அரசியல் செய்தி

தமிழ்நாடு

'குறை சொல்வதே ஸ்டாலின் வழக்கம்!'

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
Stalin, OPS, ஓ.பி.எஸ், ஸ்டாலின், குறை,மேட்டூர், நீர்பிடிப்பு

சென்னை : அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், நேற்று கட்சி தலைமை அலுவலகம் வந்து, ஒரு மணி நேரம், கட்சி பணிகளை கவனித்தார்.அவர், கட்சியின் பொருளாளராகவும் இருப்பதால், சில காசோலைகளில் கையெழுத்திட வந்ததாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

பின், துணை முதல்வர், பன்னீர்செல்வம், நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் நீர்பிடிப்பு பகுதிகளிலும், கர்நாடக மாநிலத்திலும், தென் மேற்கு பருவ மழை, அதிக அளவு பெய்தது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு, 2.04 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், டெல்டா விவசாயிகள், மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நீலகிரியில், அளவுக்கு அதிகமான மழை பெய்துள்ளது. அங்கு, கன மழை பெய்யும் என, தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தகவல் கிடைத்ததும், வருவாய் துறை அமைச்சர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோரை, முதல்வர் அனுப்பினார். அவர்கள், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அரசை குறை கூறுவதை, வாடிக்கையாக வைத்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
16-ஆக-201917:55:54 IST Report Abuse
K.n. Dhasarathan வழக்கம் என்று சொல்லலாமா .
Rate this:
Cancel
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
14-ஆக-201907:01:43 IST Report Abuse
Nagarajan Duraisamy "நாங்கெல்லாம் குறையே சொல்லாம ஆதரவு தூக்கியே முதல்வரானவங்க" இப்படிக்கு அ கு மு க பன்னீர் செல்வம்.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
13-ஆக-201920:50:04 IST Report Abuse
M.COM.N.K.K. மிக மிக சரியானதே புயல் வந்தாலும் சரி சுனாமி வந்தாலும் சரி அதுவும் ஆளும் காட்சியால்தான் வந்தது என்று சொல்லுவார்.குறைசொல்வதே குறைசொல்வோர்க்கு பெருமை சரிதானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X