'கலெக் ஷனில்' கல்லா கட்டும் தம்பதி... 'மாமூல்' வசூலிக்க ஏரியா பிரித்து சரிபாதி

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | |
Advertisement
அத்திவரதரை தரிசனம் செய்து விட்டு வந்த சித்ரா, மறுநாள் வகுப்புக்கு செல்ல தேவையான நோட்ஸ்களை எழுதி கொண்டிருந்தாள். அவள் வீட்டுக்கு 'சர்ப்ரைஸ் விசிட்' செய்தாள் மித்ரா.''ஏய்... மித்து. என்ன சொல்லாமல், கொள்ளாமல் வந்து நிற்கிறாய். வா... வா..!'' என்ற சித்ரா, ''மம்மி, ப்ளீஸ் ரெண்டு கப் டீ'' சொன்ன சித்ரா, ''உட்கார்டி'' என்றாள்.''அக்கா... நீங்க அக்கவுன்ட்ஸ் படிக்கறத
'கலெக் ஷனில்' கல்லா கட்டும் தம்பதி... 'மாமூல்' வசூலிக்க ஏரியா பிரித்து சரிபாதி

அத்திவரதரை தரிசனம் செய்து விட்டு வந்த சித்ரா, மறுநாள் வகுப்புக்கு செல்ல தேவையான நோட்ஸ்களை எழுதி கொண்டிருந்தாள். அவள் வீட்டுக்கு 'சர்ப்ரைஸ் விசிட்' செய்தாள் மித்ரா.''ஏய்... மித்து. என்ன சொல்லாமல், கொள்ளாமல் வந்து நிற்கிறாய். வா... வா..!'' என்ற சித்ரா, ''மம்மி, ப்ளீஸ் ரெண்டு கப் டீ'' சொன்ன சித்ரா, ''உட்கார்டி'' என்றாள்.
''அக்கா... நீங்க அக்கவுன்ட்ஸ் படிக்கறத பார்த்தா, எனக்கு யூனியன் பத்தி ஒரு மேட்டர் நினைவுக்கு வருது,''''என்ன மேட்டர்?''''தனிநபர் இல்ல கழிப்பிட திட்டத்துல, ஒரு வீட்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கறாங்க. மத்திய அரசு, 'பண்ட்' வர லேட் ஆனதால, யூனியன் பொது நிதியை பயன்படுத்த சொல்லியிருக்காங்க. அதை பயன்படுத்தி இருக்காங்களானு, பார்க்க வேண்டிய இரண்டு ஆபீசர்ஸ், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கறாங்களாம். இல்லைன்னா, சர்டிபிகேட் தர முடியாதுன்னு, மிரட்றாங்களாம்,''''ரொக்க புத்தகம் சரிபார்க்கவே இவ்வளவு கேட்கறாங்களே. ஓவர் ஆட்டம் போடற சிலர அடக்கி வைக்கணும்னு, பி.டி.ஓ.,கள் வெளிப்படையாவே பேச ஆரம்பிச்சிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.''கொங்கணகிரி கோவிலில், 'பழநிவேல்' எடுத்த 'ஆனந்தமாக' ஆடுறதை நாளைக்கு போய் பார்க்கோணும், ''என்ற மித்ரா,''சொந்த வண்டிக்கும், 'தமிழ்நாடு அரசு'னு எழுதி ஓட்றாங்களாம், இதுல பிரச்னை வராதா...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''பிரச்னை வராம இருக்காது; ஆனா,, எப்ப பிரச்னை வரும்னு சொல்ல முடியாதுடி.
சரி... கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லேன்,''''அக்கா.. இதுவும் டி.ஆர்.டி.ஏ., பத்திதான். சில வேலைக்கு, மொத்தம், மூணு கார் 'வாடகை' ஒப்பந்தத்துல ஓடிட்டு இருந்தது. அதுல ஒன்றை, அதிகாரியே வாங்கிட்டாராம்,''''வாங்கிட்டு, 'தமிழ்நாடு அரசு' னு உள்ளதை, அப்படியே வெச்சுட்டு ஓட்றாராம். யாரு கடிவாளம் போடறதுன்னு, கலெக்டர் ஆபீசில் ஒரு பட்டிமன்றமே நடக்குதாம்,'' என்றாள் மித்ரா.
