பொது செய்தி

இந்தியா

ராம பிரான் மகன் குசா வழித்தோன்றல், சொல்கிறார் பா.ஜ., - எம்.பி.,

Updated : ஆக 12, 2019 | Added : ஆக 12, 2019 | கருத்துகள் (50)
Share
Advertisement
ஜெய்ப்பூர்: ''கடவுள் ராம பிரானின் வழித் தோன்றல்கள், இப்போதும் உள்ளனரா என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இதற்கு, நானே உதாரணம். ராம பிரானின் மகன், குசாவின் வழித் தோன்றல்கள் தான், எங்கள் குடும்பத்தினர்,'' என்று, ராஜஸ்தான் மாநில, பா.ஜ., - எம்.பி., தியா குமாரி கூறியுள்ளார்ராஜஸ்தான் மாநிலத்தின், ராஜ்ஸாமான்ட் தொகுதியின், எம்.பி.,யாக இருப்பவர், பா.ஜ., வைச் சேர்ந்த,

ஜெய்ப்பூர்: ''கடவுள் ராம பிரானின் வழித் தோன்றல்கள், இப்போதும் உள்ளனரா என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.latest tamil newsஇதற்கு, நானே உதாரணம். ராம பிரானின் மகன், குசாவின் வழித் தோன்றல்கள் தான், எங்கள் குடும்பத்தினர்,'' என்று, ராஜஸ்தான் மாநில, பா.ஜ., - எம்.பி., தியா குமாரி கூறியுள்ளார்

ராஜஸ்தான் மாநிலத்தின், ராஜ்ஸாமான்ட் தொகுதியின், எம்.பி.,யாக இருப்பவர், பா.ஜ., வைச் சேர்ந்த, தியா குமாரி, 48. இவர், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்தவர்.ஜெய்ப்பூரில், நேற்று இவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. சமீபத்தில் நடந்த விசாரணையின் போது, 'ராம பிரானின் ரகு வம்சத்தை சேர்ந்தவர்கள், யாராவது, இப்போதும் வசிக்கின்றனரா' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.ராம பிரானின் வழித் தோன்றல்கள், உலகெங்கும் வசிக்கின்றனர். அதற்கு, நானே சிறந்த உதாரணம். எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள், ராம பிரானின் மகன், குசாவின் வழித் தோன்றல்கள்.


latest tamil newsஇதை உறுதி செய்வதற்கான ஆவணங்கள், எங்கள் குடும்பத்திடம் உள்ளன, மனு சாஸ்திரம், பாரம்பரிய நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையில், இதை கூறுகிறேன். நீதிமன்றம் விரும்பினால், இவற்றை அளிக்க தயார். ஆனால், தேவையில்லாமல் இந்த விஷயத்தை பெரிது படுத்த விரும்பவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஆக-201900:37:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பிரதமரோட கல்வி சான்றிதழை நிரூபிக்க டிஜிட்டல் இந்தியாவில் துப்பில்லை. குஸாவின் பரம்பரையை பற்றி கேள்வி கேக்குது அறிவுகெட்ட நீதிமன்றம்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-ஆக-201918:55:43 IST Report Abuse
D.Ambujavalli இதிகாசப்படி கூட ராமர் வாழ்ந்தது திரேதாயுகம். பிறகு துவாபர யுகம் முடிந்து கலியுகம் ஐயாயிரத்துக்கு மேல் கடந்துவிட்டது. ஒவ்வொரு யுக முடிவிலும் பிரளயம் வந்து யார் எவர் என்ற அடையாளமே மாறியிருக்கும். இவ்வாறிருக்க ராமபிரான் வம்சமாவது
Rate this:
Cancel
Snake Babu - Salem,இந்தியா
12-ஆக-201914:20:21 IST Report Abuse
Snake Babu ஐயா கேள்விகேட்டது உச்ச நீதிமன்றம் பதில் சொல்லியிருப்பது பிஜேபி ஆள், இதில் தமிழர்கள், திராவிடர்கள் கூடவே டாஸ்மாக் பிரியாணி, எங்கிருந்து வந்தார்கள். எந்த செய்தி என்றாலும் தமிழர்களை கேவலப்படுத்தவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் தெள்ளதெளிவாக தெரிகிறது. நடத்துங்கள். நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
12-ஆக-201914:28:11 IST Report Abuse
Anbu"சிங்களவர்கள் எங்கள் சகோதரர்கள்.. தமிழர்கள் எங்கள் எதிரிகள்" என்று சொன்ன இலங்கை இஸ்லாமிய அன்பர்கள் குறித்து நீங்கள் எங்கேயும் கண்டிக்கவில்லையே ??...
Rate this:
Snake Babu - Salem,இந்தியா
12-ஆக-201916:03:55 IST Report Abuse
Snake Babuஐயா நீங்கள் உங்கள் கருத்தை படித்து பாருங்கள், நீங்கள் கூறியது எதில் சம்பந்தம் உடையது. இதனால் தங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், எதையாவது கண்டித்துக்கொண்டே இருக்கவேண்டுமா………உடனே என்னை மடக்குறேன் என்றெண்ணி மறுபடியும் ஒரே எதிர்மறை கருத்துக்கு செல்லாதீர்கள் ,,,,,,,,, ……..நல்லதை பேசலாமே………..எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறதே…………….. நன்றி வாழ்க வளமுடன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X