பொது செய்தி

இந்தியா

கானகத்தில் மோடி: நிகழ்ச்சி எப்படி?

Updated : ஆக 12, 2019 | Added : ஆக 12, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement

புதுடில்லி : டிஸ்கவரி 'டிவி' சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியாளர் பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி இன்று (ஆக.,12) இரவு ஒளிபரப்பானது.latest tamil newsஉத்தரகண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்ட 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி பங்கேற்றார். சில மாதங்களுக்கு முன் படமாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் 180 நாடுகளில் ஒளிபரப்பானது.www.discoverychannel.co.inஎன்ற இணையதளத்திலும் ஒளிபரப்பப்பட்டது.


latest tamil news
நிகழ்ச்சி எப்படி:

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பட் தேசிய பூங்காவிற்குள் மோடியை அழைத்துச் செல்ல பியர் கிரில்ஸ் காத்திருப்பதுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. புலிகள் நடமாட்டத்தையும் கேமிரா காண்பிக்கிறது. இடி மின்னல் மழைக்கு நடுவே காட்டுக்கு பிரதமர் மோடி வந்தார். அதுவரை பிரதமரின் பாதுகாப்பு படையினர் வந்தனர்.


latest tamil news


Advertisement


பியர் கிரில்ஸ் உடன் நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று மோடி கூறுவதை காட்டுகிறார்கள். இருவரும் இயற்கை பற்றி பேசிக் கொண்டே நடக்கிறார்கள். அந்த சரணாலயம் பற்றியும் விலங்குகள், தாவரங்கள் பற்றியும் இயற்கையை பாதுகாப்பது பற்றியும் மோடி பேசிய படி செல்கிறார். மோடி மீது கை வைத்த படி சகஜமாக பேசுகிறார் பியர் கிரில்ஸ். ஒரு பெரிய நாட்டின் பிரதமராக இருந்தாலும் ரொம்ப சாதாரணமாக பழகுகிறார் மோடி.


latest tamil news‛இயற்கைக்கு எதிராக மனிதர்கள் தான் இருக்கிறார்கள். காடு ஆபத்தானது அல்ல' சொல்கிறார் மோடி. இருவரும் நடந்தே காட்டுக்குள் செல்கிறார்கள். அப்போது தான் பிறந்து வளர்ந்த கதையை கூறுகிறார் மோடி. ‛படிக்கும் போது நான் நல்ல மாணவனா என்று சொல்ல முடியாது. ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தேன் என்கிறார் மோடி. பியர் கிரில்ஸ்க்கு இணையாக சுறுசுறுப்பாக வேகமாக நடக்கிறார் மோடி. தற்காப்பிற்காக ஒரு கம்பில் கத்தியை கட்டி தற்காப்பு ஆயுதத்தை தயார் செய்கின்றனர் மோடியும் பியரும்.


latest tamil newsகடவுள் மீது நம்பிக்கை வைத்து வேலை செய்வோம் என்கிறார் மோடி. புலியிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு ஆயதத்தை இருவரும் தயார்படுத்துகின்றனர். அப்போது, பிரதமராக இருந்தாலும் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது தான் நோக்கம். மக்களின் கனவுகளை நிறைவேற்றுவது தான் என் சந்தோஷம் என்கிறார் பியர்.

முதலைகள் உள்ள ஆற்றில் நாம் செல்லப் போகிறோம் என்று பயமுறுத்துகிறார் பியர் கிரில்ஸ். இதற்கு பயப்படாத மோடி, குஜராத்தில் சிறு வயதில் ஆற்றில் குளிக்க செல்லும் போது ஒரு முதலை குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்தது பற்றியும் அவரது அம்மா இப்படி செய்யக்கூடாது, அது பாவம் என்று சொல்லியதையும் நினைவு கூர்கிறார் மோடி. எங்கள் வாழ்க்கையுடன் சுற்றுச்சூழல் கலந்தது. விறகு விற்கக் கூட என் பாட்டி அனுமதிக்கவில்லை என்கிறார் மோடி.உங்களுக்கு எப்போதாவது பயம் ஏற்பட்டது உண்டா என்று பியர் கேட்க, எனக்கு எப்போதும் பயமே ஏற்பட்டதில்லை, பதட்டமும் எப்போதும் இல்லை. நேர்மறையான எண்ணம் தான் இருக்கும். எதையும் நேர்மறையாகதான் பார்ப்பேன். இளைஞர்கள் வாழ்க்கையை தனித்தனியாக பார்க்கக்கூடாது. முழுமையாக பார்க்க வேண்டும்.


