ஹாங்காங்கில் தொடர் போராட்டம்: விமான நிலையம் முற்றுகை

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஹாங்காங் விமான நிலையம் முற்றுகை

பீஜிங்: சீனா கொண்டு வந்துள்ள மசோதாவிற்கு எதிராக ஹாங்காங் ஆர்ப்பாட்டக்கார்கள் சர்வதேச விமான நிலையத்தினை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்டை நாடான, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள, தன்னாட்சி பிரதேசம் ஹாங்காங். இங்கு, கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோரை, சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை நடத்தும் வகையிலான மசோதா, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங் மக்கள் தொடர் முழக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில் நேற்று ஹாங்காங். சர்வதேச விமான நிலையத்தினை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
இதையடுத்து விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஹாங்காங்கிலிருந்து விமானப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் யாரும் விமான நிலையம் வர வேண்டாம். இவ்வாறு விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-201918:52:54 IST Report Abuse
ஆப்பு சீனாவுக்கு ஹாங்காங் பிரச்சனை. அதனால் காஷ்மீரில் தலையிடாது. நம்ம ஜெய்யும் பிரச்சனை எதுவும் இல்லேன்னு பேசிட்டாரு. ராமர் சிலை ஆர்டர்தான் பாக்கி.
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
13-ஆக-201915:35:45 IST Report Abuse
kumzi 99 வருட ஆட்சியில் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் குற்றவாளிகளை உருவாக்கியதே பிரித்தானியாவின் சாதனை
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
13-ஆக-201913:39:55 IST Report Abuse
mohan குற்றவாளிகளை தான் நாடு கடத்துகிறது... இதில் என்ன தப்பு...அப்படியென்றால், ஹாங்காங் மக்கள் எல்லாரும்.....????....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X