சம்பவம் செய்தி

தமிழ்நாடு

58 ஆண்டுக்கு பின் கரைபுரண்டு வரும் காவிரி!

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 12, 2019 | கருத்துகள் (35)
Advertisement
 58 ஆண்டுக்கு பின் கரைபுரண்டு வரும் காவிரி!

மேட்டூர் : காவிரியில், 58 ஆண்டுகளுக்கு பின், அதிகபட்ச அளவில், தண்ணீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நீர்மட்டம் மளமளவென உயரும் என்பதால், மேட்டூர் அணையில் இருந்து, பாசனத்துக்கு எந்த நேரமும் நீர்திறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையின், மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., ஆகும். காவிரி நீர்பிடிப்பு பகுதியில், ஒரு வாரமாக கன மழை நீடிக்கிறது. இதனால், கர்நாடகாவில் உள்ள, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ்., ஆகிய அணைகள் நிரம்பிவிட்டன.இதனால், நான்கு அணைகளில் இருந்தும், உபரிநீர், காவிரியாற்றில் திறக்கப்பட்டுள்ளது. நேற்று, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 1.75 லட்சம் கன அடி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டது.

கபினியில் இருந்து, 70 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தாரகா நதியில், 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், மொத்தம், 2.55 லட்சம் கன அடி நீர், கரைபுரண்டு, மேட்டூர் அணைக்கு வருகிறது.1961க்கு பின்மேட்டூர் அணை கட்டி, 85 ஆண்டுகளாகிறது. எனினும், 1961 ஜூலை, 8ல், அணைக்கு, அதிகபட்சமாக, வினாடிக்கு, 3 லட்சம் கன அடி நீர் வந்தது. இதுவே, இதுவரை அதிகபட்ச நீர்வரத்தாக உள்ளது.பின், 2005 அக்., 24ல், வினாடிக்கு, 2.41 லட்சம் கன அடி நீர் வந்தது. கடந்தாண்டு, அதிகபட்சமாக, வினாடிக்கு, 1.97 லட்சம் கன அடி நீர் வந்தது.

ஆனால், 1961ம் ஆண்டுக்கு பின், நடப்பாண்டில், நேற்று தான், அதிகபட்ச தண்ணீர், காவிரியில் பெருக்கெடுத்து வருகிறது.எச்சரிக்கைகடந்த, 58 ஆண்டுகளுக்கு பின், அதிக பட்சமாக, 2.55 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து வருவது, தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள, கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களை, கலக்கமடைய செய்துள்ளது. அவர்களை, பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு, இரு மாநில அரசுகள் சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்புகர்நாடகா அணைகளில் திறக்கப்படும் நீர், தொடர்ச்சியாக வருவதால், நேற்று முன்தினம், வினாடிக்கு, 75 ஆயிரம் கன அடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 1.10 லட்சம் கன அடியாக அதிகரித்தது.நேற்று முன்தினம், 60 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று மாலை, 5:00 மணி நிலவரப்படி, 72 அடியாகவும்; 24 டி.எம்.சி.,யாக இருந்த நீர்இருப்பு, 34 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்தது. ஒரே நாளில், அணை நீர்மட்டம், 12 அடி, நீர் இருப்பு, 10 டி.எம்.சி., அதிகரித்தது.

நீர் திறப்பு காவிரியில், அதிகபட்ச நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை, விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேட்டூர் அணையிலிருந்து, பாசனத்துக்கு, எந்த நேரத்திலும் நீர்திறக்க, உத்தரவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
18-ஆக-201913:09:16 IST Report Abuse
Raghuraman Narayanan இன்னமும் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப் பட வில்லையா?
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
17-ஆக-201902:24:31 IST Report Abuse
 nicolethomson ஐயா புண்ணியவான்கள் இப்போதாவது ஏரி குளங்களை நிரப்பி பின்னர் கடலுக்கு அனுப்புங்க , கால்வாய்களை தூர்த்து விட்டு நாறடிக்கும் புண்ணியங்களை உங்க வாட்சாப் குரூப்பில் படம்பிடித்து புகழுங்கள்
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
15-ஆக-201915:01:15 IST Report Abuse
meenakshisundaram ஐயோ ஐயய்யோ தண்ணீர் இப்படி அநியாயமா கிடைச்சா இடப்பாடிய நாங்க எப்படி கவுக்குறது?அத்தி வரதர் கருணை இப்படியா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X