latest tamil newsமோடியும் பியர் கிரில்ஸ்ம் ஆற்றில் பயணம் செய்யக்கூடிய பரிசலை முதல் நாளே தான் தயாரித்து விட்டதாக பியர் கிரில்ஸ் கூறுகிறார். அந்த பரிசல் மிகவும் சாதாரணமாகவும் பாதுகாப்பு ஏற்பாடு எதுவும் இல்லாமல் இருந்தது. மோடி மட்டும் பரிசலில் ஏறி அமர்கிறார். பியர் கிரில்ஸ் பரிசலை பிடித்துக் கொண்டே ஆற்றின் போக்கிலே மிதந்து செல்கிறார். பாதுகாப்பு இல்லாத பரிசலில் பயணம் செய்தாலும் மோடியின் முகத்தில் எந்த பயமும் தெரியவில்லை. கடுமையான பயணங்களை இதற்கு முன் பார்த்திருக்கிறேன் என்கிறார் மோடி. சிறிது நேரத்தில் இருவரும் கரை இறங்குகிறார்கள்.

சுடுநீரில் கறிவேப்பிலையை போட்டு இருவரும் அருந்துகின்றனர். ஒரே பிளாஸ்கில் உள்ள பானத்தைத் தான் இருவரும் மாறிமாறி குடிக்கின்றனர்.

அப்போது மோடி, இயற்கையோடு ஒன்றி எப்படி வாழ்வது. இயற்கையிடம் இருந்து எதையாவது எடுக்க வேண்டும் என்றால் நாம் யோசிக்க வேண்டும். இந்த உலகத்தில் 50 வருடங்கள் கழித்து யாரும் நம்மிடம் கேள்வி கேட்க கூடாது. அதனால் இயற்கையை பாதுகாக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். இதன் பிறகு பலர் இந்தியாவுக்கு வருவர் என நினைக்கிறேன் என்கிறார் மோடி.


latest tamil newsபின், மோடி மீது கை வைத்து மோடிக்கும், இந்திய நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறார் பியர் கிரில்ஸ். பதிலுக்கு மனிதாபிமானத்தை குறிக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தை சொல்கிறார் மோடி.

இந்த பயணம் என் பழைய நாட்களை நினைவுபடுத்தியது. இது எனக்கு மிகவும் அற்புதமான அனுபவம். என்று கூறிவிட்டு, பாதுகாப்பு படையினருடன் புறப்படுகிறார் மோடி.நிகழ்ச்சி முழுக்க, பியர் கேள்விகள் கேட்பதும் மோடி பதில் அளிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தது.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
13-ஆக-201907:03:11 IST Report Abuse
Aaaaa அடடடடா
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-ஆக-201906:57:36 IST Report Abuse
Natarajan Ramanathan Vinothkumar, ......டெல்லியில் போராடியது விவசாயிகளே அல்ல. அந்த சமயம் நானும் டில்லியில்தான் இருந்தேன். நான் ஒருநாள் அய்யாக்கண்ணுவிடம், அய்யா இவ்வாறு செய்யாதீர்கள் என்று சொன்னதற்கு அங்கிருந்த கம்மிகள் என்னை அவரிடம் பேசவே விடவில்லை. போராட்டம் யார் நடத்துகிறார்கள் என்று அப்போது புரிந்தது அதே அய்யாக்கண்ணு இப்போது BJP யில்.
Rate this:
Cancel
POORMAN - ERODE,இந்தியா
13-ஆக-201906:49:03 IST Report Abuse
POORMAN காட்டில மோடி. That's all. Nothing special. If we compared with Obama episode, this is nothing.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X