சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : ஆக 13, 2019
Share
Advertisement

வழிப்பறி செய்த ரவுடி கைது
திருமங்கலம்: மதுரை அவனியாபுரம் சின்னஉடைப்பு உலகநாதன் மகன் பாலச்சந்திரன் 30. இவர் திருமங்கலம்நான்குவழிச்சாலையில் சுந்தர்ராஜ் என்பவரை கத்தியால்மிரட்டி பணத்தை பறித்தார். பாலச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

மானபங்க முயற்சி

திருமங்கலம்: சிந்துபட்டி அரகே வேப்பனுாத்தை சேர்ந்த 45 வயது பெண்ணை அதே ஊரை சேர்ந்த கல்லுாரி மாணவர் ராஜேந்திரன் மானபங்கப்படுத்த முயன்றார். அவரை சிந்துபட்டி போலீசார் கைது செய்தனர்.

ஆடு திருட முயன்ற முதியவர் கைது

திருமங்கலம்: சாக்கிலியபட்டி கார்த்தி ஆடுகள் வளர்க்கிறார். இவரது கொட்டத்தில் இருந்து அழகர் 65, பாண்டி 52, ஆகியோர் ஆடுகளை நேற்றுமுன்தினம் இரவு திருட முயன்றனர். கிராமத்தினர் பிடிக்க முயன்ற போது பாண்டி தப்பி விட்டார். சிந்துபட்டி போலீசில் அழகர் ஒப்படைக்கப்பட்டார்.

மது விற்ற 2 பேர் கைது

பேரையூர்: விஜயநாகையாபுரத்தில் போலீசார் ரோந்து சென்றனர். ஆவாரம்பட்டியில் மது விற்ற செல்வராஜை 35, கைது செய்து 46 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அனுமதியின்றி மது விற்ற வண்டபுலி பொன்ராஜையும் 40, கைது செய்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.ரவுடி கொலையில் மூவர் கைதுவிக்கிரமங்கலம்: அய்யம்பட்டி மலை அடிவாரத்தில்ஆக.,9 இரவு திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்த ரவுடி சக்தீஸ்வரன் 26, போதை தகராறில் எரித்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் நரியம்பட்டி அருண்குமார் 20, சூர்யபிரகாஷ் 21, ராமு 21, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். உமாசங்கர் உட்பட மூன்று பேரை தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் வழிப்பறி

மதுரை: பரசுராமன்பட்டி சாந்திநகர் சுரேஷ் மனைவி ஜெயலட்சுமி 43. நேற்று முன்தினம் பரசுராமன்பட்டி ரோட்டில் டூவீலரில் கணவருடன் சென்ற போது மர்ம நபர்கள் இருவர் ஜெயலட்சுமி அணிந்திருந்த ஐந்து பவுன் தாலி செயினை பறித்து தப்பினர். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.மூவருக்கு அரிவாள் வெட்டுமதுரை: காமராஜபுரம் இந்திராநகர் சதீஷ்குமார் 21. இவருக்கும், அவனியாபுரம் செல்வமுருகனுக்கும் முன் விரோதம் இருந்தது. நேற்று முன் தினம் பழைய குயவர்பாளையம் ரோட்டில் சென்ற சதீஷ்குமாரை செல்வமுருகன், செல்வகுமார், முனியசாமி ஆகியோர் அரிவாளால் வெட்டினர். தடுக்க முயன்ற சதீஷ்குமாரின் அண்ணன் இசக்கிமுத்து, நண்பர் செந்தில்குமாருக்கும்வெட்டு விழுந்தது. காயமுற்ற மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தெப்பக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கள்ள நோட்டு: ஒருவர் கைது

மதுரை: ஊமச்சிகுளம் திருமால்புரம் சரவணன் 32. பெட்ரோல் பங்க் ஊழியர். இவரது பங்க்கில் நேற்று முன்தினம் ஆத்திகுளம் ஏஞ்சல்நகர் கங்கா தெருவை சேர்ந்த பிரசன்னா 27, டூவீலரில் 50 ரூபாய் கொடுத்து பெட்ரோல் நிரப்பினார். 50 ரூபாய் கள்ள நோட்டு என தெரிந்தது. பிரசன்னாவை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒன்பது 100 ரூபாய், மூன்று 50 ரூபாய் கள்ள நோட்டுகளை கைப்பற்றினர்.
கஞ்சா வழக்கு; மூவர் கைது

மதுரை: யாகப்பாநகர் பள்ளிவாசல் தெரு முத்துக்குமார் 46. முத்துக்குமார் மகன் சுந்தரபாண்டி 19. செல்லுார் சுயராஜ்யபுரம் 6வது தெரு பாலமுருகன் மகன் முத்துவேல் 19. இவர்களை கஞ்சாவை பதுக்கி வைத்துஇருந்தாக செல்லுார் போலீசார் கைது செய்தனர். நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X