அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க.,விற்கு கிடைத்தது தோல்விகரமான வெற்றி'

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
 'தி.மு.க.,விற்கு கிடைத்தது தோல்விகரமான வெற்றி'

சென்னை:''வேலுாரில், அ.தி.மு.க.,விற்கு கிடைத்தது, வெற்றிகரமான தோல்வி; தி.மு.க.,விற்கு கிடைத்தது, தோல்விகரமான வெற்றி,'' என்று, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை தெரிவித்தார்.
.'தமிழிசை, ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு பேசட்டும்' என, கனிமொழி கூறுகிறார். இவர்கள், ஒரு எம்.பி., கூட இல்லாதபோது, பேசாமல் இருந்தனரா... திருமங்கலம் பார்முலாவை பின்பற்றாமல் நில்லுங்கள்; அப்போது, யார் வெற்றி பெறுவார் என, பார்ப்போம். நாங்கள் என்றும் வெற்றி பெறப் போகிறவர்கள். ஜனநாயகத்தில், அனைவருக்கும் கருத்து கூற உரிமை உண்டு. என்னை பொறுத்தவரை, வேலுாரில், தி.மு.க.,விற்கு கிடைத்தது தோல்வி தான். அ.தி.மு.க.,விற்கு கிடைத்தது, வெற்றிகரமான தோல்வி. தி.மு.க.,விற்கு கிடைத்தது, தோல்விகரமான வெற்றி.'காங்கிரஸ் குற்றவாளி' என, வைகோ கூறுவதை ஒப்புக் கொள்கிறேன்; அந்த குற்றவாளியோடு, வைகோ ஏன் கூட்டணி வைத்தார். தனக்கு பதவி என்று வரும்போது, குற்றம் தெரியவில்லை. காங்கிரசுடன் இருந்த, தி.மு.க.,வும் குற்றவாளி தான். இரு கட்சிகளும் இலங்கை பிரச்னையை மோசமாக கையாண்டன.மோடியை எதிர்த்து கேள்வி கேட்கும் வைகோவால், ஏன் சோனியா, மன்மோகன் சிங்கிடம் கேள்வி கேட்க முடியவில்லை. எதிர்ப்போரையும் தாயுள்ளத்துடன் ஏற்று உபசரிக்கும் குணம், பிரதமர் மோடியிடம் உள்ளது. இவ்வாறு, தமிழிசை கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
13-ஆக-201922:09:01 IST Report Abuse
oce தோல்வியடைந்தால் வாக்கு பெட்டியின் மீது பழி போடுவார்கள். தேர்தல் ஆணையம் ஒரு தலை பட்சமாக செயல் பட்டது என்று சொல்வார்கள். வெற்றி பெற்றால் கண் மண் தெரியாமல் நடு தெருவில் குடித்து விட்டு ஆட்டம் போடுவார்கள். மக்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் உண்டு என்பார்கள்.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
13-ஆக-201921:19:46 IST Report Abuse
Krishnamurthy Venkatesan "மோடியை எதிர்த்து கேள்வி கேட்கும் வைகோவால், ஏன் சோனியா, மன்மோகன் சிங்கிடம் கேள்வி கேட்க முடியவில்லை"சரியான சவுக்கடி. தமிழிசை அவர்களுக்கு பாராட்டுக்கள். சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது HE (VAIKO) should have requested Soniyaji to instruct Karnataka Govt (when cong/their alliance ruled the state) to release water from Kaveri. He is a selfishman.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
13-ஆக-201919:54:59 IST Report Abuse
Girija ஒண்ணு தானா திருந்தணும் அல்லது அடுத்தவங்க சொல்லியாவது திருந்தணும் தமிழ்நாட்டு அரசியலில் வாரிசுகள் தேறாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X