அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி பாராட்டு பேச்சு: அழகிரி, பீட்டர் பதிலடி

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (76)
Advertisement
ரஜினி பாராட்டு பேச்சு: அழகிரி, பீட்டர் பதிலடி

சென்னை : பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், 'கிருஷ்ணர் - அர்ஜுனர் போன்றவர்கள்' என, நடிகர் ரஜினி பாராட்டி பேசியதை, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

சென்னையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய, புத்தக வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினி பேசுகையில், 'மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன். மோடியும், அமித்ஷாவும், கிருஷ்ணர் - அர்ஜுனர் போன்றவர்கள்' என, பாராட்டினார்.சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடந்த, காஷ்மீர் உரிமை பறிப்பு கண்டன கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், 'மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள் என, ரஜினி கூறுகிறார். இனி, நடக்கப்போவது பாஞ்சாலி சபதமா; கீதா உபதேசமா என்பதை, வரலாறு தான் முடிவு செய்யும்' என்றார்.

அவரைத் தொடர்ந்து, கே.எஸ்.அழகிரி, நேற்று வெளியிட்ட அறிக்கை: காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை, ரஜினி பாராட்டியுள்ளார். அவரிடம், இதை எதிர்பார்க்கவில்லை. மோடியையும், அமித்ஷாவையும், கிருஷ்ணர் என்றும், அர்ஜுனனர் என்றும், ரஜினி சொல்கிறார்.இவர்கள், கிருஷ்ணரும், அர்ஜுனரும் அல்ல. பல கோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்கள், எப்படி கிருஷ்ணராகவும், அர்ஜுனராகவும் இருக்க முடியும். ரஜினி, தயவு செய்து, மகாபாரதத்தை திரும்பவும், சரியாக படிக்க வேண்டும்.இவ்வாறு, அழகிரி கூறியுள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
16-ஆக-201915:28:06 IST Report Abuse
I love Bharatham அழகிரி நா...எங்களுக்கு மு க வை தான் தெரியும் .....பாத்து நியூஸ் போடுங்க ப்ளீஸ்
Rate this:
Share this comment
Cancel
Karunan - udumalpet,இந்தியா
16-ஆக-201906:56:55 IST Report Abuse
Karunan எதிலெல்லாம் அரசியல் கூடாது என்று ரஜினிக்கு தெரிந்ததெல்லாம் இந்த பேமானிகளுக்கு தெரியலையே
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
14-ஆக-201915:07:37 IST Report Abuse
Ramalingam Shanmugam நீ இத்தாலிக்கு காவடி தூக்கிறவன் நீ உன் மதத்திற்கு தான் பேசுகிறாய் 10% கலெக்ஷன் பண்ணரீன்களே எங்கே போகுது யோக்கியன் மாதிரி பேசுகிறீர்கள் அதற்க்கு கணக்கு கொடுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X