மெகபூபாவுடன் மோதல்: வீட்டை காலி செய்த உமர்

Updated : ஆக 12, 2019 | Added : ஆக 12, 2019 | கருத்துகள் (72)
Advertisement

ஸ்ரீநகர் : பா.ஜ., தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வர்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹரி நிவாஸ் அரண்மனையை, உமர் அப்துல்லா காலி செய்துள்ளார்.






காஷ்மீருக்குள் பா.ஜ., நுழைவதற்கு நீங்கள் தான் காரணம் என மெகபூபாவும், உமரும் மாறி மாறி குற்றசாட்டிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் மெகபூபாவை கடுமையாக திட்டிய உமர், 2015 முதல் 2018 வரை பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தியது உங்களின் தந்தையும் மறைந்த முதல்வருமான முப்தி முகம்மது சையதும் தான் என குற்றம்சாட்டினார்.





இதற்கு பதிலளித்த மெகபூபா, உங்களின் தந்தை பரூக் அப்துல்லா தான் வாஜ்பாய் காலத்தில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தார். வாஜ்பாய் ஆட்சி காலத்தின் போது நீங்கள் வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருந்ததை மறந்து விட வேண்டாம் என சத்தமாக கூறினார். பா.ஜ.,வுடன் யார் முதலில் கூட்டணி வைத்தது என்பதில் துவங்கியது இவர்களின் மோதல், காஷ்மீரை பிரிக்கும் முடிவை யார் எடுத்தது என்பது வரை சென்றது.

சமீபத்தில் முத்தலாக் மசோதா பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட போது கூட உமர் மற்றும் மெகபூபா இடையே டுவிட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டது.





அரசு பங்களாவான ஹரி நிவாஸ் அரண்மனையில் கீழ்தளத்தில் உமர் அப்துல்லாவும், முதல் தளத்தில் மெகபூபாவும் வசித்து வந்தனர். கருத்து மோதல் காரணமாக தற்போது உமர் அப்துல்லா, ஹரி நிவாஸ் அரண்மனையை காலி செய்து விட்டு, வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் மகாதேவ் சிகரத்தின் அடிவாரத்தில் இருக்கும் தனது சொந்த வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் மெகபூபா தொடர்ந்து ஹரி நிவாஸ் அரண்மனையிலேயே இருந்து வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ESSEN - VA,யூ.எஸ்.ஏ
19-ஆக-201905:01:33 IST Report Abuse
ESSEN ஹரி நிவாஸ் ,மஹாதேவ் என்ற சொற்களை கேட்கும்போதே ,காஷ்மீர் ஒரு ஹிந்து பிரதேசம் என்றுதான் அடிக்காமல் அடித்து சொல்கிறதே .
Rate this:
Share this comment
Cancel
senthil - Pasumbalur,இந்தியா
18-ஆக-201916:16:30 IST Report Abuse
senthil Muruga வேல் நீங்க சொல்றது உண்மைதான். ஆனாலும் அதை ஆய்வு செய்து அறிந்து கொண்டேன். ஒரு பங்களாவில் இருவரும் நிம்மதியாக இருந்துள்ளனர். இதைப் பிரித்தவன் யாரோ யாரோ.
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
15-ஆக-201910:10:38 IST Report Abuse
Vaduvooraan அது ஏதோ செஞ்சிட்டு போறாய்ங்க..விடுங்க..ஆனா இந்த ஓமர் அப்துல்லாவ பாத்தீங்கன்னா அசப்புல நம்ம ராகுல் காந்தி மாதிரி இருக்காரு இல்ல?
Rate this:
Share this comment
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
17-ஆக-201901:15:11 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Nagaஆமாம். சரித்திரத்தை புரட்டி பார்த்தல் இவர்களுடைய தாத்தா ஷேக்அப்துல்லா ராகுலின் தாத்தா நேரு எல்லாம் ஒன்று விட்ட அண்ணன்தம்பிகள் தங்க. குடும்ப அரசியல்ங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X