மாநிலங்களில் மழை அளவு குறைந்தது

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 12, 2019 | கருத்துகள் (6)
Advertisement
மழை, மாநிலங்கள், வெள்ளம், ஆடைகள், முதலை, துயரம்

திருவனந்தபுரம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, கேரளாவின் பல மாவட்டங்களில், மழை நேற்று சற்று தணிந்தது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மலப்புரம் மற்றும் வயநாடு பகுதிகளில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.

மழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை,76 ஆக உயர்ந்துள்ளது 2.87 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; 88 பேரை காணவில்லை. அவர்களில், 50பேர் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த மாவட்டத்தில் மட்டும் பலியானோர், 24 பேர்; இங்கே தான், மாநிலத்திலேயே அதிகமானோர் பலியாகியுள்ளனர்.


ராகுல் வேண்டுகோள்


கேரளாவின், வயநாடு லோக்சபா தொகுதி, எம்.பி.,யான, காங்கிரஸ் முன்னாள் தலைவர், ராகுல், நேற்று முன்தினம் முதல், அந்த தொகுதியின் பல இடங்களை சுற்றிப் பார்த்து, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி வருகிறார். தன்னால் ஆன, அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக மக்களுக்கு உறுதியளித்தார். நேற்று அவர், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு, மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: தண்ணீர் பாட்டில்கள், பாய், போர்வை, உள்ளாடைகள், வேட்டிகள், நைட்டிகள், குழந்தைகள் உடைகள், சானிட்டரி நாப்கின், சோப், பற்பசை, குளோரின் மற்றும் பிளீச்சிங் பொடி அவசரமாக தேவைப்படுகிறது. மேலும், உணவுப் பொருட்கள், பிஸ்கட் போன்றவற்றையும், அனுப்பி வையுங்கள். இவ்வாறு, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கர்நாடகா


பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், எடியூரப்பா தலைமையிலான கர்நாடகாவில், இம்மாதம்,1 ம் தேதி முதல், மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில், 40பேர் இறந்துள்ளனர்; ௧௪ பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று மழை சற்று தணிந்திருந்ததால், மீட்பு மற்றும் நிவாரண பணிகள், வேகமாக நடந்தன. இந்த மாநிலத்தின், 14 மாவட்டங்கள், மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. வேகமாக நிரம்பிய அணைகளில் இருந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக, ஏராளமான தண்ணீர் திறந்து விடப்படுவதால், கரையோரங்களில் உள்ள மக்கள், வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், அந்த இடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை,5.81 லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 1168 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதல்வர் எடியூரப்பா, பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேற்றும் சுற்றிப் பார்த்தார்; தேவையான அனைத்து உதவிகளையும், துரிதமாக மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


மஹாராஷ்டிரா


பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிராவில், ஆறு நாட்களாக மூடப்பட்டிருந்த, மும்பை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, நேற்று திறக்கப்பட்டது. எட்டு நாட்களுக்கும் மேலாக தத்தளித்து வரும், கோலாப்பூர் மற்றும் சாங்கிலி மாவட்டங்களில், நேற்று மழை பெய்வது தணிந்திருந்தது. மஹாராஷ்டிராவின் மேற்கு மாவட்டங்களில், ராணுவம், விமானப்படை, கடற்படை, பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை ஆகியவற்றின், 105 குழுக்கள், மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதுவரை, 4.48 லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு, 5,௦௦௦ ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என, மாநில முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த, தேவேந்திர பட்னவிஸ் அறிவித்துள்ளார்.


உத்தரகண்ட்


உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் பேய் மழையால், மந்தாகினி நதியில் வெள்ளப் பெருக்கும். பல பகுதிகளில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. காட் என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், வீடுகள் புதைந்ததில், பலர் சிக்கிக் கொண்டனர்; ஒரு பெண் உயிரிழந்தார். இங்கு, ஆற்றின் கரையோரங்களில் கட்டப்பட்டிருந்த பல வீடுகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் இருந்த பலர், மாயமாகியுள்ளனர். இதுவரை, ஆறு பேர் இறந்துள்ளதாக, மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.


வீட்டின் கூரை மீது முதலை


கர்நாடகாவில், மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பெலகாவி மாவட்டத்தில், வீடு ஒன்றின் கூரை மீது, பெரிய முதலை, வாயைப் பிளந்தபடி இருந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் நேற்று பரவி, மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. ஆற்றங்கரையோரம் இருந்த வீடு ஒன்றின், கூரை மீது, பெரிய உருவம் ஒன்று அசைவதைப் பார்த்த சிலர், அது, முதலை என தெரிந்ததும், மொபைல் போனில், 'வீடியோ' படமாக எடுத்துள்ளனர். அதை, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். மேலும், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் வருவதற்குள், அந்த முதலை, தண்ணீரில் குதித்து மறைந்து விட்டது.


மகன் கையை பற்றியபடி இறந்த இளம் தாய்


மழை, வெள்ளம், நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, கேரளாவின், மலப்புரம் மாவட்டத்தில், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் கண்களை, ஒரு சோக காட்சி குளமாக்கியது. இரண்டு நாட்களுக்கு முன் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில், நேற்று மீட்புப் படையினர், மண்ணை தோண்டி எடுத்து, அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, மகனின் கையை இறுக பற்றியவாறு, தாய் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. கீது, 21, என்ற அந்த இளம் தாய், தன், 2 வயது மகன், துருவ் உடன், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, நிலச்சரிவு ஏற்பட்டு, மண்ணில் இருவரும் புதைந்தனர்.

