பொது செய்தி

தமிழ்நாடு

பிலிகுண்டுலுவுக்கு 3 லட்சம் கனஅடி நீர்

Updated : ஆக 12, 2019 | Added : ஆக 12, 2019 | கருத்துகள் (31)
Advertisement

சேலம் : மேட்டூர் அணை ஒரே நாளில் 18 அடி உயர்ந்து உயர்ந்து 85 அடியை எட்டி உள்ளது. பாசனத்திற்காக நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிலிகுண்டுலுவுக்கு நீர் வரத்து 3 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.






நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று (ஆக.,11) அணையின் நீர்மட்டம் 67 அடியாக இருந்த நிலையில், ஒரே நாளில் 18 உயர்ந்து 85 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 2.10 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.


மேட்டூர் அணை: நாளை திறப்பு


அணையின் நீர் இருப்பு 45 டிஎம்சி.,யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் இன்று (ஆக.,12) மாலைக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருவதால் நாளை (ஆக.,13) காலை 8 மணிக்கு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.





கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 1.51 லட்சம் கனஅடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக - தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
12-ஆக-201920:46:10 IST Report Abuse
Girija போன மாதம் அவ்வளவு கெஞ்சியும் தண்ணீர் திறக்க தரவில்லை. இவர்களுக்கு தேவை இல்லாதபோது திறந்து விட தமிழகம் என்ன சாக்கடையா? எங்களுக்கு தற்போது பதினைந்து டி எம் சி க்குமேல் தண்ணீர் தேவையில்லை என்று தமிழகம் எதிர்க்க வேண்டும். உபரி தண்ணீரை அந்த சிவகுமார் வீட்டுக்கு திருப்பிவிட சொல்லவும்.
Rate this:
Share this comment
Cancel
Suresh - Pondicherry ,இந்தியா
12-ஆக-201918:01:06 IST Report Abuse
Suresh காவேரி கர்நாடவுக்கே சொந்தம் என்று கூறினார்களே எதற்காக திறந்து விடுகிறார்கள் காவேரி தண்ணிரை அவர்களையே வைத்துக்கொள்ள சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
12-ஆக-201916:33:39 IST Report Abuse
jagan தமிழ் நாடு ஒரு ஆண்டு ஷேர் இப்பவே வந்து விட்டது. இனி ஒரு வருடம் டுமீலர் காவிரி நீர் புலம்பல் இருக்காது என்று நம்புவோம்.
Rate this:
Share this comment
Adhithyan - chennai,இந்தியா
12-ஆக-201918:27:38 IST Report Abuse
Adhithyan377 TMC வந்தாச்சா ? நீங்க உண்மையா தமிழனா இல்ல கன்னடம் பேசுற தமிழ் நாடு வாசியா ? வாழும் இடத்தின் மேல இவ்ளோ துவேசம் ஆகாது ......
Rate this:
Share this comment
siva - chicago,யூ.எஸ்.ஏ
12-ஆக-201920:45:01 IST Report Abuse
sivaதெரிகிறது....
Rate this:
Share this comment
Girija - Chennai,இந்தியா
12-ஆக-201921:48:25 IST Report Abuse
Girija178 டி எம் சி ஆண்டுக்கு தரவேண்டும். மேட்டூர் இரண்டு முறை நிரம்ப வேண்டும்....
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
13-ஆக-201906:24:56 IST Report Abuse
jagan377 .??..ஹா ஹா 176 தான் கோர்ட் தீர்ப்பு ...இப்போ பிரியுது ஏன் டுமீலர் கணக்கு தெரியாமல் ஒப்பாரி வைக்கிறார்கள் என்று...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X