''எதுவாக இருந்தாலும், 'கணக்கு' பார்த்து செலவு பண்ணனும். இல்லைன்னா, திருப்பதி 'வெங்கடேச'னே தண்டனை கொடுத்திடுவாரு,'' என்று கூறி சிரித்தாள் சித்ரா.அப்போது, சித்ராவின் அம்மா டீ கொடுத்தார். அதனை வாங்கி குடித்த மித்ரா, ''டி.ஆர்.ஓ., ஆபீசில் எப்பவும் கூட்டம் குறையறதே இல்லை,'' என்றாள்.''ஆமாம் நானும் பார்த்தேன், ஏன் இப்டிங்க்கா?'' என்றாள் மித்ரா.''புதுசா வந்த மூத்த அதிகாரி, தாசில்தார், துணை தாசில்தார்களை வரவழைச்சு; 'ரெக்கார்ட' ஆய்வு செஞ்சுதான், அறிக்கை வாங்கறாரு. முன்ன மாதிரி, 'போனில்' வாங்கறதில்லை. இதனால், ஜி.டி.பி., அன்னைக்கு, வர்ற, துணை தாசில்தார்கள் முழிமுழின்னு முழிக்கிறாங்களாம்,''''இப்படி, நேரம் பார்க்காம வேலை வாங்கறதால, 'ஜாலி'யா இருந்த அதிகாரிங்க இப்ப, ரொம்ப சிரமப்படறாங்க'' என்ற சித்ரா, டீயை குடித்து முடித்தாள்.
டேபிள் மீதிருந்த செய்தித்தாளை புரட்டிய மித்ரா, 'டாஸ்மாக்' பற்றிய செய்தியை படித்து விட்டு, ''அக்கா... வேலுார் எலக்ஷனை காரணம்காட்டி, மதுக்கடைகளில், வசூல் வேட்டை பலமா நடந்துச்சாம், தெரியுங்களா?''''இல்லையே... சொல்லு பார்ப்போம்,''''ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர், 'டாஸ்மாக்' கடைகளுக்கு சென்று, கடைக்கு தகுந்த மாதிரி, 10, 15 ஆயிரம் வசூல் போட்டு தள்ளினாங்களாம்.
அப்புறம் அந்த பணம் எலக்ஷனுக்கு போனதா, இல்லே அவங்க பாக்கெட்டுக்கு போனதான்னு, இதைப்பத்தி தெரிஞ்ச மத்த நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்,''''ஏண்டி... இது கூட தெரியாதா? அதெல்லாம், சிறப்பா, பங்கு பிரிச்சிருப்பாங்க,'' சிரித்த சித்ரா, ''அங்கே போதை வஸ்துவில் வசூல்னா, இங்கே மரம் வச்சதிலும், கொழுத்த வசூலாம்,''
''அப்படியா... யாருங்க்கா?''''கிராமங்களில், மரம் வளர்ப்பு திட்டம் செயல்படுதில்லையா? மரங்களின் வளர்ச்சி குறித்து அறிக்கை கொடுத்து, அடுத்து வரும் திட்டத்துக்கு நிதியும் வாங்கிக்கிறாங்க. ஆனா, லாபம் சம்பாதிக்க நினைக்கும் அதிகாரிகள், 'மே பிளவர்' மரக்கன்றை நட்டி, பணத்தை ஈஸியா சுருட்றாங்களாம்,''
''அடப்பாவிகளா.. கடைசியில, மரத்தையும் விட்டு வைக்கலையா?'' என, ஆதங்கப்பட்ட மித்ரா, ''நேஷனல் லெவலில், தோழர்கள் ஒற்றுமையா இருக்காங்க. ஆனா, உள்ளூரில் மொறைச்சுருக்காங்க,''''எப்படிடி உனக்கு தெரிஞ்சுது,''''அக்கா... காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செஞ்சதை கண்டிச்சு, லெப்ட் ரைட் கட்சியினர் ஒண்ணா சேர்ந்து, நாடு முழுவதும், போராட்டம் பண்ணாங்க.
ஆனா, திருப்பூரில் மட்டும், ரெண்டு பேரும் தனியாவர்த்தனம் வாசிச்சாங்க. இது தெரிஞ்ச உண்மையான சில 'காம்ரேட்'கள் வருத்தப்பட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.அப்போது, அறையில் இருந்த 'டிவி'யில், பருவமழை தொடர்பான செய்தி ஒளிபரப்பானது. அதைப்பார்த்த சித்ரா, ''இந்த வருஷமும், கேரளாவில் செம மழை போலிருக்கு,'' என்றாள்.''ஆமாங்க்கா.. வருஷா வருஷம், அவங்க மாட்டிக்கிறாங்க. வெள்ளத்தால், 'டல்'லான, லாட்டரி வியாபாரிகள், சிலர் தமிழ்நாட்டில் பல இடத்தில், ஆளை வைச்சு விக்கிறாங்களாம்,
''''ஓ...