சாவிலும் இணை பிரியாமல் இருக்க, தன் மகனின் கையை, அந்த தாய் இறுக பற்றியிருந்தார். இதைப் பார்த்தவர்கள், கண்ணீர் வடித்தனர். அதுபோல, ஏராளமான சோக காட்சிகளை, மலப்புரம் கொண்டுள்ளது. வீடுகளை இழந்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள், தனித்தனியாக பிரிந்த குடும்ப உறுப்பினர்கள் என, அந்த மாவட்டமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.


ஆடைகள் தானம் வியாபாரி தாராளம்


கேரளாவின் கொச்சி நகர வீதியில், ஜவுளி விற்கும், நவ்ஷாத், 35, என்பவர், விற்பனைக்காக வைத்திருந்த புதிய துணிகளை, மழை, வெள்ளத்தால் பாதித்துள்ள, கேரள மக்களுக்கு தானமாக வழங்கினார். இது குறித்து அவர் கூறியதாவது: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு, ஏராளமானார் அழைப்பு விடுத்தனர். நானும் பலரிடம், துணிகளை வழங்குமாறு கேட்டேன்; சிலர் உதவினர். அது போதாது என கருதியதால், விற்பனைக்காக வைத்திருந்த புதிய துணிகளையும் தானமாக வழங்கினேன்.

அதற்கு முன், அவற்றை, 10 சாக்கு மூட்டையில் கட்டுவதை, 'வீடியோ'வாக படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பரவ விட்டேன். அதைப் பார்த்தவர்கள், அதன்பின், உதவ முன்வந்தனர். இதற்கு முன்பும், இது போல செய்துள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை விட, பெரிய தொண்டு எதுவும் இருக்க முடியாது; தொடர்ந்து செய்வேன். இவ்வாறு, அவர் கூறினார்.


குறைந்த காற்றழுத்தம்


வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நாட்டின் மத்திய மாநிலங்கள் மற்றும் கேரளாவில், அதிக மழைப்பொழிவை ஏற்படுத்தும், என, இந்திய வானிலை ஆய்வு மையம், நேற்று தெரிவித்துள்ளது. வங்காள கடலின், கிழக்கு மற்றும் மத்திய பகுதியில், கடல் மட்டத்திலிருந்து, 3.1- 5.8 கி.மீ., உயரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது, காற்றின் சூறாவளி சுழற்சியால், அடுத்த, ௨௪ மணி நேரத்தில், வட மேற்கு பகுதிக்கு செல்லும்.
அப்போது, ஒடிசாவின் வடக்கு பகுதி, ஜார்க்கண்டின் தென் பகுதி, சத்தீஸ்கரின் வடக்கு, மத்திய பிரதேசத்தின் கிழக்கு பகுதிகளில் பலத்த மழைப்பொழிவை ஏற்படுத்தும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை ஆய்வு மையத்தின் துணைத் தலைவர், மகேஷ் பாலாவாத் கூறியுள்ளதாவது: கடந்த வாரம், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் பலத்த மழை பொழிவுக்கு காரணம், கேரள கடல் பகுதியில் காணப்பட்ட சூறாவளி சுழற்சி தான். எனவே, ஒடிசா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், விதர்பா மற்றும் கேரளாவில், ஆக., 13,14,15 ம் தேதிகளில் மழை சற்று குறையும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-ஆக-201908:07:09 IST Report Abuse
skv srinivasankrishnaveni தமிழகத்துலேந்து கள்ளத்தனமான அரிசி வாங்குறாங்களே விவசாயிகளுக்கு வேண்டி மழைநீரை தமிழகத்துக்கு திருப்பிவிட்டால் போதும் வீணாக அரபிக்கடலிலே சேராது புன்ணியமாகும் கம்யூனிஸ்டுகளை ஆட்ச்சி ஒளிஞ்சால்தான் கேரளாக்கு சூபிக்ஷம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
13-ஆக-201921:59:49 IST Report Abuse
தமிழ்வேள் சாதாரணமாக ஒரு வருடத்தில் மேற்கு நோக்கிய ஆறுகளால் அரபிக்கடலில் கலப்பது சுமார் 3500 டிஎம்சி தண்ணீர் அனைத்தும் வீணே ...அந்த நீரில் ஒரு பாதியளவாவது கிழக்கு நோக்கி திருப்பினால் அவர்களுக்கு வெள்ளப்பாதிப்பு இல்லை தமிழகத்தின் நீர் தேவை நிறைவேறும் இதற்கு முட்டுக்கட்டை போடுவது கேட்டால் தண்ணீர் கடலுக்கு செல்வது பாரம்பரியம் என்று கதைவிடுவது போன்றவைதான் அதிகம் இப்போது வெள்ளத்தால் சாகிறார்கள் இப்போதாவது அனைத்து நதிகள் நீராதாரங்களை தேசியமயமாக்கவேண்டும் தேவைப்பட்ட சாத்தியப்பட்ட திட்டங்கள் மூலம் உபரி நீர் வெள்ளநீர் வறண்ட பகுதிகளுக்கு திருப்பப்படவேண்டும் இனியும் காலம் தாழ்த்திடுவதை போன்ற ஒரு கேவலம் கிடையாது
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
13-ஆக-201908:48:35 IST Report Abuse
vasumathi நிலப்பகுதி குறைந்த கேரளா , பொறாமை இல்லாமல் தமிழகத்திற்கு தண்ணீர் தரலாம். இதனால் அனைவருக்கும் நன்மை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X