந்தார்கள், பேசினார்கள் , வெளியிட்டார்கள், பெற்றுக்கொண்டார்கள், பட்டாசு வெடித்தார்கள் (ரஜனி) சென்றார்கள்" அவ்வளவுதான்.
Rate this:
Cancel
Sundar - Madurai,இந்தியா
12-ஆக-201917:18:06 IST Report Abuse
Sundar The vice president rightly suggested ''உச்ச நீதிமன்ற கிளையை, முதற்கட்டமாக சென்னையில் அமைக்க வேண்டும்,'' to reduce the pending case for many years to obviate popular sentence 'Delayed Justice is Denied Justice'.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X