அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் கட்சியின் 'நமக்கே 2021'

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (36)
Share
Advertisement
கமல், 2021, நமதே, நமக்கே, ம.நீ.ம,சட்டசபை தேர்தல்

சென்னை : கமல் கட்சியில் விரிவாக்கப் பணிகள் நடக்க உள்ளன. இதற்கான விளக்கக் கூட்டம் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடக்கிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சி 2021ல் தமிழகத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க விரும்புகிறது. இதற்காக வார்டு தோறும் கட்சிப் பணிகளை நிறைவேற்ற ஏதுவாக விரிவாக்கப் பணிகள் நடக்க உள்ளன. இதுவரை மாவட்ட பொறுப்பாளர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களின் கீழ் நிர்வாகிகளும் தொண்டர்களும் பணியாற்றினர். இனி மாவட்ட தலைவர் அவருக்கு கீழ் செயல் தலைவர் இணை மற்றும் துணை செயலர் 10க்கும் மேற்பட்ட மாவட்ட கமிட்டியினர் நியமிக்கப்பட உள்ளனர். விரிவாக்கப் பணி குறித்த விளக்கக் கூட்டம் நாளை முதல் 16ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்க உள்ளது.

'2021 நமக்கான ஆட்சி' என்ற தலைப்பின் கீழ் நடக்க உள்ள இக்கூட்டம் மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட விருதுநகரிலும் நடக்க உள்ளது. இக்கூட்டத்திற்கு கட்சியின் துணை தலைவர் ஆர்.மகேந்திரன் பொதுச்செயலர் ஆ.அருணாச்சலம் பொருளாளர் ஏ.சந்திரசேகரன் ஆகியோர் தலைமை வகிக்க உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-ஆக-201908:34:35 IST Report Abuse
skv srinivasankrishnaveni தமிழா உனக்கெல்லாம் இந்தமாதிரிகூமுட்டைகளேதான் தேவையா?/நன்னப்படிச்ச அரைவழிகளை தேர்வு செய்யவேமாட்டீங்களா ?????ஏவாளும் உங்களைப்போல சினிமாகாராலை தன தள தலைவர்களா அமைச்சு அவளிடம் ஆஸ்ச்சியும் மாநிலத்தையும் தந்துட்டு மணல் கொள்ளை சிலைகல்கொள்ளை இருகாசு கொடிகளிலே சேர்த்துண்டு தமிழகத்தையே அழிச்சுண்டு நிக்கும் கேவலம்களேதான் தேவையா என்று யோசிக்கவேமாட்டீங்க போலிருக்கே சினிமால உருண்டைகன் மூனுமானிலே நல்லாட்ச்சியைத்தருவான் பலகோடி சம்பளம் பாங்கிண்டுபோயின்நெஇருக்கானுக +அரசியலுக்குவந்தும் ஆட்டம்போட்டுண்டுபலதலைமுறைக்கு சொத்து சேர்த்துட்டு அவனது வாரிசுகளே ஆளவேண்டும் என்று ஒரு மாயை ஏற்படுத்துகிறான் இந்தையாவின் எந்தமாநிலமலேயும் மக்களை எந்த நடைக்கணும் தனது அடிமைகளா ஆக்கவே இல்லீங்க சினிமாலே ரசிச்சுட்டுப்போயினனேஇருக்கானுக தமிழ்நாட்டுலே வெறியா திரியுதுங்க அவாளுக்கு சிலை கோயில் கட்டிண்டு மாவிளக்குபோடுறேன் வேப்பிலைக்காவடி எடுப்பேன்னு ஆட்டம்போடுத்துங்க அதிமுக திமுக ரெண்டும் பெரீஈயகட்ச்சி ஆனால் அதுலே எவ்ளோதொண்டனுக்கு சொந்தமா குடிசையாச்சும் இருக்குதா ஓசில பிரியாணி அண்ட் தண்ணீ கிடைச்சாலேபோதும் என்று திரியும் கூட்ட்ங்களேதான் தேவை இவைகளுக்கு வெட்கமே இல்லாமல் ஊசல்வடைகளேதான் எல்லா தொண்டனுகளும் தன்மானம் சுயகவுரவம் எதுவும் இல்லாத பரிதாபங்களே
Rate this:
Cancel
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
14-ஆக-201906:10:16 IST Report Abuse
Nagarajan Duraisamy சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது..
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-ஆக-201922:41:18 IST Report Abuse
Rajagopal மிகவும் சிறந்த முறையில், எல்லா ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து, அழகாகத் திட்டமிட்டு, இன்னும் இரண்டாண்டுகளில் வரும் தேர்தலில் தோற்று, டெபாசிட் போவதற்கு மக்கள் நீதி மையம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இதில் உலக நாயகன் போண்டியாவாரா என்பதுதான் கேள்வி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X