சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்கில் பெண்தொழிலதிபர் கைது

Added : ஆக 13, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிலை கடத்தல் வழக்கில் பெண்தொழிலதிபர் கைது

சென்னை:பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 11 பஞ்சலோக சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த, பிரான்ஸ் நாட்டு பெண் தொழில் அதிபரை, போலீசார் கைது செய்தனர்.

பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர், மரிய தெரசா வனினா ஆனந்தி, 34. தொழில் அதிபரான இவர், கணவருடன் சேர்ந்து, சிலை கடத்தலில் ஈடுபட்டார். இவரது பங்களா, புதுச்சேரி, உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் அருகே உள்ளது. இங்கு, 2016ல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்கவேல் தலைமை யிலான போலீசார், சோதனை நடத்தினர்.அப்போது, கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 11 பஞ்சலோக சிலைகளை மீட்டனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, மரிய தெரசா வனினா ஆனந்தி, கணவருடன், பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி விட்டார். அவர் நேற்று, மஸ்கட்டில் இருந்து, ஓமன் ஏர்லைன்சில், சென்னை விமான நிலையம் வந்த போது, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் இவர், 30க்கும் மேற்பட்ட சிலைகளை கடத்தி விற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இவரது கணவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Chennai ,இந்தியா
13-ஆக-201911:58:57 IST Report Abuse
Krish பொன் Manickam இன்னும் நிறைய நல்ல போலீசாரை உருவாக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X