எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு

Added : ஆக 12, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
 தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு

சென்னை : தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறக்க, ஆந்திர முதல்வர், ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். உடனடியாக, கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால், தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் பாயும் கிருஷ்ணா ஆற்றில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கர்நுால் மாவட்டத்தில் உள்ள, ஸ்ரீசைலம் அணைக்கு வினாடிக்கு, 4.81 லட்சம் கனஅடி நீர்வரத்து கிடைத்து வருகிறது.இந்நிலையில், 'சென்னையின் குடிநீர் தேவைக்காக, கிருஷ்ணா நீரை திறக்க வேண்டும்' என, ஆந்திர முதல்வர், ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து, தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயகுமார் ஆகியோர் வலியுறுத்தினர்.

ஆண்டுதோறும், சாய்கங்கை கால்வாய் பராமரிப்பு கட்டணத்தையும் செலுத்துவதாக உறுதி அளித்தனர்.அதையேற்று, கிருஷ்ணா நீரை திறக்க, ஆந்திர முதல்வர் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, கர்நுாால் மாவட்டத்தில் உள்ள, ஸ்ரீசைலம் அணையில் இருந்து, வினாடிக்கு, 4.65 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் விரைவில், நெல்லுார் மாவட்டத்தில் உள்ள சோமசீலா அணைக்கு வந்து, அங்கிருந்து, கண்டலேறு அணைக்கும் வந்து சேரும்.கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, 'ஜீரோ பாயிண்ட்'டை வந்தடையும்.

குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்குள் கிருஷ்ணா நீர், தமிழக எல்லையை வந்தடைய வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணா நீர் திறக்க, ஆந்திர முதல்வர் உத்தரவிட்டதை, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர், வேலுமணி வரவேற்றுள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
17-ஆக-201902:06:05 IST Report Abuse
Rajesh கடல்ல கலந்துடும்ல?
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
12-ஆக-201915:25:28 IST Report Abuse
Darmavan கடைசியாக நம் நீர்தேக்கத்துக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X