பா.ஜ வளர்ச்சி : அப்துல்லா,மெஹபூபா சண்டை

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (12+ 72)
Advertisement
அப்துல்லா, மெஹபூபா, பா.ஜ வளர்ச்சி, காஷ்மீர், சண்டை

ஸ்ரீநகர்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு, அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ள, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான, ஒமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி இடையே வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது. மாநிலத்தில், பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு உதவியதாக, பரஸ்பரம் இருவரும் சண்டையிட்டு உள்ளனர். அதையடுத்து, ஒமர் அப்துல்லா, வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.


நீக்கப்பட்டது


ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அசம்பாவிதம் நடக்காமல் தடுப்பதற்காக, ஜம்மு - காஷ்மீரில், துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் முதல்வர்களான, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர், பரூக் அப்துல்லா, அவருடைய மகனும், கட்சியின் துணைத் தலைவருமான, ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர், மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இதில், ஒமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி கைது செய்யப்பட்டு, அரசின் விருந்தினர் மாளிகையான, 'ஹரி நிவாஸ் பேலஸில்' தங்க வைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், முத்தலாக் மசோதா, பார்லிமென்டில் நிறைவேறியபோது, ஒமர் மற்றும் மெஹபூபா, சமூக வலைதளத்தில், பரஸ்பரம் புகார் கூறி கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.


வாக்குவாதம்


இந்நிலையில், தற்போது, அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ள இருவரும், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக, அதை நிர்வகித்து வரும் அதிகாரிகள் கூறினர். 'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பா.ஜ., வளர்ச்சிக்கு, நீங்களும், உங்களுடைய தந்தையும் முன்னாள் முதல்வருமான, முப்தி முகமது சயீதும் தான் காரணம். நீங்கள் தான், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தீர்கள்' என, ஒமர் அப்துல்லா குற்றம்சாட்டினார்.

அதற்கு, 'உங்களுடைய தந்தை, பரூக் அப்துல்லாதான், பா.ஜ.,வுடன் முதலில் கூட்டணி அமைத்தார். 'வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, நீங்களும் இணையமைச்சராக பணியாற்றினீர்கள். 'உங்களுடைய தாத்தா, ஷேக் அப்துல்லாதான், இந்தியாவுடன் காஷ்மீர் இணைவதற்கு காரணம்' என, மெஹபூபா முப்தி எதிர்தாக்குதல் நடத்தினார்.


இருவரும் பரஸ்பரம்


நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பிரச்னையை சமாளிக்க, சேஸ்மாஷாஹியில் வனத் துறைக்கு சொந்தமான அரசு விருந்தினர் மாளிகைக்கு, ஒமர் அப்துல்லா மாற்றப்பட்டு உள்ளார்.


தனிமையில் கொண்டாட்டம்!


ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான, பரூக் அப்துல்லா, வீட்டுக் காவலிலும், கைது செய்யப்பட்டுள்ள ஒமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி, அரசு விருந்தினர் மாளிகையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பக்ரீத் பண்டிகையை, நேற்று தனிமையில், அமைதியான முறையில் கொண்டாடினர். வழக்கமாக, பக்ரீத்தின் போது, இவர்களுடைய வீட்டில், உறவினர்கள், நண்பர்கள், கட்சி நிர்வாகிகள் என, பலரும், குவிந்திருப்பர். கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் வீட்டுக் காவல் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால், அவர்களும், இந்த பக்ரீத்தை, தனிமையில் கொண்டாட வேண்டியதாயிற்று.

Advertisement




வாசகர் கருத்து (12+ 72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
18-ஆக-201915:05:22 IST Report Abuse
Rafi முன்னாள் முதல்வர்கள், இந்த தேசத்தை ஏற்று ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி புரிந்தவர்கள், அவர்களோடு தோளாக தோல் இருந்து ஆட்சி புரிந்து வந்த கட்சி பிஜேபி என்பதை நாடு நன்றாக அறியும். இப்போது ஏன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதற்கான காரணத்தை அரசு தெரிவிக்க வில்லை.
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-ஆக-201907:59:41 IST Report Abuse
skv srinivasankrishnaveni எலிகள் தனி வளைலேதான் இருக்கும் எலிவளை ஆனாலும் தனிவளை என்பது பழமொழி .அதுவேதான் எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும் பிஜேபி லேயேகூட எல்லோரும் ஒரே கருத்துடன் இருக்க வாய்ப்பே இல்லீங்க மனுஷ இயல்பு அது , சைக்காலஜியும் கூட கருவறையிலேயே துவங்குது இது , எந்தக்குழந்தையும் சார்ந்து இல்லீங்க தனக்குத்தேவையானதையே தான் எடுத்துக்கும் கருவில் உள்ள குழந்தை என்பது விஞ்ஞானம் அந்த இயல்பு இறக்கும் வரை மனித ஜின்லெ இருக்குங்க , கண்ணதாசன் பிள்ளை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவது அன்னை வளர்ப்பது லே என்பதுபோல தலைவனை எல்லாவற்றிலும் பாலோ பண்ணும் தொண்டாள் எல்லாம் தனக்கென்று ஒரு வலியும் வச்சுண்டுருப்பாங்க அரசியலிலே இது ரொம்பவே சகஜம் அதுவேதான் கட்ச்சிமாறுவதுலே கண்கூடாவே தெரியுதுங்கோ
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
13-ஆக-201921:15:25 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்த கிளிகளுக்கு தங்க கூண்டு எதற்கு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X