மேலோங்கும் மனிதாபிமானம்: களம் காணும் தன்னார்வலர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேலோங்கும் மனிதாபிமானம்: களம் காணும் தன்னார்வலர்கள்

Updated : ஆக 12, 2019 | Added : ஆக 12, 2019 | கருத்துகள் (26)

ஊட்டி:பந்தலுார், கூடலுாரில் பாதிக்கப்பட்ட இடங்களில், நீலகிரி ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி இணைந்து, 3 நாட்களாக, 600 பேருக்கு உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.







இதற்காக, 25 பேர் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இதுமட்டுமின்றி, மழைபாதித்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, ஊட்டியில் இருந்து இளையபாரதம், சேவா பாரதி அமைப்பினர் மட்டுமின்றி, பிற தன்னார்வலர்களும், மக்களிடம் சேகரிக்கும் பொருட்களை வாகனங்களில் அனுப்பி வருகின்றனர்.






முதல் நாளில், 200 கிலோ அரிசி, கம்பளி, கேண்டில் உள்ளிட்ட பொருட்களும், 2வது நாளில், 200
பெட்சீட், கம்பளி அரிசி, பிஸ்கெட் பாக்கெட்கள் வழங்கப்பட்டன. ஓம் பிரகாச சுவாமி கோவிலில், தங்க வைக்கப்பட்டுள்ள, 150 பேருக்கு இளைய பாரதம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

அதேபோல, தேவாலா 'ஷேடோஸ்' ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில்,நாடுகாணி சோதனை சாவடி அருகே மழையால் பாதிக்கப்பட்ட, 130 பேர் அருகில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு தேவையான உணவுகள் வழங்கினர். தொடர்ந்து, சேரங்கோடு, கரியசோலை, பந்தலுார், நாடுகாணி, என தினமும் ஒவ்வொரு முகாம்களில் உள்ளவர்களுக்கு அரிசி, கம்பளி உள்ளிட்டவை வழங்கி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X