பொது செய்தி

தமிழ்நாடு

58ஆண்டுகளில் இல்லாத வெள்ளம் வெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல்

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஒகேனக்கல், வெள்ளம், மேட்டூர், காவிரி, நீர்பிடிப்பு, மழை

பென்னாகரம் : காவிரியாற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வினாடிக்கு, இரண்டு லட்சத்து, 85 ஆயிரம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கடந்த, 58 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தண்ணீர் வரத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகா அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள், முழு கொள்ளளவை எட்டியதால், அங்கு வரும் உபரிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு, மூன்று லட்சம் கன அடி உபரி நீர், திறக்கப்பட்டது. இது, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

அங்குள்ள மத்திய நீர் ஆணைய கணக்கீடு படி, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து, 50 ஆயிரம் கன அடி நீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, வினாடிக்கு இரண்டு லட்சத்து, 20 ஆயிரம் கன அடி, மாலை, 4:00 மணிக்கு, வினாடிக்கு இரண்டு லட்சத்து, 85 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனால், ஒகேனக்கல்லில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை தண்ணீரில் மூழ்கியது. அருவிகள் அனைத்தும் தெரியாமல் வெள்ளக்காடாக மாறியுள்ளது. தொங்குபாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. கடந்த, 58 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தண்ணீர் வந்துள்ளதாக மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊட்டமலை, ஆலம்பாடி, சத்திரம், நாடர் கொட்டாய், இந்திரா நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு, அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆற்றில் யாரும் இறங்காதவாறு, போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், ஊர்க்காவல் படை வீரர்கள், வருவாய் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, ஐந்தாவது நாளாக ஆற்றில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும், மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17-ஆக-201914:14:07 IST Report Abuse
skv srinivasankrishnaveni இயற்கை வஞ்சிக்கலீங்க நம்மை ஆளும் அண்ட் ஆளாதகட்ச்சியும்தான் வஞ்சனை செய்ரதுகள் அவ்ளோ பணவெறியால் இப்படியேபோனால் அவ்ளோதான் எல்லாமே நிர்மூலமாயிடும்
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
13-ஆக-201915:30:18 IST Report Abuse
Ashanmugam ஒகேநக்கலில் மழை வெள்ளப் பெருக்கு கட்டுக்கு மீறி கரைபுரண்டு ஓடுகிறது. இதனை சரியான முறையில் பயன் படுத்த தமிழக அரசு திக்கு முக்காடுகிறது. நிர்வாக கோலாறு தான் முக்கிய காரணம். எங்கோ பெய்கிற மழை தமிழ் நாட்டிற்கு தானமாக வருகிறது. அதனை சரியான முறையில் அணை தடுப்பான் மூலம் சேமித்து வைத்தாலே போதும், தமிழக மக்கள் தண்ணீருக்கு தவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
13-ஆக-201905:17:02 IST Report Abuse
Mani . V "ஹல்லோ, எவ்வளவு லட்சம் கன அடி தண்ணீர் வந்தாலும் அதை நாங்கள் பத்திரமாக கடலில் சேமிக்க தயாராக உள்ளோம்".
Rate this:
atara - Pune,இந்தியா
17-ஆக-201914:49:31 IST Report Abuse
ataraIn Tamilnadu Stalin and group will raise sound that sea level water is reduced by 1 inches and Sea fishes need water to live Shake park in Aadayar needs frogs where now frogs is problem in getting drinking water or to swim in water....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X