பொது செய்தி

இந்தியா

பக்ரீத்: காஷ்மீரில் சிறப்பு ஏற்பாடு

Updated : ஆக 12, 2019 | Added : ஆக 12, 2019 | கருத்துகள் (15)
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.


கடந்த 5 ம் தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்பபெற்றது. மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு காஷ்மீர் , லடாக் யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்ததுடன் இண்டர்நெட்,டெலிபோன்சேவையை முடக்கியது.


தற்போது காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் இயல்புநிலை திரும்பி வருவதால் தடை உத்தரவு விலக்கிகொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் தலைநகர்ஸ்ரீநகரில் பதட்டம் நிலவுவதால் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளது.

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் ஒருசில நடவடிக்கைகளை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும் அமைதி நிலவுவதாகவும், மக்கள் எந்தவித வதந்தியையும் நம்ப வேண்டாம் எனவும் மத்திய-மாநில அரசுகள் தெரிவித்து உள்ளன.ஏ.டி.எம். மையங்கள் சீராக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதுடன், பணமும் நிரப்பி வைக்கப்படுகின்றன.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இருப்பதால், எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அமைதியான பக்ரீத் கொண்டாட்டமாக இந்த ஆண்டு பண்டிகை இருக்கும் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார். 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய அவர், அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட இடங்களில் இருந்து அந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyan - Tiruchirapalli,இந்தியா
12-ஆக-201920:25:26 IST Report Abuse
kalyan தலை இழந்த விநாயகரை உயிர்ப்பிக்க ஒரு யானையை தேவர்கள் கொல்லவில்லையா, அந்த விநாயகரை எல்லோரும் வழி படுகிறோமே மற்ற மத நம்பிக்கைகளை விமரிசிக்காமல் இருந்தால் ஒன்று கூடி வாழலாம்
Rate this:
Share this comment
sankar - Nellai,இந்தியா
12-ஆக-201921:16:01 IST Report Abuse
sankarநல்ல கருத்து...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஆக-201915:24:44 IST Report Abuse
Endrum Indian பக்ரி ஈத் என்றால் தியாகத் திருநாள் - நடந்தது என்ன - அல்லா, முஹம்மதின் மகனை (பிள்ளைக்கறி கதையின் சில மாற்றம்) பலியாகககேட்ட கதை???நடந்தது என்ன??ஆடுகள் மேயும் இடத்தில் மகனை கூட்டி சென்று கண்ணை மூடி ஒரு திருகு திருகி ஒரே வெட்டு ஆடு பலியானது , மகன் தப்பித்தான்??? 1) இது எப்படி தியாகத் திருநாள் ஆகும். ஏமாற்றுத்திருநாள் ஆகும் 2) நேற்று பல லாரிகள் ஆடுகளை ஏற்றி எல்லா இடத்திலும் கொடுத்து அதை பழிவாங்கி/கொலை செய்து நாம் புசிக்கின்றோம். ஆகவே ஆடு தான் தியாகம் செய்கின்றது தன இன்னுயிரை வழங்கி???நாம் அதனிடமிருந்து தான் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.
Rate this:
Share this comment
ARUN - ,
13-ஆக-201901:09:01 IST Report Abuse
ARUNellaathaiyum naiyaandi panna mudiyum... nallathai paarpome.....
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-ஆக-201910:30:10 IST Report Abuse
skv srinivasankrishnaveni தீவிரவாதங்களி அனுஷ்டிப்பவர்களேதான் முரட்டு கூட்டங்கள் சாமானியர் எல்லா மதத்ததுலேயும் அமைதியே தான் நாடுறாங்க இது சத்தியம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X