அப்படியா?''''ஆமாங்க்கா, ஏற்கனவே 'டாலர் சிட்டி'யில், பல சமூக, சட்ட விரோத செயல்களின் கூடாரமாக மாறிவிட்ட நிலையில், தற்போது, லாட்டரி வியாபாரிகளை ஏரியா பிரிச்சு விக்க சொல்றாங்களாம்க்கா,''''அட.. கொடுமையே. இதையெல்லாம் கேட்க யாருமில்லையா?''என, அங்கலாய்க்க, ''மீதியும் கேளுங்க... வடக்கு பகுதியில், லாட்டரி விற்கிறவங்களை பிடிச்சு வந்து, ஏரியாவுக்குள்ள குறிப்பிட்ட சிலரை தவிர மத்தவங்க விக்க கூடாது என போலீஸ்காரங்க 'டீல்' பேசி, விக்கிறவங்களை பயமுறுத்த, எப்.ஐ.ஆர்., போடறதை பாலிஸியா வச்சுருக்காங்க,''''இது ரொம்ப ஓவர், மித்து. கமிஷனருக்கு இதெல்லாம் தெரியுமா?''''இல்லக்கா.. எல்லா தகவலையும் பில்டர் பண்ணித்தான் அவருக்கு சொல்றாங்களாம்,'' மித்ரா சலித்து கொண்டாள்.''அக்கா.. தாராபுரத்தில், ரெண்டு பேரோட அடாவடி ஜாஸ்தியா இருக்காம்,'' என்றாள் சித்ரா.
''ஏண்டி, அதைத்தான் போன வாரம் நாம பேசினோம். அந்தன்னைக்கே டிரான்ஸ்பர் செஞ்சுட்டாங்களே...''''அது இல்லைங்க்கா. இது லேடி ஸ்டேஷன் விவகாரம். ஏதாவது பெட்டிஷன் வந்தா, அங்கிருக்கிற ரெண்டு பேர், உடனே, வக்கீல்களுக்கு தகவல் சொல்லிடறாங்களாம். இவங்க ரெண்டுபேர்தான், ஸ்டேஷனில், செல்வாக்கு மிக்கவங்களாம்,'' என, மித்ரா சொல்லும்போதே, சித்ராவின் மொபைல் போன் ஒலித்தது.
'ஹாய்... ஆன்ட்டி, எப்படியிருக்கீங்க? சூப்பர்... நான் வீட்டுக்கு வந்துட்டு கூப்பிடறேன்,' என, போனை ஆப் செய்தாள். அறைக்குள் வந்த சித்ராவின் அம்மா, 'ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. இதோ வந்துடறேன்,' என்று கூறி கடைக்கு சென்றார்.
''ஏண்டி, மித்து வெள்ளகோவில் முனிசிபாலிட்டியில், ஒரு தம்பதியர் ஒண்ணா சேர்ந்து வசூலில் பின்னி எடுக்கறது உனக்கு தெரியுமா?'' என அரட்டை தொடர்ந்தது.''ம்...ஹூம்க்கா...''''பில் கலெக்டர் தன்னோட அதிகாரத்தை யூஸ் பண்ணி, அவரோட மனைவிக்கு ஒரு வேலையை அதே ஆபீசில் வாங்கி கொடுத்திட்டாராம்.

குடிநீர் இணைப்பு, வரி வசூல், என பலவற்றிலும், ரெண்டு பேரும் சேர்ந்து, 'செம' கலெக்ஷன் பண்றாங்களாம்,''''முனிசிபல் கமிஷனரிடம் புகார் தெரிவித்தும் பிரயோஜனமில்லை. தட்டிக்கேட்க யாருமில்லாத காரணத்தால், தம்பதியரின் ஆட்டம் வரவர அதிகமாயிடுச்சாம்,''அப்போது வீட்டுக்குள் வந்த தம்பதியினர், ''பாப்பாவுக்கு கல்யாணம் வெச்சிருக்கோம்.
இந்த பத்திரிகையை வாங்கிக்கோம்மா. அம்மா வந்தாங்கன்னா, முருகானந்தமும், அங்காளபரமேஸ்வரியும் வந்துட்டு போனதா சொல்லும்மா,'' என்றாள்.''இருங்க அங்கிள். காபி சாப்பிட்டு போலாம்,'' என சித்ரா சொல்ல, ''இல்லம்மா, நிறைய பக்கம் குடிச்சிட்டோம். வர்றோம்மா,'' என்றபடி இருவரும் கிளம்பினர்.உடனே, மித்ராவும், ''அக்கா... நானும் கிளம்பறேன். போய் நோட்ஸ் எழுதோணும்,'' என்றபடியே எழுந்தாள். ''அட.. இருடி. ஆண்டிபாளையம் வரை போகோணும். நான் டிராப் பண்றேன்,'' என, சொன்ன சித்ரா, வீட்டை பூட்டி விட்டு, ெஹல்மெட் அணிந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X