அரசியல் செய்தி

தமிழ்நாடு

இளைஞரணியினருக்கு உதயநிதி விருந்து: நட்சத்திர ஓட்டலில் தடபுடல் ஏற்பாடு

Added : ஆக 13, 2019
Share
Advertisement

தி.மு.க., இளைஞரணி செயலரும், ஸ்டாலின் மகனுமான, உதயநிதி, வரும், 25ல், இளைஞரணி நிர்வாகிகளுக்கு, நட்சத்திர ஓட்டலில் தடபுடல் விருந்து அளிக்க உள்ளார்.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்ற தும், மாநில இளைஞரணி செயலராக, உதயநிதி நியமிக்கப்பட்டார். பிரசாரம்அதைத் தொடர்ந்து, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தினார். மாவட்ட வாரியாக, இளைஞரணி நிர்வாகிகளை, அன்பகத்திற்கு அழைத்து பேசினார்.வேலுார் லோக்சபா தேர்தலில், இளைஞரணியினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்; உதயநிதியும் பிரசாரம் செய்தார். ஆனால், குறைந்த ஓட்டு கள் வித்தியாசத்தில் தான், தி.மு.க., வெற்றி பெற்றது. இதனால், உதயநிதி அதிர்ச்சி அடைந்தார்.வரும் உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மாவட்ட வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி, இளைஞரணியை பலப்படுத்தவும், உள்ளாட்சி தேர்தலில், இளைஞர் அணியினரை களமிறக்கவும், உதயநிதி திட்டமிட்டுள்ளார்.ஹில்டன் ஓட்டல்இந்த சுற்றுப்பயணத்தின் போது, கிராமம்தோறும் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடத்தவும் விரும்புகிறார். இதுபற்றி, மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன், வரும், 25ம் தேதி, சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார்.
அப்போது, அவரது பயணத் திட்டம் விவரிக்கப்பட உள்ளது.இதில் பங்கேற்க வரும், அனைத்து இளைஞரணி நிர்வாகிகளுக்கும், சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், தடபுடலாக மதிய விருந்து அளிக்க, உதயநிதி ஏற்பாடு செய்துள்ளார்.இது குறித்து, உதயநிதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தி.மு.க., இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம், வரும், 25ல், சென்னை, கிண்டியில் உள்ள, ஹில்டன் ஓட்டலில் நடைபெறவுள்ளது' என, கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X